
தமிழக முதல்வர் விஜய் பொறுப்பேற்று 40 நாட்களுக்கு மேலாகி உள்ள நிலையில், மக்களிடம் 50 சதவீத நன்மதிப்பு இடத்தை பெற்றுள்ளார்.

அதாவது ஜோசப் விஜய் ஆட்சியில் ஒரு பக்கம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்கிறது என்றாலும் , நடவடிக்கைகள் துரிதப் படுத்தப்படுகிறது.

அடுத்தது ,டென்டர்கள் அனைத்தும் இ – டெண்டர்களாக (e – tenders ) முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது . அதாவது வெளிப் படத் தன்மை கொண்ட ஒப்பந்தங்கள் அரசு நிர்வாகத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், மக்களாட்சியில் மக்களை மதிக்கக் கூடிய வகையில், அமைச்சர்கள் , மற்றும் அவர்களுடைய பி.ஏ க்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் மற்றும் இ – மெயில்கள் மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இது அத்தனையும், மக்களுக்காக மக்களுக்கான ஆட்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும்,இது திமுக, அதிமுக ஆட்சியில் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று.
தவிர,திமுக ,அதிமுகவுக்கு மாற்று சக்தியாக தமிழக வெற்றிக்கழகம் இருக்கிறது என்பதை நிரூபிக்கவே இது போன்ற விதிமுறைகள், அரசு நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், ஆங்காங்கே பத்திரப்பதிவுத் துறையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்து பல லட்சங்களை கைப்பற்றினாலும், இன்னும் அந்தத் துறையில் உள்ள அதிகாரிகள், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், திருந்தாமலே தான் இருக்கிறார்கள். சொல்லப் போனால், பழைய திமுக ஆட்சி போலவே இருக்கிறார்கள்.

தவிர,விருப்பப்பட்டு கொடுப்பது வேறு, ஆனால், விருப்பப் படாமலே இவ்வளவு தொகை கொடுத்தால் தான், என்ற கண்டிஷன் போடுவது வேறு, இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.அது இந்த இரண்டு துறையிலும், இன்னும் மாறாமலே தான் தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.

மேலும், கல்வித்துறை, மருத்துவத்துறை திமுக, அதிமுக ஆட்சியில் வியாபாரமாக்கப் பட்டுள்ளது. அது மக்களின் (ஏழை எளிய நடுத்தர மக்களின்) நலன் சார்ந்த துறையாக, மாற்ற திட்டங்கள் வகுத்து, அவசியம் மாற்றப்பட வேண்டிய துறைகளில் அதுவும் ஒன்று. அதே போல்,
அதேபோல், காவல்துறை இன்னும் திமுக ஆட்சியில் எப்படி இருந்தார்களோ, இன்னும் அவர்கள் மாறவில்லை. மாற்றம் காவல்துறையில் அதிகம் தேவை. அதனால் தான், சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்கிறது.

திமுக ஆட்சியில் வன்னியர் சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டில் அரசியல் செய்திருப்பது வெட்ட வெளிச்சமான உண்மை. அதை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அவர்களுக்கான இட ஒதுக்கீடு சரி செய்யப்பட வேண்டும். தவிர, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தான், இட ஒதுக்கீடு என்றால் !எல்லா இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வேண்டும். இதுவும் ,விஜய் ஆட்சியில் மைனஸ்.

மக்கள் பிரச்சனைகள், நிர்வாக சீர்கேடுகள், எல்லாம் ஒரே நாளில் சரி செய்ய முடியாது என்பது மக்களுக்கும் தெரிந்த ஒன்றுதான் அதை படிப் படியாக குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பதை பார்க்கும்போது, உண்மையிலேயே இது ஒரு நல்ல நிர்வாகமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மேலும்,எதிர்க்கட்சிகள் இதைப்பற்றி தொடர்ந்து விமர்சனங்களை அள்ளி வீசினாலும், அதற்கு உடனே பதில் கொடுக்காமல், நிதானமாக செயல்பட்டு வருகிறார்கள். இது தவிர, தமிழக வெற்றி கழகம், இந்து கோயில்களின் பாரம்பரிய முறைப்படி அந்தந்த கோயில்களில் என்னென்ன ,வழக்கமோ அதை பின்பற்ற வேண்டும்.

மேலும், இந்து கோயில்களில் திமுக ஆட்சியில் ,நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதிக்காமல், ஒவ்வொன்றுக்கும் மேல்முறையீடு, செய்து கொண்டு பக்தர்களின் காணிக்கையை வீணடித்துக் கொண்டிருந்தார்கள். அதுபோல் இல்லாமல், நீதிமன்ற தீர்ப்புகளை மதித்து, அதற்கான தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

அது செய்யாமல் ,திமுக ஆட்சியைப் போல், மீண்டும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது குறித்து நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை மதிக்காமல், திமுக ஆட்சியில் நடப்பது போல, இங்கும் நடத்துவது தவறான ஒன்று. அது விஜய் ஆட்சியில், பிளஸ் அண்ட் மைனஸ் (+&-)இருக்கத்தான் செய்கிறது.

மேலும், அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் 2000 கோடி மதிப்புள்ள சதுப்பு நில ரிசர்வ் பாரஸ்ட் மோசடி குறித்து, நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை மதித்து ,அதற்கான அனைத்து கட்டிட உரிமை சான்றுகளை ரத்து செய்து, அரசு நிலத்தை மீட்டு உள்ளது வரவேற்க வேண்டிய ஒன்று.

அதேபோல், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட, பரந்தூர் விமான நிலையம் ,அப்பகுதியில் அமைவதை தடுத்து, விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று . மேலும்,

இது இன்னும் மைனஸ் ஆக குறைக்கப்பட்டு, பிளஸ் அதிக படித்ததினால் தான் ,ஆட்சிக்கு மக்களிடத்தில் நற் பெயரைப் பெற முடியும். இது தவிர,

பத்திரிகை துறையில்! திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த தவறுகளை எல்லாம் தொடர்வது ,மேலும் ,அதே தவறுகளை சரி செய்யாமல், பத்திரிகைகளுக்கான முக்கியத்துவத்தை கொடுக்காமல் இருப்பது, அதுவும் ஒரு மைனஸ் தான்.

எனவே, தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில்! இன்னும் நூறு சதவீதம் மார்க் எடுக்க உழைக்க வேண்டும். அது மட்டுமல்ல, திமுக ஆட்சியில்!அந்தந்த துறை அமைச்சர்கள், என்னென்ன குளறுபடிகள், என்னென்ன ஊழல்கள் ?என்னென்ன தவறுகள்?
இதை அத்தனையும் ஆய்வு மேற்கொண்டு, அதற்கான தீர்வை கொண்டு வருவது தான், மக்களிடத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சிக்கான மாற்றத்தின் முழு வெற்றியாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
