முதல்வர் விஜய்க்கு! காங்கிரசின் கூட்டணி தவிர்த்து, பிஜேபியின் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்வது, அவருடைய எதிர்கால! அரசியலுக்கு வலுவானது. ஆனால், ஆதவ் அர்ஜுனா ! தவறாக வழி நடத்திவிட்டாரா ?-அரசியல் பார்வையாளர்கள்.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணைய தளத்தின் மூலம் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே இவர் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது தவறான முடிவு என்று தெரிவித்திருந்தோம் . அதேபோல் தவறான முடிவை எடுத்து விட்டார் என்பது நிதர்சனமான உண்மை .

மேலும்,ஆட்சியில் இருக்கும் போது திமுக, காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து பிஜேபியை எதிர்த்தது. தற்போது ஆட்சியை இழந்து காங்கிரசை விட்டுவிட்டு ,பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

இது சந்தர்ப்பவாத கூட்டணி என்றாலும், ஊழல் வழக்குகளிலும் ஊழல் நடவடிக்கைகளிலும் தப்பித்துக் கொள்ள பிஜேபியுடன் கூட்டணி வைப்பது தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற சப்போர்ட் உருவாக்கிக் கொள்ள இந்த கூட்டணி வைக்கிறது.

முதல்வர் விஜய் இந்த கூட்டணியை தவறவிட்டார். நீங்கள் விட்டதினால் திமுக அங்கே போய் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. பிஜேபிக்கும் எம்பிக்களின் ஆதரவு தேவைப்படுவதால் அதை பயன்படுத்திக் கொள்ளவும் அது பார்த்து வருகிறது.

மேலும் இப்படி அரசியலில் யார் எதிரி? யார் கூட்டணி ?யார் நண்பன்? இதற்கு அப்பாற் பட்டு அரசியல் போய்க் கொண்டிருக்கிறது. இது தவிர,திமுக, பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொண்டால், விஜய்க்கு தமிழ்நாட்டில் நெருக்கடிகளை கொடுப்பது ,அரசியல் போராட்டங்களை முன்னெடுப்பது, தேவையில்லாத கலவரங்களை உருவாக்குவது, இதெல்லாம் திமுகவுக்கு கைவந்த கலை.

மேலும்,முதல்வர் விஜய்க்கு! காங்கிரசின் கூட்டணி தவிர்த்து, பிஜேபியின் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்வது, அவருடைய எதிர்கால! அரசியலுக்கு வலுவானது. ஆனால், ஆதவ் அர்ஜுனா ! தவறாக வழி நடத்திவிட்டாரா ?-அரசியல் பார்வையாளர்கள்.

ஆக கூட எந்த விதத்திலாவது விஜய்க்கு அவர்கள் நெருக்கடி கொடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள் .அது மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ இந்த பிரச்சனை இன்னும் சில காலங்களில் அது வலுக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, விஜய் இன்னும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலம் உருவாகிறது என்பதை புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *