தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில்! பத்திரிக்கை துறையில் மக்கள் அதிகாரம் தொடர்ந்து கோரிக்கை வைத்த அந்த சப்ஜெக்ட் !இப்போது அரசின் கவனத்திற்கு சென்று சட்டமன்றத்திலே விவாதித்திருப்பது அதை வரவேற்று எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள் – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிக்கையாளர்கள் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

50 ஆண்டுகால திமுக, அதிமுக ஆட்சியில் பத்திரிக்கை துறையில் உள்ள அவலங்களை சீர் செய்ய முடியாததை, தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில்! மக்கள் அதிகாரம் கொடுத்த உண்மையான நியாயமான, கோரிக்கைகளை விவாதித்து இருப்பது,

தமிழக முதல்வர் விஜய் மற்றும் செய்தி துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கு எமது மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பிலும், சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் மனமார்ந்த நன்றியும் பாராட்டும் ,தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்,

சிறு பத்திரிகை!
புதிய சலுகை / புதிய வகைப்பாடு
இணையதள ஊடகம்
தனி அங்கீகாரம் / பதிவு / விளம்பரத் தகுதி

Accreditation card!
புதிய தகுதி / circulation அல்லது readership விதிமாற்றம்

அரசு விளம்பரம் !
சிறு ஊடகங்களுக்கு புதிய ஒதுக்கீடு / புதிய அளவுகோல்

பத்திரிகையாளர்கள் நலவாரியம்!
உறுப்பினர் தகுதி, நிதி, மருத்துவம், ஓய்வூதியம் உள்ளிட்ட உதவிகள்
!

மேலும்,இன்னும் அதற்கான முடிவு அறிவிக்கவில்லை என்றாலும், எங்களது கோரிக்கை சட்டமன்றத்திலே விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்ட போது இந்த போராட்டத்திற்கான வெற்றியாக இதை பார்க்கிறேன்.

கடந்த திமுக ஆட்சியில் எத்தனையோ முறை செய்திகள் எமது பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் வெளியீட்டும் அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. அதேபோல் ,அதிமுக , திமுக ஆட்சியிலும் கோரிக்கை மனுக்கள் மற்றும் செய்திகள் வெளியிட்டும், எந்த பயனும் இல்லை. மேலும், இதைப் பற்றி!

எத்தனையோ சிறு பத்திரிக்கையாளர்கள், கார்ப்பரேட் பத்திரிக்கை நிருபர்கள், இந்த செய்தியை போடும்போது ,எல்லாம் அதை விமர்சனம் செய்திருக்கிறார்கள். எனக்கு தெரிந்தது சில, தெரியாதது பல, என்று சொல்வார்களே, அதுதான் இந்த விஷயத்தில் நடந்தது.

ஆனால், உண்மையான உழைப்பு, உண்மையான சமூக போராட்டம், அதற்கு நிச்சயம் பலன் உண்டு என்பார்கள் .அதுதான் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில்! இதை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது நிச்சயம் வரவேற்க வேண்டி ஒன்று. பாராட்ட வேண்டிய ஒன்று. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால்! மக்கள் தான் இதை பாராட்ட வேண்டும்.

ஏனென்றால் மக்களுக்கான ஆட்சி! மக்களுக்கான பத்திரிகைகள் என்று கொண்டு வரும்போது, எத்தனை பத்திரிகைகள் என்று எண்ணிவிடலாம்?. ஆனால், இந்த பத்திரிகைகள் எல்லாம் ஆட்சியாளர்களின் நலனுக்காகவும், அரசியல் கட்சிகளின் நலனுக்காகவும், 99 சதவீதத்திற்கு மேல் தமிழ்நாட்டில் இருந்தது இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.

இன்று கூட ஒரு நண்பரிடம் பேசி இருந்தேன். நாங்கள் பத்திரிகை நடத்துகிறோம் .சமூகத்திற்காக !ஆனால் ,எங்களுக்கு அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. என்றுதான் அவரிடம் என்னுடைய ஆதங்கத்தை தெரிவித்திருந்தேன்.

ஏனென்றால், உழைப்பு கேற்ற ஊதியம், திறமைக்கேற்ற ,தகுதிக்கேற்ற அதனுடைய வாய்ப்புகள் ,கடந்த திமுக, அதிமுக ஆட்சியில், பத்திரிக்கை துறையை ,அவர்கள் சுயநல கொள்கைக்காக பத்திரிக்கையை மாற்றி விட்டார்கள்.

அதாவது பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுப்பது, அரசின் கொள்கை முடிவு !சட்டம் எப்படி இருக்கிறது பாருங்கள் ? அந்த கொள்கை முடிவு சுயநலமா ?அல்லது பொது நலமா? அதுதான் எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிகைகளின் கேள்வி?

அந்தக் கொள்கை முடிவு சுயநலமாக இருந்ததால் தான், இவர்கள் உடைய கட்சி பேப்பர்களுக்கு எல்லாம் கோடிக்கணக்கில் விளம்பரங்களை மக்களின் வரிப்பணத்தில் கொடுத்து வீண் அடித்தார்கள். வியாபார நிறுவன பத்திரிகைகளுக்கு கொடுத்து வீணடித்தார்கள்.

இப்போது தமிழக வெற்றி கழகம் அதை மாற்றி இருக்கிறது. இதை செய்தித் துறை இயக்குனர் அருண் தம்புராஜ் மற்றும் கூடுதல் செயலாளர் (Additional secretary) விஜயகுமார் இந்த மாற்றத்தை கொண்டு வருவதில் இவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இது சமூகத்திற்காக ஆற்றிய ,இவர்களுடைய பொறுப்பான கடமை மட்டுமல்ல,

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சிக்கு வரலாற்று சிறப்புமிக்க மாற்றத்தை பத்திரிக்கை துறையில் கொண்டு வந்துள்ளது ,சமூகநலன் பத்திரிகையாளர்கள் மற்றும் மற்றும் பத்திரிகைகள் இதை வரவேற்றுப் போராட்ட கடமைப்பட்டுள்ளது.

நிச்சயம் இதை மக்களிடம் கொண்டு செல்வோம். தமிழக முதல்வர் விஜய்க்கு எங்களது மனமார்ந்த நன்றி மிக்க பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *