
டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் சட்டப்படி பார்த்தால் நியாயமும் இருக்கிறது .அங்கே தவறும் இருக்கிறது. டாஸ்மாக் ஊழியர்கள் அவர்களுடைய போராட்டம் சம்பளம் அதிகப்படுத்தி கேட்கிறார்கள் ,ஓவர் டம் செய்தால் அதற்கு சம்பள படி கேட்கிறார்கள், பணி பாதுகாப்பு கேட்கிறார்கள் ,இது எல்லாம் நியாயமான கோரிக்கை.
ஆனால், எம்.ஆர்.பி விலையை விட அதிகப்படியாக டாஸ்மாக் மது பாட்டில்கள் விற்பது சட்டப்படி குற்றம். இப்படி விற்பனை செய்யக்கூடிய ஊழியர்கள் மீது எஃப் ஐ ஆர் போடுங்கள் என்று அரசே உத்தரவிட்டுள்ளது .

இது ஒரு பாட்டலுக்கு பத்து ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கூட ,ஒரு கடையில் குறைந்தபட்சம் ஆயிரம் பாட்டில் விற்பனை செய்தால் எவ்வளவு வரும்? 1000*10= 10,000 பத்தாயிரம் வருகிறது. தினமும் பத்தாயிரம் என்றால், மாதம் மூன்று லட்சம் .
இது IAS படித்த மாவட்ட ஆட்சியர்களுக்கு கூட இவ்வளவு சம்பளம் இல்லை. ஒரு சாதாரண கடையில் குறைந்தபட்சம் 2000 லிருந்து 3000 திற்கு மேற்பட்ட பாட்டில்கள் விற்பனையாகும்.

அப்படி இருக்கும் போது, ஒரு நாளைக்கு 20 ,000 லிருந்து 30,000 வீட்டுக்கு கொண்டு போனால், மாதம் 10 லட்சம் ரூபாய் க்கு மேல் சம்பாதிக்கக்கூடிய சேல்ஸ் மேன்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் கடந்த திமுக ஆட்சியில் எவ்வளவு திருடினாலும் ,எவ்வளவு கொள்ளையடித்தாலும்,மேற்கொண்டு, எவ்வளவு விலையை வைத்துக் கொண்டாலும், யாரும் கேட்க மாட்டார்கள். கேட்கவும் முடியாது. கேட்டால், இவர்களே கேட்பவர்களை அடிப்பார்கள். அந்த அளவுக்கு இவர்கள் தைரியத்துடன் சம்பாதித்து வந்தார்கள்.
இப்போது அரசாங்கம் எவ்வளவோ சொல்லி பார்க்கிறது. எம் ஆர் பி விலையை விட ,அதிக விலைக்கு விற்கக் கூடாது என்று உத்தரவும் இவர்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள். அப்படி இருந்தும், இவர்கள் அதிக விலைக்கு விற்கிறார்கள். சம்பளமும் வாங்கிக் கொள்வார்கள். மேற்கொண்டு விலையும் அதிகப்படியாக விற்பார்கள். இவர்களை கேட்கக்கூடாது.

கேட்டால், போராட்டம் என்ற பெயரில் இவர்கள் கொடி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சம்பள உயர்வு 30,000 வரை அறிவிக்கப்பட்டுள்ளது என தகவல்.
மேலும் ,அது எந்த மூலைக்கு? இவர்கள் ஒரு நாளைக்கு 30,000 த்துக்கு மேல் சம்பாதிக்கிறார்களே ,இதை ஒருபோதும் இவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அரசாங்கம் சொல்லிப் பார்த்தது ,எடுத்துக் கொள்ளவில்லை . அப்படிப்பட்டவர்களை 200 பேருக்கு மேல் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்.
அதனால்தான், ஒட்டுமொத்தமாக இறங்கி கொடி பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது இவர்களுக்கு அரசாங்கத்தை எதிர்த்து போராட சட்டம் அனுமதித்தாலும், தவறுகளை ஒருபோதும், அதே சட்டம் அனுமதிக்காது.

எனவே, இவர்கள் பணியை காப்பாற்றிக் கொள்ளவில்லை என்றால் ,உண்மையிலேயே இவர்களை பணியில் இருந்து நீக்கவும், சட்ட அனுமதிக்கிறது. ஒரு அரசு ஊழியராக எவ்வளவு நாள் வேலை செய்தோம் என்று கூட ,இவர்கள் நீதிமன்றத்தில் கூட முறையிட முடியாது.
முறையிட்டாலும், அது வெற்றி பெறுமாறு என்பது கேள்விக்குறியே ! மேலும்,அரசாங்கம் ஒரு விலையை நிர்ணயித்து, விற்க சொன்னால்? இவர்கள் ஒரு வேலையை நிர்ணயித்து விற்றால்? எப்படி இதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் ?பொது மக்களும் ஏற்றுக் கொள்வார்கள்?
