
தமிழ்நாட்டில் சமூகம் சார்ந்த சிறு பத்திரிகைகள் மற்றும் சமூக நலன் சார்ந்த சுயாதீன இணையதள ஊடகங்கள், தொடர்ந்து 50 ஆண்டு காலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் பிரச்சனை.
மேலும்,இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண, இந்த பத்திரிகைகளுள் ஒற்றுமை என்பது மிகவும் குறைவு. இதற்கு தகுதியான பத்திரிகைகளும், அதுவும் மிகக் குறைவு.

இது தவிர,இதில் போட்டி வேறு ,சிறு பத்திரிக்கை என்றால், எல்லாம் ஒன்று தானே ,அப்படி என்றுதான் அவர்களுடைய கணக்கு, அந்த கணக்கைக்குள் இருக்கக்கூடிய வேறுபாடுகள், இவர்களுக்கு அர்த்தம் தெரியாது.
மேலும், இங்கே,நீயும் ரிப்போர்ட்டர், நானும் ரிப்போர்ட்டர், ஐடி கார்டு இருந்தால், எல்லோரும் ரிப்போர்ட்டர். என்பது போல, பத்திரிக்கைக்கு RNI வாங்கிவிட்டால் , எல்லாம் பத்திரிகை தான். அது காப்பி அடித்தாலும் பத்திரிகை தான், வந்த வரைக்கும் வாட்ஸ் அப்பில்,நடத்தினாலும், பத்திரிகை தான்,

இந்த பிரச்சனைக்கு செய்தித்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து 10 ஆண்டுகளாக போராடி வருகிறது
மேலும் ,கார்ப்பரேட் பத்திரிகையில் வேலை செய்யக்கூடிய நிருபர்கள், எடிட்டர்கள் இவர்களெல்லாம் சமூகநலன் பத்திரிகைகளுக்கு, எப்படி முன்னேற அவர்கள் நல வாரியத்தில் பரிந்துரை செய்வார்கள்? அவர்கள் வளர்ச்சியை தான், அவர்கள் பார்த்துக் கொள்வார்களே
தவிர, இந்த பத்திரிகைகள் வளர்ந்தால், அது நமக்கு போட்டி என்றுதான் நினைப்பார்கள். இதில் செய்தித் துறையின், நியாயமான நேர்மையான தேர்வா? இது?

இப்படிதான், பத்திரிக்கை துறையின்,நல வாரியத்தில் நிர்வாகிகளாக பொறுப்புக்களை அமைச்சர் ராஜ்மோகன் நியமித்தாரா? மேலும், அதற்கு நானும் தான் விண்ணப்பம் செய்தேன். தகுதியான பத்திரிகையாக என்னை சமூக நலன் பத்திரிகைகளின் பிரதிநிதியாக தேர்வு செய்திருக்க வேண்டும்.மேலும், இப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு ஒரே ஒரு பிரதிநிதியாவது அங்கே இருக்கிறார்களா?

கேட்டால், ஒரு அதிகாரி சொன்னார். தீக்கதிர் என்ற பெயர் சொன்னார். ஒரு கட்சி பத்திரிகை நல வாரியத்தில் இருக்கலாம் .ஆனால், சமூக நலன் பத்திரிக்கை இருக்கக் கூடாதா?
மேலும்,இங்கே, பத்திரிக்கை என்பது பணத்தை வைத்து தீர்மானிக்கிறார்களா? இல்லை கோடீஸ்வரன் பத்திரிகைகள் தீர்மானிக்கிறார்களா? யார் கோடீஸ்வரன் பத்திரிக்கையின் பணமா ? அதுதான் சர்குலேஷன். இது தெரியாத, இந்த சிறிய பத்திரிகைகளுக்குள்ளே இப்படிப்பட்ட மனநிலை இருக்கிறது.
ஏனென்றால், செய்தித் துறை இன்னும் செய்திக்கான அர்த்தம் தெரியாமல் செய்தித் துறையின் அதிகாரிகள் இருந்து வருவதால் தான், இந்த பிரச்சனை தொடர்கிறது.
அதுமட்டுமல்ல ,தொடர்ந்து இப் பிரச்சனை 50 ஆண்டு காலமாக போய்க் கொண்டிருப்பதற்கு செய்திக்கு அர்த்தம் தெரியாமல், சர்குலேஷனே செய்தி என்று செய்தித்துறை முடிவு செய்து, அதுவே கொள்கை முடிவாக அரசியல் அதிகாரத்தால், 50 ஆண்டு காலமாக ,இத் துறையை பாழ் படித்தி வருகிறார்கள்.

மேலும், தகுதியான சில பத்திரிகைகள், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னால் வெளி வந்த பத்திரிகைகள், பல மாவட்டங்களில், தவறுகளை வெளிப்படையாக சுட்டிக்காட்டக் கூடிய பத்திரிகைகள், உண்மைகளை மக்களிடம் கொண்டு, சேர்த்த பத்திரிகைகள் எவ்வளவோ பல காணாமல், போய்விட்டது.
அப்போதே என்னிடம் தெரிவித்தார்கள், எங்களால் தொடர்ந்து பத்திரிகை நடத்த முடியவில்லை சார்.அரசும் இதற்கு ஆதரவு கொடுக்கவில்லை.

மேலும்,இப்படிப்பட்ட சமூக நலன் பத்திரிகைகள், ஆட்சி ,அதிகாரத்தில் இருப்பவர்களால் ,எப்படி ஒடுக்கப் படுகிறது? என்பது இதுவே முன்னுதாரணம். மேலும்,
தகுதி இருந்தும், பணம் இல்லாததால், அவர்களால் தொடர முடியாமல் எத்தனையோ பேர் ,பத்திரிகையை விட்டு விட்டார்கள். இதனுடைய ஆணிவேர் எது ?என்பதை புரிந்து ,மக்கள் அதிகாரம் பத்திரிகை, தொடர்ந்து, இதை எதிர்த்து குரல் கொடுத்து ,போராடி வருகிறது.

மேலும், மக்களுக்கான ஆட்சி என்று சொல்லும் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில், இந்த ஆட்சியிலும், இதே கார்ப்பரேட்டுக்கு தான், செய்தி துறை அமைச்சர் ராஜ் மோகன் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். இது பற்றி முதல்வர் விஜயின் கவனத்திற்கும், மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும்,

வரும் ஆண்டிலாவது, தகுதியான பத்திரிகைகளுக்கு! காலத்திற்கு ஏற்ப பத்திரிக்கை துறையில் மாற்றம், செய்தித் துறையில் கொண்டு வருவார்களா? ஏனென்றால், இதற்குள் அரசியல் இருந்தால் கூட பரவாயில்லை.
அரசியலுக்குள் பத்திரிகை இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதனால்தான் , இந்த சமூகநலன் பத்திரிகைகளுக்கு, சலுகை, விளம்பரங்கள் கிடைக்காமல் போராடுகிறது. மேலும்,
இப்படிப்பட்ட கார்ப்பரேட் பத்திரிகைகளால் தான், நாட்டில் ஊழல்கள் ,ஊழல்வாதிகள் ஊக்குவிக்கப் படுகிறார்கள். அவர்கள் சொல்வதில் எது உண்மை? எது பொய்? என்பதை பரிசீலனை செய்து செய்தியாக, மக்களிடம் கொடுக்க வேண்டும்.

ஆனால், அவர்கள் எவ்வளவு பொய் சொன்னாலும், அது அப்படியே மக்களிடம் சொல்வதற்கு பத்திரிக்கையும், தேவையில்லை. தொலைக்காட்சியும் தேவையில்லை. இது என்ன புரோக்கர் வேலையா?
மேலும்,மக்களின் வரிப்பணம் மட்டும் கோடிக்கணக்கில் வேண்டும். ஆனால் மக்களுக்கான பத்திரிகை, தொலைக்காட்சிகளாக செயல்படக்கூடாது. தவிர,அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகைகளுக்கும் ,வியாபார பத்திரிகைகளுக்கும் அதற்கு முன்னுரிமையா?
மேலும்,இப்போது கூட திமுக ஊழல்களை நியாயப்படுத்தி பேசுகிறார்கள் .என்றால், இப்படிப்பட்ட ஊடகங்கள் அதை அப்படியே போட்டுக் கொண்டிருக்கிறது. இது உண்மையா? பொய்யா ?என்பதை தேர்வு செய்து கொடுக்க வேண்டிய கடமை நான்காவது தூணுக்கு உண்டு.

மேலும்,இது தெரியாத செய்தித் துறை அதிகாரிகள் ,தினசரி பத்திரிக்கைக்கு ஒரு சலுகை, வார பத்திரிக்கைக்கு ஒரு சலுகை, மாத பத்திரிக்கைக்கு ஒரு சலுகை , என்று பிரித்து, செய்திக்கு அர்த்தம் தெரியாத செய்தி துறை!தினசரி மக்களிடம் அரசியல் கட்சியினர் சொல்லும் பொய்களை எல்லாம் பேப்பரில் அச்சடித்துக் கொடுப்பதற்கு பெயர் பத்திரிக்கையா?

இதற்கு முக்கிய காரணம்,விளம்பர செய்திக்கும் , செய்திக்கும் அர்த்தம் தெரியாமல், செய்தித் துறை !இருப்பதால், இப்படிப்பட்ட தவறுகள் தொடர்கிறது. மேலும்,நல வாரியத்தில்,இவர்களே எந்த பத்திரிக்கைக்கு கொடுக்கலாம்? எந்த பத்திரிக்கைக்கு கொடுக்கக் கூடாது? என்று நல வாரியத்தின் பொறுப்பில் உட்காந்து கொண்டால் ,இவர்கள்தான் தீர்மானம் செய்வார்களா?

அதாவது கார்ப்பரேட்டுக்கு தேவையான பத்திரிகைகளுக்கு எல்லாம் சலுகை, விளம்பரங்கள் பல கோடி கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். அதற்கு தான் பஸ் பாஸ் கொடுக்க வேண்டும் .அதற்கு தான் விளம்பரங்கள் கொடுக்க வேண்டும். இந்த பத்திரிகைகளுக்கான பிரதிநிதிகள் ,ஒருவராவது இருந்தால்தானே, அது பற்றி பேசுவார்கள்.
மேலும்,இந்த பத்திரிகைகளுக்கான பிரதிநிதிகள் யார் ?அதை ஒருவர் கூட, செய்தித் துறையில் சிந்திக்கவில்லை. தவிர ,பத்திரிக்கை என்றால், எது சொன்னாலும், பத்திரிகை தான். ஆனால், அதனுடைய தரத்தை புரிந்தவர்கள், குறிப்பிட்டு சதவீத மக்கள் இருக்கிறார்கள். மேலும்,

பத்திரிக்கை துறையில் இருக்கக்கூடிய நிருபர்கள், இது போன்ற சிறிய பத்திரிகைகள், அரசியல் கட்சியினர் போல், போட்டி போடுகிறார்கள். இங்கே அந்தப் போட்டி செல்லாது. அரசியல் கட்சியில், உடம்பு கனமாக இருப்பவன், கூட்டத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டு வருபவன், அரசியல் கட்சிக்கு அது முக்கியமானது. அங்கே அவன் சொல்வது தான் சட்டம் என்று சொல்லிக் கொண்டிருப்பான். இங்கே அது நடக்காது.

மேலும்,இது அறிவு சார்ந்த போட்டி ! இங்கே ஜெயிப்பது அறிவை பயன்படுத்துபவர்கள் மட்டும்தான் ஜெயிக்க முடியும். ஆனால் ,தொடர்ந்து அறிவு வீழ்த்தப்பட்டு ,அரசியல், அதிகாரம் ஜெயிக்கிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ,மக்கள் அதிகாரம் சார்பில், நீதித்துறையை தவிர ,வேறு வழி இல்லை. எனவே,தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் இது குறித்து மத்திய மாநில அரசின் செய்தித் துறை !விசாரணை அறிக்கை கொடுக்க புகார் கொடுக்கப் பட்டுள்ளது.

மேலும்,காலத்திற்கு ஏற்ப செய்தி துறையில், மாற்றங்கள் அவசியம். மாற்றத்தை நோக்கி ,செய்தித்துறை கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை.தவிர,
தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதற்குள் இருக்கும் அரசியல் அதிகாரத்திற்கு,முற்றுப்புள்ளி வைத்து, பத்திரிக்கை துறையின் எதிர்கால வளர்ச்சிக்கும், நாட்டு மக்களின் நலனுக்கும், தேச நலனுக்கும், சமூக நலனுக்கும், உங்களுடைய தீர்ப்பு அவசியமானது என்பதை வலியுறுத்தி! இச் சிறப்பு கட்டுரையை முடிக்கிறேன் – ஆசிரியர்.