
தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்து வரும் வன்னியரசு, வந்தே மாதரம் என்ற பாடல் மூலம் நாட்டில் மதவெறுப்பு அரசியலை பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக இவருடைய குற்றச்சாட்டு .
மேலும், மத்திய அரசு நிகழ்ச்சிகளில், தேசிய கீதத்திற்கு முன், வந்தே மாதரம் என்ற பாடலை பாடப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள வன்னியரசு, வந்தே மாதரம் என்பது சுதந்திர தியாகிகளின் போராட்டத்தில் வெளிவந்த பாடல், அதை பாடுவதால் தியாகிகளை இந்த நாட்டு மக்கள் மறக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக தான், மத்திய அரசு இந்த பாடலுக்கு தேசிய கீதத்திற்கு முன் பாட உத்தரவிட்டுள்ளது.

இதில் என்ன மதவெறுப்பு அரசியல்? நீ மத எதிர்ப்பு அரசியல் என்று சொன்னால் பைத்தியக்கார முட்டாள்களா பத்திரிகைகள்? அப்படியே மதவெறுப்பு அரசியல் என்று எழுதிக் கொண்டிருக்க? அர்த்தம் அல்லது அதற்கான சான்று நிரூபிக்க முடியுமா?
இந்தப் பாடல் நீயும் உன் காலத்தில் பள்ளிக்கூடத்தில் படித்திருப்பாய் அல்லது பாடியிருப்பாய். அதனால் இது எப்படி மதவெறி அரசியல் ஆகிவிடும்? மேலும் ,நீ அமைச்சராக இருப்பதனால், நீ சொல்வதெல்லாம் வேதவாக்கு என்று மக்கள் எடுத்துக் கொள்ள முடியுமா ?
ஆனால்,கூலிக்கு மாரடிக்கும் பத்திரிகைகள் வேண்டுமானால், நீ சொல்வதை எழுதிக் கொண்டிருப்பார்கள் .மக்களுக்கான பத்திரிகைகள் என்றால்! அதை எழுத முடியாது.

அந்தப் பாடலே ஒரு அர்த்தமுள்ள பாடல். ஆங்கிலேயர்களை எதிர்க்கும் போது, சுதந்திர தியாகிகள் அவர்களுடைய உள்ளார்ந்த நெஞ்சில் இருந்து வெளிவந்த, எதிர்ப்பு வேகத்தின் ஒரு குரல் தான் வந்தே மாதரம்! இது போதுமா? இன்னும் வேண்டுமா? விளக்கம். ….?
