திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்த பெண் ஆட்சியரில்! சூப்பர் பவர் ஆட்சியாளராக கவிதா !

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட, ஒரு சில மாதங்களிலே, இவர் பல டிரான்ஸ்பர்களை பல்வேறு துறைகளில் போட ஆரம்பித்து விட்டார்.

அது பொது மக்களிடம் வந்த புகாரா? இல்லை நேரடியாக வந்த புகார? என்பது தெரியவில்லை. இருப்பினும் இவர் இடம் மாற்றத்தை கொண்டு வந்தால் தான், இந்த மாவட்ட நிர்வாகம் சரி செய்ய முடியும் என்பதை நன்றாக புரிந்து இருக்கிறார்.

மேலும்,தற்போது கூட, 12 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றி இருக்கிறார். இந்த இடமாற்றம் காரணத்தோடு தான் நடந்திருக்கிறது. இவர் லிஸ்ட் எடுத்து இருப்பார். ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலரின் செயல்பாடுகள் ?குறித்து ஆய்வு செய்துதான் ,இந்த இடம் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார் என்பது எங்களுக்கு போன்ற பத்திரிக்கையாளர்களுக்கு தெளிவாக தெரிகிறது.

அது மட்டுமல்ல, விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில், எந்த விதமான முறைகேடுகளும், இடைத்தரகர்களும், இருக்கக் கூடாது என்பதற்கு நேரடியாக மாவட்ட ஆட்சியரை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக ஆட்சியில்!எத்தனையோ மாவட்ட ஆட்சியர்கள், பத்திரிகையாளர்கள் போன் செய்தால் எடுப்பதில்லை. ஆனால் ,இன்று அவரை தொடர்பு கொண்ட போது உடனடியாக போன் எடுத்து, சிறிது நேரம் வெயிட் பண்ணுங்க பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

மேலும் ,சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நான் பத்திரிக்கையில் நிருபராக பணியாற்றி இருந்த காலத்தில், திருவள்ளுவருக்கு வந்த 90% மாவட்ட ஆட்சியருடன் போனில் தொடர்பு கொண்டு ,பேசிக் கொண்டிருப்பேன். அவர்களும், உங்களுக்கு எந்த விஷயங்கள் வந்தாலும், உடனே எனக்கு லைனில் வாருங்கள் என்று சொல்வார்கள்.

அப்படிப்பட்ட மாவட்ட ஆட்சியர் களையும் பார்த்திருக்கிறேன். மேலும், இவருடைய ஒவ்வொரு செயல்பாடுகளையும் பார்க்கும்போது, மாவட்ட நிர்வாகத்தை சரியான முறையில் அதிகாரிகளை வேலை வாங்குவார் என்று இவருடைய செயல்பாடுகளில் தெரிய வருகிறது.

அதுமட்டுமல்ல பொது நலன் கருதி தற்போது கூட ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்கும் திட்டத்தில், உள்ள குடும்ப சூழலில் இருப்பவர்கள் மற்றும் விரும்புபவர்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தொடர்பு கொள்ளலாம்.

தவிர,6382613912 என்ற எண்ணிலும், thirudcpo3@gmail.com , என்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம். இவருடைய செயல்பாடுகளின் வேகம் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *