மழை நீர் வடிகால் கால்வாய்! கட்டிய மூன்றே நாளில் இடிந்து விழுந்த தரமற்ற கட்டுமானம்! என பொதுமக்கள் குற்றச்சாட்டு . – காஞ்சிபுரம் மாநகராட்சி .

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

நகராட்சி, மாநகராட்சி, கட்டுமான பணியாகட்டும் மற்ற ஒப்பந்த பணிகளாகட்டும் 50 சதவீத கட்டுமான பணி, திறன் அமைந்திருந்தால் கூட இந்த வடிகால் கால்வாய் சுகர் இடிந்து விழுந்து இருக்காது .

அப்படி என்றால், அதற்கும் கீழே இந்த கட்டுமான பணி நடந்திருக்கிறது. இதை யார் ஆய்வு செய்கிறார்கள்? யார் இதற்கு பொறுப்பேற்பது? நகராட்சியின் ஆணையாளரா? அல்லது பொறியாளரா?

55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த சுமார் 500 அடி நீளத்துக்கு கட்டிய கால்வாய் சுவர் மூன்றே நாளில் இடிந்து விழுந்துள்ளது. இப்படி கட்டிய மூன்றே நாளில் விழும் அளவிற்கு எதற்காக அப்படிப்பட்ட ஒரு கால்வாய் கட்ட வேண்டும்? மேலும்,

மக்களின் வரிப்பணம் வீணடிப்பது பற்றி கவலை இல்லையா? தவிர,இந்த நகராட்சி அலுவலர்கள் எத்தனை லட்சம் வேண்டுமானாலும், மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கலாம். ஆனால், பத்திரிக்கைகாக ஒரு பத்தாயிரம், பதினைந்தாயிரம் விளம்பரம் கேட்டால், அப்படியே 100% உண்மையான கணக்கு எழுதி ,இது போன்ற கட்டுமான பணிகளை 100% ஆன பணிகளை நிறைவேற்றுவது போல அதிகாரிகள் பில்டப் செய்வார்கள்.

இவர்களுடைய பில்டப் ஒரு நாளைக்கு எல்லா நகராட்சியிலும், வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும், காஞ்சிபுரம் 22 வது வார்டு திருவீதி பள்ளம் பகுதியில், மழை நீர் தேங்கி வருவதால் ,இந்த வடிகால் கால்வாய் அமைத்திட ,மாநகராட்சி நிர்வாகம் 55 லட்சத்திற்கு ஒப்பந்தம் விட்டிருந்தது.

இதில் தர மற்ற கம்பிகள் பயன்படுத்த இருக்கிறார்கள். தரமான ஜல்லி ,சிமெண்ட் , மற்றும் கொடுக்கப்பட்ட அளவீட்டை விட, பெயருக்கு இந்த வேலையை செய்திருப்பதால் ,கட்டிய மூன்றே நாளில் இடிந்து விழுந்து உள்ளது .

மேலும்,இடிந்து விழுந்த சுவரை கிரேன் கொண்டு அப்புறப்படுத்தி, அதை மரக்கட்டைகள் கொண்டு ,மூடி மறைத்து விட்டார்கள். மற்றொரு பக்கம் ,சுவரை கட்டைகள் கொண்டு, முட்டு கொடுக்கப்பட்டுள்ளது .

இந்த செய்தி ஒரு பக்கம் சமூக வலைதளங்களில் பரவினாலும், பொதுமக்கள் இது பற்றி எந்த அளவுக்கு இந்த அதிகாரிகள் வேலை செய்கிறார்கள்? இவர்கள் தரமாக வேலை செய்வதில்லை? என்பது தான் பொது மக்களிடம் இது அதிர்ச்சியான செய்தியாக உள்ளது.

மேலும் ,இந்த வேலையை ஒப்பந்தம் செய்த கான்ட்ராக்டர் துவாரகேஷ் இந்த ஒப்பந்தத்தில் இருந்து நீக்கி மீண்டும். புதிய ஒப்பந்தம் போடப்பட்டு ,சரியான முறையில் வேலைகளை இனியாவது நகராட்சி நிர்வாகம் சரியாக செய்வார்களா?

தவிர, போடப்பட்ட ஒப்பந்தத்தில், மக்களின் வரிப்பணத்தில் இருந்து ,ஒரு ரூபாய் கூட வீணடிக்க கூடாது .இது அத்தனையும் ஒப்பந்ததாரர் கணக்கிலே தான் சேர்க்க வேண்டும் என்பது காஞ்சிபுரம் வாரி செலுத்தும் மக்களின் கோரிக்கை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *