சேஷாத்திரி மகான் பிறந்தது! பிறந்த வழு ஊருக்கு பெருமை! வளர்ந்த காஞ்சிக்கு பெருமை! அவர் முக்தி அடைந்த திருவண்ணாமலைக்கு பெருமை! மகன்கள் பிறப்பு பெருமைக்குரியது. போற்றுதலுக்குரியது.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பயணங்கள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சேஷாத்திரி மகான் பிறந்த ஊரான வழுவூரில் இன்று அவருக்கு தேர் பவனி விழா நடைபெற்றது. இந்தத் தேர் பவனி விழாவை ஆன்மீக சொற்பொழிவாளர் மற்றும் ராம சங்கீர்த்தன ஸ்ரீ .ஸ்ரீ.முரளிதர சுவாமிகள் இதை துவக்கி வைத்து காஞ்சி மாநகரத்தை பற்றியும், ஸ்ரீ சேஷாத்திரி மகான் பற்றியும், ஆன்மீக பக்தர்கள் இடையே சொற் பொழிவாற்றினார்.

மேலும்,சேஷாத்ரி மகான் வாழ்ந்த காலம் வெள்ளைக்காரன் ஆட்சி செய்த காலமாக இருந்தாலும், மக்கள் மனசாட்சியுடன், நேர்மையுடன், சத்தியம் தர்மத்தை கடைப்பிடித்து வாழ்ந்த காலம்.

இப்போது வாழ்கின்ற மக்கள்! ஆடம்பரப் பிரியர்கள். அன்று ஆடம்பரம் என்றாலே என்ன? என்று தெரியாத வாழ்ந்த மக்கள். அதனால்தான் நதிகளும், மலைகளும்,சோலைகளும், இயற்கையும், கடலும் அந்த மகான்களோடவே சங்கமித்திருந்தது.

எத்தனையோ சித்தர்கள், முனிவர்கள், தவசிகள் ,இந்த இயற்கையோடு தான் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், இயற்கையை அழித்து வாழ்ந்த ஒரு பெரும் அரசியல் !பாவி கூட்டங்கள் இன்று அவர்களோடு, நாம் வாழ வேண்டிய காலம் ஆகி விட்டது. மதத்தை அழிக்கிறார்கள். இந்து மதத்தின் சிறப்பு என்ன ?என்று கூட தெரியாத பாவ கூட்டங்கள், இன்று இந்து மதத்தை பற்றி பேசுகிறது.

இந்து மதம் என்னவோ, பிராமணர்களுக்காக இருப்பது போல்! அரசியல் செய்கிறார்கள். இந்து மத துவேஷிகள் ,கடவுளைப் பற்றி அவதூராக பிரச்சாரங்களை பேசுகிறார்கள். அர்த்தம் தெரியாத கூட்டங்கள் ,அதிகாரத்திற்கு வந்து இந்து மதம் என்றால்! சாஸ்திர சம்பிரதாயங்கள் இருக்கிறது. ஒழுக்கங்கள் இருக்கிறது, மனிதனுடைய நேர்மை இருக்கிறது. அறநெறி வாழ்க்கை இருக்கிறது.

ஒழுக்கம் இலலாதவன், எப்படியும் வாழலாம் ,எப்படியும் பேசலாம். எப்படியும் ஊர் சொத்துக்களை பங்கு போடலாம்? சட்டத்தை ஏமாற்றலாம். நாட்டு மக்களை ஏமாற்றலாம். இந்த எண்ணம் தான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் ?

பாவ புண்ணிய கணக்கில் தான், மனித பிறவி! ஜாதி வைத்து, மதத்தை வைத்து, அரசியல் செய்து! இதில் ஒன்றும் தெரியாத அப்பாவி மக்களை ஏமாற்றுவது, இன்னும் அவர்கள் பல பிறவி எடுத்தாலும் ,அவர்களுடைய பாவக் கணக்கு தீராது .

இவர்கள் எப்படி கொள்ளை அடித்து ?சட்டத்தை ஏமாற்றி! பல கோடிகளுக்கு சொத்துக்களை சேர்த்து இருந்தாலும்,கடவுள் இவர்கள் அத்தனை பேருக்கும் நோயை கொடுத்து ,நிம்மதியை கெடுத்து, தூக்கத்தை கெடுத்து, இவர்களுடைய பிள்ளைகள் தவறான வழிகளில், தவறான சிந்தனைகளில், ஒழுக்கம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இது ஏன் ?அரசியல் இங்கே வருகிறது? என்றால் !அரசியல் வேறு அல்ல, ஆன்மீகம் வேறல்ல, ஒரு மனிதனுடைய வாழ்க்கை பயணம்!அரசியல் பயணமும், ஆன்மீகப் பயணமும், இரண்டும் ஒன்றாக தான் இருக்க வேண்டும் .அதில் வேறு திசையில் பயணிக்கும் போது, அவர்கள் மக்களுக்கு, தெய்வத்திற்கு, மதத்திற்கு, எவ்வளவு விரோதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ?என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

மேலும்,ஒருவனுடைய மனித வாழ்க்கை பயணம்! ஆன்மீகமாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும், ஏன் ?ஒரு சாமானிய மனிதனாக பிறந்தாலும்,அவன் பிறந்து, வாழ்ந்து, இறந்த பிறகும் எப்படி இருந்தது?

மேலும்,தமிழ்நாட்டின் அரசியல்! 1965 க்கு முன் ,பிறந்த ஊருக்கு பெருமை சேர்த்தது. 1965 க்கு பின், இவர்கள் பிறந்தது அந்த ஊருக்கு கேவலத்தை சேர்த்து உள்ளது. அதில் விதிவிலக்குகள் ஒரு சிலர் இருக்கலாம். இந்த அரசியல் உண்மைகள்

தெரியாத கூட்டங்கள் பேசுவது அர்த்தமற்றது, எழுதுவது அர்த்தமற்றது. இது உண்மையா? பொய்யா ?என்பதை அரசியல் வரலாறு படித்த மக்களுக்கு புரியும். படிக்காதவர்களுக்கு புரியாது.

ஏனென்றால்! இப்போது இருக்கின்ற இளைஞர்கள், சினிமா தான் அரசியல்! என்று, இன்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், சினிமாவே வாழ்க்கை என்று வாழ்ந்து, ஏமாந்து அதிலே வாழ்க்கையை தொலைத்தவர்கள், இன்று பல லட்சம் பேர் இருக்கிறார்கள் .அது வெளியில் தெரியாது.

மேலும்,வாழ்க்கை என்பது பணமே வாழ்க்கை என்பவன் சந்தோஷத்தை இழந்து விடுகிறான் . நிம்மதியை இழந்து விடுகிறான்.பணம் தேவை என்று வாழ்பவன் நிம்மதியாக வாழ்கிறான். இது எல்லாம் அவர்களுடைய பாவம் புண்ணிய கணக்கில் வந்தவை.

மேலும் நேற்று வரை அறநிலையத்துறைக்கு மந்திரியாக இருந்த சேகர்பாபு !இன்று திருத்தணி முருகன் கோயிலில், மலை மீது கூட கார் போக முடியாத நிலை வந்துவிட்டது அல்லவா ?இதுதான் கடவுள்! கடவுள் எங்கே இருக்கிறான்? எப்படி இருக்கிறான்? என்று கேட்டார்கள் .இப்படித்தான் கடவுள் இருக்கிறான். இப்படித்தான் கடவுள் வாழ்கிறான்.

நேற்று நீங்கள் மந்திரிகள்! அதிகாரத்தில் இருந்த வரை, உங்களுக்கு கடவுளே, உங்கள் கையில் இருந்தது போல், நினைத்துக் கொண்டிருந்தீர்கள். ஆனால் ,கடவுள் ஒரு நொடியில் உங்கள் தலையெழுத்தை மாற்றி வைத்து விடுவார் என்பது உங்களுக்கு தெரியாது.

எப்படியும் பேசலாம், எப்படியும் வாழலாம் என்று கணக்கு போட்டு இருந்த திமுக ,இந்த திராவிட கலாச்சாரங்கள் மக்களிடையே அது ஒரு தவறான பிரச்சாரம். அது மட்டுமல்ல, போன ஆட்சியில் அதிகாரத்தில் இருந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரியை சந்திக்க சென்றேன்.

அவரை அந்த அதிகார பொறுப்பில் இருந்து, வேறு துறைக்கு மாற்றி விட்டார்கள்.அப்போது அவர் சொன்னார். எதுவும் நிரந்தரம் இல்லை என்றார். இதுதான் படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் உள்ள வித்தியாசம். இவர்களுடைய பிறப்பு! நாலு பேருக்கு நல்லது செய்வது. இந்த அரசியல்வாதிகளின் பிறப்பு தனக்கும் மட்டுமே!

மேலும்,ஒரு மகானின் பிறப்பு !அந்த ஊருக்கு பெருமை !அவர் வாழ்ந்த ஊருக்கு பெருமை! இறுதி வரை அவருடைய முக்தி அடைந்த ,ஊருக்கும் பெருமை சேர்க்கிறது. இதைதான் ஒரு மனிதன் பிறவி எடுக்கும் போது , தோன்றிற் புகழோடு தோன்றுக, அஃதிலார் !தோன்றலின் தோன்றாமை நன்று. என்று வள்ளுவர் சொன்னார். உன் பிறப்புக்கு புகழ் சேர்க்கவில்லை என்றால்! ஒருவன் பிறந்தது வீண். என்று வள்ளுவர் சொன்னது.

மகான்கள்! பிறப்பு தெய்வீக பிறப்பு. அவருடைய தொண்டு மக்களை நல்வழிப்படுத்த, பிறந்த பிறப்பு. ஆனால், இன்றைய அரசியல்வாதிகளின் பிறப்பு !எப்படிப்பட்ட பிறப்பு? எப்படியும் வாழலாம்! எப்படியும் பேசலாம்! என்று கற்றுக் கொடுக்கிற ,இந்த அரசியல் சித்தாந்தம், இவர்களுக்கு நரகத்தைத் தவிர, வேறு இடம் கிடைக்காது .

இவர்கள் பின்னால் போனால்! அதே இடம் தான், அவர்களுக்கும் கிடைக்கும். இன்று மக்கள்! கோயிலுக்கு செல்வது அதிகமாகி விட்டது. பக்தி என்பது வேஷம் ஆகிவிட்டது. போலியான பக்தி, தெய்வத்தை நெருங்க விடாது. உண்மையான பக்தி இருந்தால் மட்டுமே தெய்வத்தை நெருங்க முடியும். இது உணரும் முடியுமே தவிர, பார்க்க முடியாது.

இந்தப் போலி பக்தியால்! பதவிக்கு வந்து பல கோடிகளை கொள்ளையடிக்க வேண்டும் என்று கடவுளிடமே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்படியோ ஒரு தீய சக்தி நாட்டில் வந்து, மக்களுக்கு துரோகம் செய்து வாழ்ந்து விட்டதா?

இவர்களுடைய வாழ்க்கையை எடுத்துப் பாருங்கள்! கருணாநிதி வீல் சேரிலே மூத்திரப் பையை கையில் பிடித்துக் கொண்டு , அவருடைய இறுதி காலம் வரை வாழ்ந்து விட்டுப் போனார். அதுதான் இவர் தெய்வத்திற்கு எதிராக வாழ்ந்த ஒரு தண்டனை என்பதை இனியாவது, மக்கள் புரிந்து கொள்வார்களா?

இப்படிப்பட்டவருக்கு சமாதி வைத்தால் என்ன? பேனா வைத்தால் என்ன? என்ன பெருமை வந்து விடப் போகிறது? பெருமைக்கு !சிறுமைக்கு! அர்த்தம் தெரியாத கூட்டம் ,பேசுவது இவர்களுடைய வாழ்க்கை மக்களுக்கு தெரியாத வரை, அது பெருமை. தெரிந்துவிட்டால் அது அசிங்கம்.

அதனால்,ஒரு மனிதனின் பிறப்பு தெய்வப்பிறப்பாக இல்லாமல் இருந்தாலும், தெய்வதை போற்றி, தெய்வ சிந்தனையில் வாழ்பவனுடைய பிறப்பு ! பெருமைக்குரியது.அவனுடைய சந்ததிகள் கொடுத்து வைத்தவர்கள் என்பதை புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *