சட்டமன்றத்தை சினிமா மன்றமாக ஆக்கிவிட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

இரண்டு பேருமே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான் . இதில் பரம்பரை அரசியல் உதயநிதி. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் ஜோசப் விஜய்.இது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும்.

உதயநிதி ஸ்டாலின் பெரிய அளவில் படம் ஓடவில்லை .அதில் ஜெயிக்கவில்லை. விஜய் படம் ஓடியது, ஜெயித்தார். இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். ஆனால், இரண்டு பேருமே சினிமாவில் நடித்துவிட்டு தான் வந்திருக்கிறார்கள். இப்போது உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தை சினிமாவாக மாற்றிவிட்டார். சபாநாயகர் ஆக்ஷன் என்று சொன்னவுடன் பேசுகிறார். இப்படி நையாண்டித்தனமாகவும், நக்கலாகவும் இவருடைய பேச்சு இருந்து வருகிறது.

இருப்பினும், விஜய் தெளிவாகத்தான் ஊழல் சப்ஜெக்ட் பேசும் போதெல்லாம், இவர்கள் திசை மாற்றி, அவருடைய பேச்சில் சினிமா படத்தைக் கொண்டு வந்து விடுகிறார்கள். சட்டமன்றம் மக்களுக்கான மன்றம், இங்கே திமுக கட்சியினருக்கு மக்கள் முன்னாள் நேரடியாகவே நடிக்க தெரியும். சினிமாவில் தான் நடிக்கிறார்கள் என்று இவர்கள் சொன்னால், இவர்கள் நேரடியாகவே மக்களிடம் நடிப்பவர்கள். சீன் சொல்லிவிட்டால் போதும் ,இவர்களே ஆக்ஷன் செய்து விடுவார்கள். அந்த அளவுக்கு திறமைசாலிகள், அவர்களுடைய திறமையை குறைத்து மதிப்பிட முடியாது.

இப்படி இருக்கும் போது, பேசியே மக்களை எப்படி கவிழ்க்கலாம்? பேசிய எப்படி நாட்டை பிடிக்கலாம்? எல்லா வசனமும் கருவிலே கற்றுக் கொண்டு வந்தவர்களுக்கு, எல்லா நடிப்பும் கருவிலே கற்றுக் கொண்டு வந்தவர்களுக்கு, எப்படி கொள்ளையடிக்கலாம்? என்பதை கருவிலே கற்றுக் கொண்டு வந்தவர்களுக்கு, இது என்ன பெரிய விஷயமா? அதனால்! நாட்டில் ஒரு தீய சக்தியை எதிர்த்து அரசியல் செய்யும் போது, விஜய் உடைய சொந்த பிரச்சினைகள் முதல் அவருடைய அரசியல் வரை விமர்சனத்திற்கு உள்ளாக்கத் தான் பார்ப்பார்கள், இந்த திறமைசாலிகள்.

இவர்கள் ஒன்றே ஒன்று, வாய் வித்தையிலே, அரசியல் செய்பவர்கள். அதற்கு இந்த தொலைக்காட்சி மைக்கைகள், மக்களை ஏமாற்ற காட்டிக் கொண்டிருப்பார்கள். அதனால், மக்கள் இவர்களிடம் பட்டு தான் தேறியிருக்கிறார்கள் . என்னதான் இவர்கள் தோல்வி அடைந்து, மண்ணில் விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்று தான் பேசிக் கொண்டிருப்பார்கள், இதுதான் திமுக.

மேலும்,இவர்களை தூக்கி ஜெயிலில் போட்டாலும், தான் நிரபராதி என்று தான் பேசிக்கொண்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள். நீதிபதியே கூட கொஞ்சம் ஏமாந்தால், அவர்களை குழப்பி விடுவார்கள். அதனால், மக்களுக்கு, மக்கள் பணியில் எது முக்கியம்? என்பதை தேர்வு செய்து ,தமிழக முதல்வர் பேசிவிட்டு போவது தான் நல்லாட்சிக்கு அர்த்தம். இவர்களுடைய பேச்சுக்கு பதில் அளிக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு ஏற்ற ஒரு அடாவடி, ஒருவர் பேச வேண்டும்.

அதனால், உதயநிதி ஸ்டாலின் ஒரு டெம்மி பீஸ் ,அறிவாலயம் ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்ததை படித்து விட்டு, போய்க் கொண்டிருக்கிறார். எப்போது கருணாநிதி அரசியலுக்கு வந்தாரோ, பழ கருப்பையா சொன்னது போல், அப்போதே, கிரிமினல்கள் அரசியலுக்குள், உள்ளே வந்து விட்டார்கள். அதனால், தமிழ்நாட்டு மக்கள் இன்றுவரை அதன் பலனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் ஊழலை நியாயப்படுத்துவார்கள், கொள்ளையும் நியாயப்படுத்துவார்கள், அநியாய, அக்கிரமத்தையும் நியாயப்படுத்தி பேசுவார்கள்.

ஒரே வரியில் சொல்லப் போனால் ,மனசாட்சி இல்லாத ஒரு கூட்டம், எப்படியும் பேசும். இது அரசியல் புரிந்தவர்களுக்கு புரியும். புரியாதவர்களை இவர்கள் ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்.எனவே,திமுக அதிமுகவுக்கு மாற்றான ஒரு சக்தியாக தமிழக வெற்றி கழகம் இருக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *