தவெக அரசு! இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்! நியமனத்தில் விதிமுறைகள் தளர்த்தப்படுவது நல்லதா? கெட்டதா?

அரசியல் ஆன்மீகம் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி வர்தகம்

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் சட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். இப்போது அது தேவையில்லை மற்ற துறைகளில் உள்ள அதிகாரிகளை நியமனம் செய்யலாம் என்ற விதி தளர்வு கொண்டு வர தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

இதை எதற்காக? இந்து முன்னணி தலைவர்கள் எதிர்க்கிறார்கள்? சட்டப்படிப்பு படித்தவர்கள் ,இதுவரை எந்த கோயில் சொத்துக்களை சரியான முறையில் ஆக்கிரமிப்புகள் எல்லாம் அகற்றியும் , பராமரிப்பும் ,செய்து வருகிறார்கள்?

இவர்களால், இந்து சமய அறநிலையத் துறையில், ஊழலே நடைபெறவில்லையா? மேலும், இந்த கோயில் இணை ஆணையர்கள், பத்திரிகையாளர்களையும், பத்திரிகைகளையும், மதிப்பதில்லை. ஏன்? மந்திரி பி ஏக்களை கூட மதிப்பதில்லை.

சில தினங்களுக்கு முன், திருத்தணி முருகன் கோயிலுக்கு நானும் செல்ல ,திருவள்ளூர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகத்தில் அறநிலையத்துறையின் சார்பில் கொடுக்கப்படும் பாஸ் பற்றி மாவட்ட ஆட்சியர் கவிதாவிடமே இதை தெரிவித்தேன்.

அவர்கள் ஏதோ, புதிய விதிகள் எல்லாம் கொண்டு வந்திருக்கிறார்கள். மேலும் ,கடந்த காலங்களில் இந்த இணை ஆணையர்கள் பத்திரிகைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். இப்போது திருத்தணி இணை ஆணையர் ரமணி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருடைய பி.ஏ .க்களை கூட மதிப்பதில்லை. மேலும்,

அவரும் எனக்காக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்குமாறு போன் நம்பர் கூட இந்த அம்மாவுக்கு மெசேஜ் செய்யப்பட்டது. நான் திருத்தணி சென்று போன் செய்து பார்க்கிறேன் எடுக்கவே இல்லை. பிறகு, காவல்துறை அதிகாரிகள் எனக்கு மேலே செல்ல அனுமதித்தார்கள்.

அதுவும் விழுப்புரத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி அவர்தான் நீங்க போங்க சார்ன்னு ,அனுப்பி வைத்தார். அந்த அளவுக்கு இந்த இணை ஆணையர்கள் ஒரு அரசு அதிகாரியாக பணியாற்ற வில்லை.

மேலும் ,சட்டம் படித்தோம் என்ற ஆணவத்தில் இருக்கிறார்கள். திருத்தணி கோயிலில் எத்தனையோ இணை ஆணையர்களை நான் பார்த்திருக்கிறேன். இப்படி ஒரு கோயில் இணை ஆணையரை நான் பார்க்கவில்லை. தவிர ,

நிச்சயம் சட்டம் படித்தவர்கள் தான் இணை ஆணையராகப் போட வேண்டும் என்ற விதிமுறையை மாற்றி அமைப்பதில் தவறில்லை . மேலும், நிர்வாகம் சரியான முறையில் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டுமே ஒழிய, இவர்கள் சட்டம் படித்து விட்டு, சட்டத்தின் ஓட்டைகளில் கூறு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் எத்தனை கோயில்களில் கோயில் சொத்துக்கள் வழக்குகள் ஓடிக்கொண்டிருக்கிறது? கடந்த திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் சேகர்பாபு செய்யாததா? அதற்கெல்லாம் இவர்கள் ஒத்து ஊதி விட்டு, இப்போது என்ன சட்டத்தை புரட்டிக் கொண்டிருக்கிறார்களா? சட்டப்படி எல்லாம் செய்தார்களா? மேலும்,

இந்த சமய அறநிலையத்துறை! நேர்மையான , திறமையுள்ள அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் அதுதான் நிர்வாகத்தை‌ நல்ல முறையில் செய்ய முடியும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *