எல் .நினோ ஏற்படுத்தும் சூரியக் கதிர் வீச்சு! புவியின் மேற் பரப்பில் அதிக வெப்ப மண்டலத்தை உருவாக்கி இருப்பதால்! இதை தடுக்க அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு பயனளிக்குமா ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

உலக நாடுகளுக்கே இன்று வெப்பத்தின் தாக்கம் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு பல்வேறு நாடுகளில் பூமியின் மீது விழுகின்ற எல் .நினோ என்ற சூரிய கதிர்வீச்சுகள் ,புவியின் வெப்ப மண்டலத்தை அதிகரித்துள்ளது.இதனால்

மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல், பல நாடுகளில் உயிரிழப்புக்களும், வேலைக்கு வெளியில் சென்று வருவதற்கு போராட்டமாக இருந்து வருகிறது. மக்கள் இதன் தாக்கம் குறையாமல் அதிகரிப்பது எதனால்? என்று கூட புரியாமல் பேசிக்கொண்டு வாழ்க்கையை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால்

இதற்கு இயற்கை வளங்கள் குறைந்திருப்பது தான், முக்கிய காரணம். ஆனால், அமெரிக்க விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்? என்றால், பசுபிக் பெருங்கடலின் மேற்பகுதியில், எல். நினோ என்ற கதிர்வீச்சுகளை தடுக்க, சேர்க்கை முறையில் மேகத்தை உருவாக்கி ,அந்த சூரியக்கதிர்வீச்சுகள் பூமியின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தாமல் தடுக்க முடியும் என்று தெரிவித் திருக்கிறார்கள்.

ஆனால், இது நிரந்தர தீர்வாகுமா? மேலும்,இதற்கான செலவு ஒவ்வொரு நாட்டுக்கும், எவ்வளவு ?என்று கணக்கிட முடியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் இதே போல், கடும் வறட்சி ஏற்பட்டபோது, அப்போது செயற்க்கை மேகங்கள் மூலம் மழை வர வைக்கலாம் என்று தெரிவித்து அதற்காக பல கோடிகள் செலவு செய்து பார்த்து, மழை பெரிய அளவில் வரவழைக்க முடியாது போனது தான், கடந்த கால உண்மை.

மேலும்,மழை மேகங்கள் உருவாகும் போது, அதன் மீது சில்வர் ஆக்சைட் ஹெலிகாப்டர் மூலம் தூவி, அதை மழையாக பொழிய வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது .அந்த திட்டமும் தோல்வியில் தான் முடிந்தது.

அதே போல், இப்போது அமெரிக்க விஞ்ஞானிகள், செயற்க்கை முறையில் மேகங்களை உருவாக்கி, அதன் மூலம் சூரிய கதிர்வீச்சு வெப்பத்தை தடுக்க முடியும் என்பது அந்த திட்டம் . மேலும்,

அது எந்த அளவுக்கு பயனளிக்கும்? என்பது அது செயல்பாட்டுக்கு பின் தான் தெரியவரும் . இந்த திட்டம் வெற்றியடைந்தால், எல்லா நாடுகளும் அதை பின்பற்றுவார்கள் .அதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லை. மேலும்,இந்த திட்டம் வெற்றியாகுமா? அல்லது தோல்வியாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *