தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திமுக,அதிமுகவுக்கு மாற்றாக ஊழலற்ற ஆட்சியை தருவதாக பேச்சு!அதை நிறைவேற்ற முடியுமா ? – ஆசிரியர்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்றாக அவர்களுடைய கடந்த கால ஆட்சிகள், தற்போது ஸ்டாலின் ஆட்சி, தமிழக மக்களுக்கு ஒரு ஊழல்கள் நிறைந்த ஆட்சி தான், அதில் ஒன்றும் மற்ற கருத்து இல்லை . இதை விஜய்யால் மாற்றம் கொடுக்க முடியுமா? இதுதான் அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

இருப்பினும், அவர் உடனே முடியவில்லை என்றாலும் ,அதற்கான படிப்படியான மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று தெரிவிக்கிறார்.மேலும்,அது படிப்படியாகத்தான் கொண்டு வர முடியும் .ஒரே அடியாக, ஒரே நேரத்தில் ஒழிக்க முடியாது. ஒத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.

ஆனால், உங்களுடைய கட்சியினர் அதற்கு தகுதியானவர்களா? அதுதான், இங்கே கேள்வி? எவ்வளவு பேர் உங்கள் கட்சியினர் தகுதியானவர்கள்? உங்களுடன் இருப்பவர்களில் எத்தனை பேர் ஊழல் அற்ற பேர் வழிகள்?

மேலும், விஜய்யின் தவெக ,அரசியல் கட்சியில் இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகளான ஆதார் அர்ஜுனா ,,புசி ஆனாந், தற்போதைய செங்கோட்டையன், இவர்களே அதற்கு தகுதி இல்லாதவர்கள். இது தவிர,ஆதல் அர்ஜுனா கள்ள லாட்டரி வியாபாரி,புசி ஆனந்த்,சாராய வியாபாரி, செங்கோட்டையன் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்.

மேலும், இவருடைய கட்சியின் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, வட்ட ,கிளை நிர்வாகிகள், இதில் எவ்வளவு பேர் அதற்கு தகுதியானவர்கள்? தவிர,

எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி, மக்களாட்சி !இதை தான் பேசுவார்.ஆனால், ஊழலை ஒழிப்பேன் என்று பேசி வரவில்லை. இருப்பினும், விஜய் சொல்வதை வரவேற்க வேண்டிய ஒன்று.

மேலும்,ஊழலை ஒழித்தால், நாட்டில் சிறப்பான ஆட்சி மக்களுக்கு கொடுக்க முடியும்.தவிர, நாட்டில் நேர்மையான ஆட்சி கொடுக்க முடியும். ஆனால், ஊழலை வளர்ப்பதற்கே நாட்டில் பத்து கட்சிகளுக்கு மேல் இருக்கிறது. இவையெல்லாம் எதிர்த்து எப்படி ஊழலை ஒழிக்க முடியும்? ஊழலை ஒழிப்பதற்கு முதல், அரசியல் கட்சியினரின் சொத்து, பதவிக்கு வரும் முன், பதவிக்கு வந்த பின், நேர்மையான சொத்து பட்டியல் கொடுக்க முடியுமா?

மேலும், காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய விஜய் காங்கிரஸ் கட்சி எப்படிப்பட்ட ஊழல் கட்சி என்பதாவது தெரியுமா? தவிர, தமிழ்நாட்டில் இருக்கிற விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம், அம்பேத்கர் இயக்கங்கள், சீமான், தேமுதிக,பாமக, அமமுக, மதிமுக, இருக்கிற ஒரு கட்சி கூட ,நாட்டில் தகுதி உள்ள கட்சிகள் இல்லை. மேலும்,

கட்டப்பஞ்சாயத்து கட்சிகள் , ஊழலுக்கு ஆதரவான கட்சிகள் தான் இருக்கிறது. இவர்களோடு இவர்கள் போராட முடியுமா? போராடக் கூடியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? மேலும்,

ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்களே முதல் குற்றவாளி என்பதாவது தெரியுமா? இப்படி ஆரம்பமே ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்கள் முதல், ஊரில் உள்ள பல அரசியல் கட்சிகள் வரை ,அரசியல் என்பது மக்களுக்கு இல்லை என்று தீர்மானித்து, ஊழல் செய்து கொண்டிருக்கிறார்கள் .

இதையெல்லாம் விஜ்யால் தடுத்து நிறுத்த முடியுமா? இது தமிழ் நாட்டில், மிகப்பெரிய சவால்கள்! மேலும், தமிழ்நாட்டில் ஊழலை ஒழிப்பது சாதாரண காரியம் அல்ல. வாயில் சொல்வதையெல்லாம் செயலில் நிறைவேற்ற முடியுமா? அதற்கு விஜய் மட்டும் பேசினால் போதுமா? விஜய்க்கு ஆதங்கம் இருக்கிறது. நாட்டில் ஊழல் ஒழிக்கலாம். ஆனால், எங்க தொட்டாலும், ஊழல்வாதிகள் தான் இன்று ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

மேலும்,எம்ஜிஆர் ,ஊழல் செய்து சொத்து சம்பாதிக்கவில்லை. ஜெயலலிதா ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார்.ஆரம்பத்தில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளிலும், சாமானிய மக்கள் தான் இருந்தார்கள்.

ஆனால், தற்போது இரண்டு கட்சிகளில் இருப்பவர்கள் தான் அத்தனை பேரும் இன்று கோடீஸ்வரர்கள். எப்படி சம்பாதித்தார்கள்? எல்லாம் ஊழல் தான்.

எனவே,அந்த நிலைமைதான் விஜய்க்கும் இருக்கிறது. தவிர, உங்கள் கட்சியினர் அதற்கு தகுதியானவர்களா? அவர்களுடைய நேர்மைக்கு என்ன உத்தரவாதம்? இல்லை ,நீங்கள் அதற்கு என்ன உத்தரவாதம் தரப் போகிறீர்கள்? அதில் தான் அடங்கி இருக்கிறது விஜயின் ஊழல் ஒழிப்பு .

மேலும், ஊழலை பற்றி விஜய் பேசுவதால் அர்த்தம் இல்லை. எப்படி ஒழிக்க போகிறீர்கள்? அதற்கான விளக்கத்தை கொடுங்கள். பிறகு பார்க்கலாம்.தவிர,

முதலில் இலவசமே ஊழல் தான்.,எதற்காக இலவசம்?இலவசம் யாருக்கு கொடுக்கலாம்? எதையெல்லாம் மக்களுக்கு இலவசம் கொடுக்க வேண்டும்?

மேலும்,விஜயின் அரசியல் கட்சியினர், மற்ற ஊழல் அரசியல் கட்சிகளுக்கு எதிரானவர்கள் என்பதற்கான செயல்பாடுகள் ?அதற்கான ஆதாரங்கள்? முதலில் விஜய்யால் கொடுக்க முடியுமா? தவிர,எந்த, எந்த ஊரில் ? எந்த, எந்த, நகரில்,இவர்கள் கட்சியினர் ஊழளுக்கு எதிராக போராடுகிறார்கள் ?என்பது தெரியவில்லை.

அப்படி ஊருக்கு எத்தனை பேர் இருக்கிறார்கள்? நகரில் எவ்வளவு பேர்?என்பது பற்றிய பட்டியல் முதலில் வெளியிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *