
மக்களை முட்டாளாக்கும் இந்த சோசியல் மீடியாக்கள் அரசியல் கட்சியினர் ஸ்டாலின் மிசா கைது, பற்றி ஒரு வாரமாக இதையே போட்டுக் கொண்டு இது ஒரு பெரிய செய்தி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது எங்களை போன்ற சமூக நலன் பத்திரிகையாளர்களும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும்,ஸ்டாலின் அவ்வளவு பெரிய அரசியல் தியாகி அல்ல ,அவரே ஒரு ஊழல் அரசியல்வாதி. இப்படிப் பட்டவருக்கு இவ்வளவு பில்டப் எதற்கு? என்பதுதான் இந்த பத்திரிகைகளும் ,சோசியல் மீடியாக்களும் ,தொலைக்காட்சிகளும் முக்கியத்துவம் கொடுப்பது, மக்களை முட்டாளாக்கும் அரசியல்!
மேலும்,மக்கள் எப்போது இப்படிப்பட்ட போலி அரசியலை ,உணர்கிறார்களோ, அப்போதுதான் இப்படிப்பட்ட பத்திரிகைகளின் செய்திகள், இப்படிப்பட்ட ஊழல் அரசியல்வாதிகளின் செய்திகள், தேவையற்றது என முடிவு செய்வார்கள். மேலும்,

மக்களுக்கு தேவையான செய்திகள் என்ன? அப்படிப்பட்ட செய்திகளை பத்திரிகை, தொலைக்காட்சிகள் கொடுக்காமல் ,இந்த மிசா செய்தியை வைத்து எதற்காக இந்த அரசியல்?

மேலும், ஊழலை ஆதரிக்கிற டிடிவி தினகரன் இந்த மிசாவை பற்றி அரசியல் கத்துக் குட்டிக் கெல்லாம் என்ன தெரியும்? தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அரசியலில் நேர்மை, தூய்மை ,தியாகம், ஊழலற்ற நிர்வாகம், ஆட்சி, இதுதான் மக்களுக்கு தேவையே தவிர, ஊழல்வாதிகளின், மிசா கைது தேவையில்லை. மேலும்,
இது,திமுக செய்த ஊழல் அரசியலை மறைப்பதற்கா? இல்லை, இவர் ஒரு நேர்மையான அரசியல்வாதி என்று மக்களை ஏமாற்றுவதற்கா? இதை தான் தொடர்ந்து மக்கள் அதிகாரம் செய்தித் துறையில் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட செய்திகள் எல்லாம் சர்குலேஷனில் நீங்கள் கணக்கு காட்டினால் அதற்கு என்ன அர்த்தம்? செய்தி துறை ஊழலுக்கு ஓட்டு ஊதுகிறதா?அதற்கு பதில் சொல்ல வேண்டிய கால கட்டாயத்தில் செய்தித்துறை இருக்கிறது.
மேலும், நாட்டில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு கூட இவ்வளவு ஊடக விளம்பரங்கள் இல்லை. ஊழல் அரசியல்வாதிகளுக்கு தான் விளம்பரங்கள் தேவைப்படுகிறது. தவிர,மக்கள் !அரசியலையும், அரசியல்வாதிகளையும்,இப்படிப்பட்ட பத்திரிகைகளையும், புறக்கணிக்காத வரை, உங்களுக்கான பொதுநல அரசியல்! என்பது மிகப்பெரிய ஏமாற்றம் தான் .

அதற்கு பதிலாக மக்களுக்கு கிடைப்பது இவர்களின் சுயநல அரசியலின் ஊழல்! என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்களா?
