அனைத்து மதங்களுக்கும் சம நீதி வழங்கும் ஒரு சிவில் சட்டமாக இருந்தால் அதை அரசியல் எதிர் கட்சிகள் எதிர்ப்பது தவறானது.

2029 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேலும், பிஜேபி ஆளும் மாநிலங்களிலும் , அவர்களுடைய கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலும், அதாவது 21 மாநிலங்களில், இந்த சட்டத்தை கொண்டு வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த சட்டத்தை காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், அனைவரும் எதிர்கின்றனர். இது தவிர ,முஸ்லிம் மத அமைப்பை சேர்ந்தவர்கள் இதை அதிகமாக ஆண்கள் எதிர்க்கின்றனர்.
மேலும்,பெண்கள் இதை வரவேற்கின்றனர். பொது சிவில் சட்டம் என்பது மதம் சார்ந்த சட்டம் இல்லை. பிறகு ஏன் ?இவர்கள் இதை மதம் சார்ந்த சட்டமாக திரித்து பேசி, மக்களை ஏமாற்றுகிறார்கள் எதிர்கட்சிகள்?

மேலும் இந்த சிவில் சட்டம் போடப்பட்டது, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்டது தான், ஆனால் அப்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் இந்த சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வர முடியவில்லை.
அது இப்போது புதிதாக போடப்பட்ட சட்டமல்ல, அது. அனைவருக்கும் ஒரு பொதுவான சட்டம். மனித வாழ்வியலின் சமத்துவத்தில் உரிமை பிரச்சனை, சொத்து பிரச்சனை, பாலியல் பிரச்சனை, குடும்ப பிரச்சனை ,உறவுகள் பிரச்சனை, அனைவற்றிலும் இது ஒரு சமத்துவத்தை ஏற்படுத்துகின்ற ஒரு சட்டமாகத்தான் இருக்கிறது.

இருப்பினும்,இதில் மதம் எங்கே இருக்கிறது? உன் மதத்தில் உன் வழிபாட்டை நீ செய்து கொள்ளலாம் .உன் கடவுளை நீ வழிபட்டுக் கொள்ளலாம். பிறகு ஏன் ?இந்த சிவில் சட்டத்திற்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்?
தனிமனித ஒழுக்கத்தில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அளவுகோலாக கொண்டு வரும்போது, அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடிய கிரிமினல்கள் பயப்படுகிறார்கள். இதுதான் இவர்களுக்கு முக்கியமான ஒரு பயம்.

மேலும்,பெண்கள் எல்லா மதத்தினரும் ஒரே மாதிரியான சட்டத்தின் கீழ் அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்களாக இருப்பார்கள் .இது முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பயத்தை கொடுக்கிறது. ஆனால், முஸ்லிம் பெண்கள் இதை வரவேற்கிறார்கள்.
ஏனென்றால், எல்லா மதத்தை காட்டிலும், முஸ்லிம் மதத்தில்தான் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் ஆண்கள் ,பெண்களுக்கு சுதந்திரம் கொடுப்பதை ஏற்றுக் கொள்வதில் ஒரு துளி கூட நூத்துக்கு 99 சதவீதம் பேர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
அதனுடைய விளக்கம் அவர்களுக்குத்தான் அது தெரியும் என்று நினைக்கிறேன். மேலும்,ஒரு சில ஆட்டோ ஓட்டுநர்கள் என்னிடம் ஆட்டோவில் வரும் போது, பேசியதில் அவர்கள் இதற்கு எதிர்ப்பு தான் தெரிவிக்கிறார்கள்.

மேலும், இந்த பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கு தேவையா?
மதம் வேறாக இருக்கலாம்; ஆனால் சிவில் உரிமைகளில் சட்டம் ஒன்றாக இருக்க வேண்டுமா?
இந்தியாவில் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code – UCC) குறித்த விவாதம் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.
மேலும்,திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு, பராமரிப்பு போன்ற தனிநபர் சிவில் விஷயங்களில், மத அடிப்படையிலான தனிச்சட்டங்களுக்கு பதிலாக, அனைவருக்கும் பொதுவான சட்டத்தை உருவாக்குவதே இதன் அடிப்படை நோக்கம்.
மேலும்,இந்திய அரசியலமைப்பின் 44-வது பிரிவு, இந்தியா முழுவதும் குடிமக்களுக்கு பொதுவான சிவில் சட்டத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் அதை எதிர்க்கிறார்கள்.
மேலும் ,இந்த சட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை.தவிர,பொது சிவில் சட்டம் கொண்டு வருவதால், கிடைக்கக்கூடிய நன்மைகள்?
சட்டத்தின் முன் அனைவரும் சமத்துவம்! இந்தியாவில் வாழும், ஒவ்வொரு இந்தியனும், ஒரே சட்டத்தில் வாழ்வது இதில் என்ன தவறு?

மேலும்,ஒரே நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும் ,திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை போன்ற சிவில் விஷயங்களில் ஒரே சட்டம் இருந்தால், சட்ட சமத்துவம் வலுப்பெறுகிறது.தவிர,
பெண்களின் உரிமை பாதுகாப்பு,
திருமணம், விவாகரத்து, பராமரிப்பு மற்றும் சொத்து வாரிசுரிமையில் பெண்களுக்கு சமமான உரிமைகளை உறுதி செய்யும் சட்டங்களை உருவாக்க UCC வாய்ப்பளிக்கலாம்.
மேலும்,சட்ட நடைமுறை எளிமையாக்கப் படுவதால், பல மதத்தினருக்கும் இது ஒருங்கிணைந்த சட்டமாக இருக்கிறது.
இதனால்,பொதுமக்களுக்கும் , நீதிமன்றங்களில் சட்ட நடைமுறைகள் எளிதாகலாம்.
மேலும்,மதத்தைத் தாண்டிய குடிமக்கள் உரிமை இந்த சட்டத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. தவிர ,இது
ஒருவரின் மதம் அல்ல, அவர் ஒரு இந்தியக் குடிமகன் என்பதே அவரது சிவில் உரிமைகளுக்கான அடிப்படையாக இருக்க வேண்டும் என்ற கருத்தை UCC வலுப்படுத்தலாம்.
ஆனால், ஒரு சிலருக்கு சில பாதிப்புகளும் உள்ளன. அது
மத மற்றும் கலாச்சார உரிமைகள்,
திருமணம், குடும்பம், வாரிசுரிமை போன்றவற்றில் பல்வேறு சமூகங்களுக்கு தனித்துவமான பாரம்பரியங்கள் உள்ளன. அவை முழுமையாக புறக்கணிக்கப்பட்டால் எதிர்ப்பு உருவாகலாம்.

மேலும்,சிறுபான்மை சமூகங்களின் அச்சம்:
பொது சிவில் சட்டம் என்ற பெயரில் பெரும்பான்மை சமூகத்தின் நடைமுறைகள் மற்ற சமூகங்களுக்கு திணிக்கப்படுகின்றன என்ற எண்ணம் உருவாகக்கூடாது. இது தவிர,
பழங்குடியினரின் பாரம்பரிய உரிமைகள்,
இந்தியாவின் பல பழங்குடி சமூகங்களுக்கு தனித்துவமான குடும்ப மற்றும் சொத்து நடைமுறைகள் உள்ளன. அவற்றைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் அவசியம்.
புதிய சட்டத்தால் ஏற்படும் மாற்றங்கள்!
ஏற்கனவே நடைபெற்ற திருமணங்கள், சொத்து உரிமைகள், உயில்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் போன்றவற்றை புதிய சட்டத்துடன் எவ்வாறு இணைப்பது என்பதில் தெளிவான நடைமுறை தேவை !.
மேலும், நாட்டு மக்களுக்கு எப்படிப்பட்ட சிவில் சட்டம் தேவை அதுதான் முக்கிய கேள்வி?
பொது சிவில் சட்டம் என்ற பெயரில் ஒரு மதத்தின் சட்டத்தை மற்ற மதத்தினருக்கு திணிப்பது சரியான அணுகுமுறை அல்ல.
அதேபோல், மத வேறுபாடுகளை காரணம் காட்டி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் அடிப்படை சிவில் உரிமைகள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சரியான அணுகுமுறை என்ன?

மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.கலாச்சார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்.
குழந்தைகளின் நலன் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.
சொத்து மற்றும் வாரிசுரிமையில் நியாயம் இருக்க வேண்டும்.
அனைத்து குடிமக்களுக்கும் சட்டத்தின் முன் சமத்துவம் இருக்க வேண்டும்.இந்த அடிப்படைகளில் அனைத்து சமூகங்களுடனும் விரிவான ஆலோசனை நடத்தி ஒரு சட்டம் உருவாக்கப்பட்டால், அது சமூக ஒற்றுமைக்கும், சட்ட சமத்துவத்திற்கும் முக்கியத்துவம் ஆனது. என்பது
மக்கள் அதிகாரத்தின் கருத்து.
மதம் வேறாக இருக்கலாம்,வழிபாடு வேறாக இருக்கலாம், கலாச்சாரம் வேறாக இருக்கலாம்.,ஆனால் ,ஒரு குடிமகனின் அடிப்படை சிவில் உரிமைகளில் சட்டம் நியாயமாகவும், சமமாகவும் இருக்க வேண்டும் என்பதை பொது சிவில் சட்டம் வலியுறுத்துகிறது.மேலும்,
பொது சிவில் சட்டம் என்பது மதங்களை ஒன்றாக்கும் சட்டம் அல்ல,குடிமக்களின் சிவில் உரிமைகளில் சமத்துவத்தை உருவாக்கும் சட்டமாக அது இருக்கிறது.
மக்கள் நலனில் !மக்களின் குரலாக… !என்றும் …… மக்கள் அதிகாரம் .
