கலைமகள் தந்த பிள்ளைகளை, ஒருவரை விட்டு, ஒருவர் பிரிய கூடாது என்று! அவளே அழைத்து விட்டாலா?

அரசியல் ஆன்மீகம் உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

நடிகர் பாக்யராஜ் மற்றும் அவருடைய மனைவி பூர்ணிமா பாக்யராஜுடன் கோவாவில் நடைபெற்ற குஷ்புவின் மகள், திருமணத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பியதும் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

உடனே தனியார் மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய், அவருக்கு இரங்கல் தெரிவித்து அரசு மரியாதை உடன் உடல் அடக்கம் செய்ய அறிவித்துள்ளார்.மேலும்,

கலைத்துறையில் கலைமகள் தந்த பாரதிராஜா, பாக்யராஜ் இருவருமே பிரிந்திருக்கக் கூடாது என்று தன் பிள்ளைகளை 17 நாட்கள் இடைவெளிக்குள், ஒருவர் பின் ,ஒருவராக இறந்தது, கலைத் துறைக்கு ஒரு சோகமான நிகழ்ச்சி .

மேலும்,இந்த இருவரால் சினிமா துறையில்,எத்தனையோ நடிகர்கள், கலைஞர்கள், கலை தொழிலாளர்கள், பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை கொடுத்து இருப்பார்கள். இவர்களால் முன்னுக்கு வந்த பல நடிகர்கள், நடிகைகள் ,சினிமா துறையில் தங்களுக்கான ஒரு முத்திரையை பதித்தவர்கள்.

இந்த இரு படைப்பாளிகளும் ,மக்கள் மனதை கவர்ந்தவர்கள். கலைஞர்கள் அழிந்தாலும், அவர்களுடைய கலைப் படைப்பு என்றுமே அழிவதில்லை. கலைஞன் கலைக்காகவே பிறக்கிறான், கலைக்காகவே வாழ்கிறான், கலைக்காகவே சாகிறான். ஆனால், அவனுடைய படைப்புகள் என்றும் அழிவதில்லை. அது பல தலை முறைகளைக் கடந்து ,அந்த கலை படைப்புகள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதுதான் கலைஞன். அதுதான் பாரதிராஜா, பாக்யராஜ்.

அவர்கள் இறந்தாலும், அவர்களுடைய படைப்புகள் இறப்பதில்லை .அவை மனித சமுதாயத்துடன் ,மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கலைஞர்கள் என்றும் அழிவதில்லை….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *