சேஷாத்திரி சுவாமிகளின் அனுகிரகம் எளிதில் கிடைத்து விடுமா?

ஆன்மீகம் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சேஷாத்திரி சுவாமிகளின் அனுக்கிரகம் அவரை பின் தொடர்ந்து செல்லும் போது தான், அந்த அனுகிரகம் படிப்படியாக நம்மை பாதுகாத்துக் கொள்ளும். வாழ வைக்கும், நாம் நினைத்ததற்கு மேலாக கொடுத்து அழகு பார்க்கும்.

மேலும்,சேஷாத்திரி பிராமணர் சமூகத்தில் பிறந்தாலும் ,அவருடைய நடவடிக்கைகள் எதுவுமே பிராமணர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவில் அப்போதும் இருந்ததில்லை. இப்போதும் இருந்ததில்லை. ஏனென்றால் அவருடைய உருவம் அப்படி இருந்தது.

அந்த காலத்தில் இவர் வாழும்போது பிராமணர்களின் ஆதிக்கமும் ,அவர்களுடைய ஆச்சார ,அனுஷ்டானமும், எதுவுமே சேஷாத்திரி கடைபிடித்ததில்லை. ஆனால், அவருக்கு தான் இந்த ஞானம் பிறவியிலே அமைந்தது. அவர் எந்த சந்தியாவதனமும் செய்ததில்லை. வேத பாடசாலைக்கு சென்று வேதங்களை கற்றுக் கொண்டது இல்லை.

ஆனால், அவருக்கு எப்படி பிறவியில் காமாட்சியின் அனுக்கிரகத்தால், மகானாகவே பிறந்தார். மகானாகவே வளர்ந்தார், வாழ்ந்தார். வாழும் பருவத்தில் அவருடைய வாழ்க்கை, இறைவனோடவே, விளையாடக்கூடிய அந்த வாழ்க்கை யாருக்கு கிடைக்கும்?

அவர் வாழ்ந்த வழுவூர் கிராமத்திலே இருக்கக்கூடிய தாமரைக் குலத்திலே கிருஷ்ணனோட விளையாடிய அந்த விளையாட்டு யாருக்கு கிடைக்கும்?அப்படி என்றால்,

அவர் ஒரு அவதாரப் புருஷர். அவர்களிடம் தான் இறைவன் பேசுவான், இறைவன் விளையாடுவான், அப்படிப்பட்ட ஒரு மகா பரம்பொருள், எதற்காக பிறவி எடுக்கிறது?

மக்களை காப்பாற்றுவதற்கும் மக்களை ஆன்மீக அருளை பெறுவதற்கும், பிறவி எடுப்பவர்கள். அவர்களால்தான், இந்த உலகத்தை நல்வழிப்படுத்த முடியும். அவர்களால் தான் பிறவி கர்மாக்களை அழிக்க முடியும். அவர்களால்தான் பிறவிப் பயனை அடைய முடியும்.

மேலும், இதை எழுதுவதற்கும், அவருடைய அருள் இல்லாமல், இதை எழுத முடியாது. அவர் விரும்பாமல் இதை செய்ய முடியாது. அதுதான் சேஷாத்ரி. அது மட்டுமல்ல, அவரை நம்பி, நம்மை ஒப்படைத்தால், அவர் நிச்சயம் கரை சேற்றி விடுவார் .

மேலும், அவர் வாழும்போது வெட்டியானுடைய துணியை வாங்கி கட்டிக் கொள்வார். வெட்டியான் கொண்டு வந்த சாப்பாடு ,சாப்பிடுவார். இவையெல்லாம் அன்றைய காலகட்டத்தில், இருந்த பிராமண சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா? இதுதான் சேஷாத்திரி .

இன்று சேஷாத்ரியை மற்ற சமூகங்கள் பிராமணர் என்று நினைத்துக் கொண்டிருந்தாலும், அவர் பிராமணராக வாழ வில்லை. அந்த பிராமண ஆச்சார்ய அனுஷ்டானங்களுக்கு, எதிராகவே வாழ்ந்தார் . இதை அவர்கள் மறைத்தாலும், உண்மையை மறைக்க முடியாது.

இது ஏன்? சொல்ல வருகிறேன் என்றால், மகான்களுக்கு ஜாதி, மதம், எதுவுமே கிடையாது. இதற்குள் இருப்பவர்கள் மகன்களை நெருங்க முடியாது. அவர்களுடைய கருணை கிடைத்தாலே, நம் வாழ்வில் வெற்றி பெற முடியும். நம்முடைய பிறவி கர்மாக்களுக்கும் ,நாம் செய்த கர்மாக்களுக்கும் ஏற்றவாறு தான் கிரகங்கள் அமையும். அதுதான் ஒருவருடைய ஜாதகம்.மேலும்,

அந்த கிரகங்களை நமக்காக ,அவர்கள் இவன் எனக்கு வேண்டியவன், அதனால் ,அவனை அதிகம் தொந்தரவு செய்யாதே, அவனுக்கு நல்லதே செய். அவனை உயர்த்து ,அவனுக்கு சகல செல்வங்களும் கொடு ,என்று உத்தரவு போடுவார்கள். அந்த இடத்தில் மகான்கள்.

இதுதான் மகான்களுக்கும் ,சித்தர்களுக்கும் உள்ளது வித்தியாசம். எல்லோரும் பிரபஞ்சத்தோடு தொடர்பில் இருப்பார்கள். ஆனால், அவர்கள் சொல்வதை பிரபஞ்சம் கேட்க வேண்டுமே! யார் சொன்னால் கேட்கும்? மகன்கள் சொன்னால் கண்டிப்பாக கேட்டே ஆக வேண்டும். மகான்கள் சொன்னால் ,கிரகங்கள் கேட்டே ஆக வேண்டும். இதுதான் சேஷாத்ரி மகானின் அற்புதம்.

இது அவரை நோக்கி யாரெல்லாம் பயணிக்கிறார்களோ ,யாரெல்லாம் உண்மையான பக்தியை அவரிடம் வைக்கிறார்களோ, யாரெல்லாம் அவரை சரணாகதி அடைகிறார்களோ ,அவர்களுக்கு சேஷாத்திரி நிச்சயம் அனுகிரகம் செய்து காப்பாற்றுவார் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

சமீபத்தில் கூட அவருடைய கோயிலில் சாமிக்கு கைங்கரியம் செய்யக்கூடிய ஒருவருக்கு பைக்கில் செல்லும்போது காலில் அடிபட்டுள்ளது. அது சிறிய அடியாக குறைத்து ,அவரைக் காப்பாற்றி இருக்கிறார். இதுதான் சேஷாத்திரி.

அவரை வணங்குவதற்கும், அவரை நினைப்பதற்கும், அவர் நினைத்தால் தான் முடியுமே தவிர ,நீ நினைத்தால் நடக்காது. நீ நினைத்தால் அவரிடத்திற்கு போக முடியாது. அவர் நினைத்தால் தான் நீ போக முடியும். அதுதான் சேஷாத்திரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *