
நேபாளத்தில் நடந்த இயற்கை பேரிடர் இந்தியாவில் நடக்காமல் என்ன வழி ?என்பதை ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பது மக்களின் கேள்வி? மட்டுமல்ல, சமூக நலன் பத்திரிகைகளின் கேள்வியும் அதுதான். மேலும்,

மக்கள் அதிகாரம் தொடர்ந்து மக்கள் நலனில் மக்களுடன் இணைந்து பணியாற்றுகின்ற ஒரு தளம்.
அதனால்தான், இதுவரை எத்தனையோ முறை கடந்த கால ஆட்சியிலும் ,நீரை அசுத்தப்படுத்துகிறார்கள் .அதாவது நீரில் நச்சு கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ,போன்றவற்றால் தண்ணீர் மாசுபடுகிறது. அது பூமிக்குள் சென்று நிலத்தடி நீராக மக்கள் குடிநீருக்கு பயன்படுத்தும் போது அதில் நச்சுக்கள் கலக்கிறது. மேலும், எந்தெந்த வழியில் புவி வெப்பமயமாதல் ஏற்படுகிறது?

அதேபோல், மண்ணில் ரசாயன உரங்கள், இயற்கையின் படைப்பான ஆறு, குளம் ,ஏரிகள் இவை அத்தனையும் ஆக்கிரமிப்பு செய்து, வீடுகள் கட்டி ,மரங்களை வெட்டி ,மனிதன் தன்னுடைய சுயநலத்திற்காக இயற்கையை அழிக்கும் போது, இயற்கை அவனை ஒரு நொடியில் அழித்து விடுகிறது. இப்படி எல்லாம் புவி வெப்பமயமாதல் ஏற்படுகிறது.மேலும்,

பூமியில் இயற்கை காடுகளில் மரங்களை அழிப்பதால் , மேலும் சாலை மற்றும் பொது இடங்களில் உள்ள மரங்கள் வெட்டுவதால் ,புவி வெப்பமயமாதல் ஏற்படுகிறது. இது தவிர, வண்டி வாகனங்களின் புகை காற்று மண்டலத்தை மாசுபடுத்துகிறது.மேலும்,
பல கம்பெனிகளில் இருந்து வெளிவரும் புகைகள், அது கார்பன் டையாக்சைடையும் ,நச்சுத்தன்மையும் உள்ள புகைகளை வெளியிட்டு, காற்று மண்டலத்தை மாசுபடுத்துகிறது.

இப்படி மனிதன் வாழக்கூடிய காற்று நீர் மண் அனைத்தும் மாசு படுத்துவது ,இயற்கை வளத்தை சுரண்டுவது, இது அத்தனையும் மக்களும், ஆட்சியாளர்களும் செயல்படுத்தி வந்தது இயற்கைக்கு எதிரானது என்பதை இயற்கை தற்போது எச்சரித்துள்ளது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், இயற்கையை வளப்படுத்துவது, காற்றை தூய்மைப்படுத்துவது, நீரை தூய்மைப்படுத்துவது, மண்ணைத் தூய்மைப்படுத்துவது, இன்றைய காலகட்டத்தில் மிக ,மிக மனித வாழ்க்கைக்கும் முக்கியமானது.
மழை நீரை சேமித்து ,நீர் நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

அதை மத்திய ,மாநில அரசு எந்த திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ இல்லையோ, மனித உயிர்களும், பிற உயிரினங்களும் நாட்டில் வாழ்வதற்கு அதற்கான முக்கியத்துவத்தை ஆட்சியாளர்கள் அவசியம் கொடுத்தே தீர வேண்டும்.

மேலும் ,தமிழக முதல்வர் விஜய் இலவசங்களை கொடுப்பதை நிறுத்தி, மனித உயிர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கொண்டு வர வேண்டும் .
எனவே, கிராமங்கள் தோறும், ஏரிகளில் பசுமை நிறைந்த காடுகளை உருவாக்க முக்கிய திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

அதேபோல், வண்டி வாகனங்களின் புகை மண்டலத்தை குறைக்க பேட்டரி ஆல் இயங்கும் இ பைக் , மின்சார ஆட்டோக்கள் மோட்டார் வாகனங்கள், கொண்டு வர வேண்டும்.

நீர் நிலைகளில் கழிவுகள் கலப்பது தொழிற்சாலை கழிவுகள் கலப்பது பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டி மகிழ வைப்பது போன்ற அனைத்தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இயற்கையை நம் மீது கருணை காட்டி ,அதன் பேரழிவிலிருந்து மக்களை பாதுகாக்க முடியும்.
மேலும்,விஞ்ஞானம் இருக்கிறது, செல்போன் இருக்கிறது, கம்ப்யூட்டர் இருக்கிறது ,கார் இருக்கிறது ,சகல வசதிகளும் இருக்கிறது. ஆனால் ,இயற்கை என்ற பேரிடர் வரும்போது, எதுவும் உன்னிடம் இருக்காது .

எனவே ,ஆட்சியாளர்கள், புவி வெப்பமயமாதல் குறித்து அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து,ஆராய்ச்சியாளர்கள் கூறிய அறிவுரைகள் ஏற்று ,அதற்கான நடவடிக்கைகள் உலக அளவில், இந்திய அளவில், ஒவ்வொரு மாநில அளவில் எடுப்பது காலத்தின் கட்டாயம் !என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டால் சரி .
