திமுக , காங்கிரஸ் கட்சிகள் சட்டமன்றத்திலே! ஒரு சிறிய விஷயத்தை மக்கள் மத்தியில் பெரிய விஷயமாக கொடுக்கலாமா? யார்?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பல லட்சம் கோடி ஊழல் நடத்தியதை பற்றி பேசாமல் வாயை மூடிக்கொண்டு, இருந்த காங்கிரஸ் கட்சி, மாணிக்கம் தாகூர், இப்போது இல்லாத ஒரு சில எம்எல்ஏக்கு கார் கொடுக்கலாம் என்று அறிவித்தவுடன் ,எத்தனை பேர் இதை பெரிய விஷயமாக பேசுகிறார்கள். மேலும்,

இது எதனால் என்றால்? இவர்களுடைய பெரிய ஊழல்களும் ,அராஜகங்களையும் மக்கள் மறந்து இவர்களை நல்லவர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த வித்தை யாருக்கு தெரியும்?

திமுக ,காங்கிரஸ், கட்சிக்காரர்களுக்கு தான் தெரியும். அயோக்கியன் தான் அதிகமாக பேசுவான். அது ஏன் எனறால்? தன்னை நியாயமானவன் என்று காட்டிக் கொள்வதற்கு பேசுகிறார்கள். இது இவர்கள் மட்டு மல்ல கிராமங்களில் இருக்கும் கட்சிக்காரர்கள் கூட அப்படித்தான் மக்களிடம் பேசுகிறார்கள். ஏமாந்தவன் கேட்டுக் கொண்டிருப்பான். இவர்கள் யார் என்பதை தெரிந்து கொண்டவன், போயிட்டு வரேன் என்கிறான்.

இதைதான் நடிகர் மற்றும் தவெக எம்எல்ஏ ஸ்ரீநாத் சுருக்கமாக சொல்லியிருக்கிறார். சுருக்கமாக சொன்னால் ,நம்ம மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். மேலும்,

இதை நடிகர் ஸ்ரீநாத் எம் எல் ஏ திமுக காரங்க நல்லது செய்ய விட மாட்டாங்க என்கிறார். தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவது எப்படி ?என்று மக்களுக்கு கற்றுக் கொடுப்பார்கள். சிறிய விஷயத்தை பெரிதுபடுத்தி, இவர்களுடைய நாகரீகமற்ற பேச்சுக்களை எல்லாம் கார்ப்பரேட் மீடியாக்களும், சோசியல் மீடியாக்களும் மக்களிடம் அதை கொண்டு போய் சேர்ப்பது ஊடகம் என்ற பெயருக்கு அர்த்தம் அற்றது.

மேலும்,செய்தித்துறை இதையெல்லாம் கவனிக்க வேண்டும். அதற்கு தான் நீங்கள் செய்தித்துறை அதிகாரிகள் , என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மக்களிடம் எது உண்மை? எது மனசாட்சிக்கு உகந்தது ?எது நியாயமானது? இதை சொல்வது தான் பத்திரிக்கையின் வேலை.

எதிர்க்கட்சிகள் எப்படியும் பேசுவதை கொண்டுபோய் சொல்வது பத்திரிக்கை வேலையா ?அல்லது சமூக ஊடகங்களின் வேளையா? மேலும் அவர்களுக்கு கார் கொடுக்கக் கூடாது என்பதில் நியாயம் இருக்கலாம், தவறில்லை .கொடுக்கக் கூடாது . என்பதை நேரடியாகவே சொல்லி விடுங்கள். தவிர,

சட்டமன்றத்திலே இருப்பது 108 எம் எல் ஏ அதிலும் முதல்வர் விஜய் தன்னுடைய திருச்சி தொகுதியை ராஜினாமா செய்து விட்டார். ஒருவர் கடன் கொடுங்கள் என்று என்கிறார். மாணிக்கம் தாகூர் பஞ்சாயத்து தலைவர்களுக்கும் கார் கொடுங்கள் என்கிறார்.

மக்கள் இவர்கள் சீட்டு காலி ஆக்கிவிட்டார்கள். அதுதான் இவர்களால் தாங்க முடியவில்லை. அதற்கு எப்படியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேசட்டும் மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், நடிகர் ஸ்ரீநாத் எம்எல்ஏ,நாங்கள் பேசுவதில் இருந்து, ஒரு பாயிண்ட் எடுத்து அதை பெரிதாக்கி பேசுகிறார்கள். பெரிதாக்கி பேசுவது அல்ல, அதற்கு 100 பாயிண்ட் கூட பேசுவார்கள்.

நாங்கள் எதையும் எதிர்கொள்ள தயாராக தான் இருக்கிறோம். நல்லவேளை திமுகவில் மிகப்பெரிய ரவுடிகள் எல்லாம் வயதாகி விட்டார்கள். இப்போது கூட ,அவர்களுடைய அந்த வாசனை சட்டமன்றத்திலே அடிக்கத்தான் செய்கிறது .பதவி வெறியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் தொடர்ந்து ஏமாற மாட்டார்கள். என்பதை அவர்களும், அவர்களுடைய ஊடகங்களும், புரிந்து கொண்டால் சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *