
எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியான பிஜேபிக்கு ஒவ்வொரு விஷயத்திலும், பிரச்சினைகளை உருவாக்குவதுதான் இப்போதைய எதிர்க்கட்சிகளின் முக்கிய நோக்கமாக உள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டில் ஆளும் தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் விஜய்க்கு ஒவ்வொரு விஷயத்திலும் இன்றைய திமுக எதிர்க்கட்சி முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு, ஒவ்வொரு தேவையற்ற விஷயத்திலும் அதை பெரிதுபடுத்தி பேசிக்கொண்டு, ஏதோ தமிழ்நாட்டை தியாகிகள் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இது எல்லாம் அரசியல் தெரியாத ஆட்களிடம் மைக் எப்படி பேசிக் கொண்டிருந்தால் அவன் வாயைப் பார்த்துக் கொண்டு கைதட்டிக் கொண்டிருப்பான். அங்க பேச வேண்டியது எல்லாம் சட்டமன்றத்திலே பேசினால் அரசியல் தெரிந்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கூட தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,

இப்போது தொகுதி மறு வரை பிரச்சனை என்பது அது ஒரு முக்கியத்துவமான பிரச்சனை! அதாவது நாட்டு மக்களுக்கு நிர்வாகம், மக்கள் தொகை அடிப்படையில், மாநில எல்லை பரப்பளவு அடிப்படையில், இந்த தொகுதி வரையறை என்பது தேவையான ஒன்று.
மேலும்,இதில் தமிழ்நாட்டுக்கு அதிக எண்ணிக்கையில் எம்பிக்கள் வருவார்கள். எம்எல்ஏக்கள் வருவார்கள் என்கிறார்கள். இந்த தொகுதியை மறு வரையறை செய்வதால் , எதற்காக இவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுக்க வேண்டும்?
மேலும்,எதிர்க்கட்சி என்றால்! ஆளும் கட்சியின் எல்லாவற்றிற்கும் முட்டுக் கட்டைகளை போட்டுக்கொண்டு, எதிர்ப்பது தான் எதிர்க்கட்சியின் வேலையா? நீங்கள் மக்களுக்காக குரல் கொடுக்கிறீர்களா? அல்லது மக்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறீர்களா? இது அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

மேலும்,தெரியாதவர்கள் நீங்கள் என்ன பேசினாலும், அது பற்றி தெரியாது. ஏனென்றால் காப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் பேசினால் ,அது அத்தனையும் நூறு சதவீத உண்மை என்று மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கைகள் , அரசியல் தெரியாத மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தது ஒரு தொலைக்காட்சியில் பேட்டி வரும்போது,ஒரு 50 மைக்குகளுக்கு மேல் நீட்டி, அவர்கள் என்னால் கட்சியை அடையாளங்கள் நின்று கொண்டு, இவர் சொல்வது என்னவோ ,அப்படியே 100% உண்மை என்று மக்கள் நம்பும் படி ஆக்சன் காட்டி ,பேசினால் அது உண்மையாகி விடுமா?
எது உண்மை ?என்பதை தெளிவான விளக்கங்கள் மூலம், ஆதாரத்துடன் கொடுக்கப்படுவது, எந்த பத்திரிக்கையாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அது அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி ,மக்களாக இருந்தாலும் சரி, உண்மைதான் எங்கிருந்து யார் சொன்னாலும், அதில் உண்மை இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து பார்த்து ,முடிவு செய்து கொள்ளுங்கள்.
மேலும், தொகுதி வரையறை (Delimitation) என்பது தேர்தல் கணக்கை மாற்றுவதற்கான அரசியல் கருவியாக இல்லாமல், மக்கள் தொகை மற்றும் பிரதிநிதித்துவ சமநிலையை உறுதி செய்யும் ,அரசியலமைப்புச் செயல்முறையாக அது இருக்க வேண்டும்.
தவிர, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை என்னவென்றால்!
மக்கள் தொகை கட்டுப்பாட்டில் முன்னிலை வகித்த மாநிலங்களுக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு ஏற்படக்கூடாது.
மேலும்,மக்கள் தொகையை அதிகமாக வைத்திருப்பது மட்டுமே, அதிக தொகுதிகளுக்கான ஒரே அளவுகோலாக இருந்தால், சிறப்பாக குடும்பக் கட்டுப்பாட்டை செயல்படுத்திய மாநிலங்களுக்கு அநீதி ஏற்படலாம்.
எனவே, மக்கள் தொகை + நிர்வாகத் தேவை + புவியியல் பரப்பு + மக்கள் பிரதிநிதித்துவ சமநிலை ஆகியவற்றை பாதுகாக்கப்பட வேண்டும்.
மேலும் ,தமிழ்நாட்டின் நலனுக்கும், இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கும், சமநிலையான அணுகுமுறை தேவை! இதுதான், மத்திய அரசு!தொகுதி வரையறை செய்வதில் ,இருக்க வேண்டிய முக்கிய அம்சம் என்பதை எதிர்க் கட்சிகளும், அரசியல் கட்சிகளும், ஆளும் கட்சியும், பொது மக்களும் ,தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய உண்மை.
