
எம்ஜிஆர் தனது ரசிகர்களை வைத்து எப்படி அரசியலுக்கு வந்தாரோ, அதை பின்பற்றி விஜய் அரசியலுக்கு வந்தார். அதே பணியில் நடிகர் தனுஷ் தனது ரசிகர்களை வைத்து அரசியலுக்கு வர முடிவு செய்துள்ளார் என்பது அரசியல் வட்டார தகவல்.
மேலும்,இப்போது தனுஷ் அரசியலுக்கு வந்து விட்டால், ஒருவேளை தனுஷ் மற்றும் விஜய் போட்டியாக தான் இருக்குமா? அல்லது அரசியல் அதிகார கனவில் இருக்கின்ற அரசியல் கட்சியினர், தனக்கு போட்டியாக இன்னொரு அரசியல் கட்சி வரும்போதே அவர்களுக்கு ஒரு வயிற்றெரிச்சல் இருக்கத்தான் செய்யும்.

மேலும் ,இதை காலம் தான் தீர்மானிக்கிறது. அதிமுக, திமுகவில் இருப்பவர்கள் வயதாகிவிட்டது நாம் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களா? இல்லை. இன்னும் மக்களை ஏமாற்ற வயதான காலத்திலும், எத்தனை கோடி கொள்ளை அடிக்கலாம்? என்று தான் ஆசைப்படுகிறார்கள்.
அந்த வகையில் தமிழகத்தில் கடவுள் ஒருவேளை, இந்த அரசியல் கட்சிகள் தகுதியற்றவர்களாக இருப்பதால் ,நடிகர்களையே அரசியலுக்கு தகுதியானவர்களாக அனுப்பி வைக்கிறாரா?

மேலும் ,மக்கள் நடிக்க ஆரம்பித்து விட்டதால் ,ஒருவேளை நடிகர்களையே அவர்கள் தேர்வு செய்கிறார்களா? அது மட்டுமல்ல,அக்காலத்து மக்களுக்கு நடிக்க தெரியாது. அது ஒரு ஏமாந்த மக்கள். இப்போது ஏமாற்ற தான் தெரிகிறது. ஒரு செல்போனை வைத்துக் கொண்டு ,எப்படி ஏமாற்றலாம்? அப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள்.

மேலும்,வாழ்க்கை என்பது பிறரை ஏமாற்றி வாழ்வதால் ,அந்த வாழ்க்கையில் எந்த சந்தோஷமும் இருக்காது. இதுவரையில் இந்த அரசியல் கட்சிகள் ஜாதி கட்சிகளாக இருக்கட்டும் அல்லது அரசியல் கட்சிகளாக இருக்கட்டும், தன்னுடைய கட்சியினர் மற்றும் நம் குடும்பம் இப்படிதான் இந்த அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் இருந்திருக்கிறதே ஒழிய , வாக்களித்த மக்களை மறந்து விட்டார்கள்.

அதனால்,இப்போது வாக்காளர்கள் தான் எஜமானர்களாக இருக்கப் போகிறார்கள். இனி வரும் காலத்தில் அரசியல் என்பது கடுமையான போட்டியாக தான் இருக்க போகிறது. இதில் பல அரசியல் கட்சிகள் காணாமல், போவதற்கு வாய்ப்பு உண்டு.

மேலும்,சேவை என்பது தனக்கு மட்டுமே என்று நினைத்துக் கொண்ட அரசியல் கட்சிகள் ,இனி அரசியலை விட்டு ஒதுங்குவார்களா? அல்லது சேவை செய்ய முன்வருவார்களா? இது தவிர, தங்களுடைய சொத்துக்களை பாதுகாக்க ஜாதி அரசியலை செய்து கொண்டிருப்பவர்கள் ,அரசியலை விட்டு , ஒதுங்குவார்களா? இனி தமிழ்நாட்டில் ,வியாபார அரசியலுக்கு முற்றுப்புள்ளி தான்.
