காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்ந்து, இரு மாநிலங்கள் இடையே ,இது அரசியலாக்கும் நோக்கம் என்ன? காவிரி நதிநீர் மேலாண்மையின் சட்ட திட்டங்களை, இரு மாநிலங்களும் மதிக்கிறார்களா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி மோட்டார் உலகம் ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

காவிரி நதி நீர் பிரச்சனை கர்நாடகாவும், தமிழ்நாடும் இதை ஒரு அரசியல் பிரச்சினையாக ,அவ்வப்பது செய்து வருவது, காவிரி நதிநீர் மேலாண்மை சட்டத்தை மதிக்காமல் செயல்படுவது முக்கிய காரணம் .

மேலும்,அதே போல் கர்நாடக அரசு காவிரி நதிநீர் மேலாண்மையின் சட்ட திட்டங்களை மதிக்காமல்,உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை கர்நாடகா மதிக்காமல், செயல்படுவது இந்தியாவின் சட்டத்திற்கு விடப்படும் சவால்கள்.

இது இரண்டுமே தவறான கருத்துக்களை, அரசியல் மோதலாக தான் இருந்து வருகிறது. இதில் டெல்டா விவசாயிகள் ஒரு பக்கம் இதை நம்பி விவசாயம் செய்து வருவதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அரசியல் கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்கிறது.

மேலும், இந்த சூழ்நிலையில், கர்நாடக அரசு! சட்டத்தை மதிக்கிறதா? இல்லையா? என்பதை உச்சநீதிமன்றமும், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். தவிர, இதில்,தேவையில்லாமல், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் ,ஆளுக்கு ஒரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,எங்கு யாருக்கு என்ன அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ , அதை தான் அங்கு நிறைவேற்ற முடியும். நதிநீர் பிரச்சனையில் கர்நாடக அரசு தன்னிச்சையான முடிவை எடுக்க முடியாது. அது மட்டுமல்ல, மேகதாது அணையை கட்டுவது ,இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

அப்படி கட்டினாலும், அதை உச்ச நீதிமன்றம் உடைத்தெறியும் போது, கர்நாடகாவிற்கு அதனுடைய வலியை ஏற்றுக் கொண்டு தான் வேண்டும். மேலும்,இரு மாநிலங்களுக்கிடையே ஆன நதிநீர் பிரச்சனையில் ,நதிநீர் மேலாண்மை ஆணையம் மூலம் என்னென்ன வழிகாட்டுதல்கள் ,இரு மாநிலங்களுக்கிடையே சட்டத்தின் மூலம் வடிவம் ஏற்படுத்தப்பட்டுள்ளதோ ,அதை கடைபிடிக்க வேண்டிய கடமை கர்நாடக அரசுக்கு உள்ளது.

இதில் மீண்டும் அரசியல் தலையீடு என்பது சட்டத்திற்கு எதிரான ஒன்று. அதனால் கர்நாடகா அரசு தங்களுடைய தவறை உணர்ந்து சரி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் தமிழக அரசு நதிநீர் மேலாண்மையின் சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும் .இங்கே சட்டத்தின் மூலமே இதை சரி செய்ய வேண்டிய பிரச்சனை இதில் அரசியல் அதிகாரம் என்பது இருட்டடிப்பு வேலையாக தான் தொடர்ந்து கர்நாடக அரசு செய்து வருகிறது.

இதை சரி செய்ய வேண்டுமென்றால் கர்நாடகாவினுடைய மேகதாது அணையின் பராமரிப்பு ,அந்த மாநிலத்தின் அதிகாரிகளோ, தமிழ்நாட்டு மாநிலத்தின் அதிகாரிகளோ ,இல்லாமல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய ஒரு ஐஏஎஸ் அதிகாரி இரண்டு மாநிலங்களுக்கும் இடையே ஒரு பொதுவான நிர்வாகத்தை அவர் மூலம் எடுத்த ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் இப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *