முன்னாள் நீதி அரசர் !கற்பக விநாயகம் நீதித்துறையில்! நீதியும், ஆன்மீகமும் தன் வாழ்க்கை பயணத்தில் ….!

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நீதித்துறையில் எத்தனையோ நீதிபதிகள் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால், குறிப்பிட்ட சிலர் மட்டுமே, அந்த துறையில் நீதியரசர் என்ற தகுதிக்கு முத்திரை பதித்து விட்டு செல்கிறார்கள்.

அப்படி சென்றவர்களில், செல்பவர்களில், முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகமும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் என்னிடமே சொல்லியிருக்கிறார். நான்வெஜ் சாப்பிடுவேன். அப்போதெல்லாம் எனக்குள், ஒரு முரட்டுத்தனமான தைரியம் இருக்கும்.

அதன் பிறகு, எனக்கு சாய்பாபாவின் தொடர்பு கிடைத்தது .அங்கு அடிக்கடி சென்று வர வாய்ப்புகள் கிடைத்தது. பிறகு, நான் சாய்பாபாவின் பக்தன் ஆனேன் . அதிலிருந்து என்னிடம், மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தது.

படிப்படியாக நான்வெஜ் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். அந்த மாற்றங்கள் என்னை ஆன்மீகப் பயணத்தில் முழுமையாக அழைத்துச் சென்றது. அப்படி செல்லும் போது ,எத்தனையோ கோடிகள் , நான் பல வழக்கை சந்திக்கும்போது, என்னிடம் வந்து நின்றது. அதைப் பற்றி சிந்திக்கவும் இல்லை .கிட்டவே வரக்கூடாது என்று கட்டளையிட்டு ,துரத்தி விட்டேன்.

இங்குதான் ஐயாவின் ஆன்மீகம் அடங்கியிருக்கிறது. அவர் அந்த பணத்திற்கு ஆசைப்பட்டு இருந்தால், தெய்வத்தின் அருள் இன்று இவருக்கு கிடைக்காது. அந்த தெய்வ அருளால்தான், மனிதன் தெய்வமாக முடியும். மனிதன் தெய்வமாக மாற பல நிலைகளை கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.

அந்த சோதனைகளுக்கெல்லாம் ஈடு கொடுத்து யாரெல்லாம் தாங்க முடியுமோ, அவர்கள் தான் ,அந்த தெய்வ நிலையை அடைய முடியும். இன்று பணக்காரன், கோடீஸ்வரன், இந்த பணத்திற்கும், சொத்துக்கும், காவல் காத்து கொண்டிருப்பார்களே தவிர, அவர்களால் தெய்வ நிலையை அடைய முடியாது.

மேலும், பதவிக்கு வரலாம், பணம் சம்பாதிக்கலாம் , அது நேர்மையான வழியாக இருக்க வேண்டும். அந்த வழிதான், மனிதன் தெய்வமாக்குமே தவிர குறுக்கு வழியில் செல்பவர்கள் எக்காலத்திலும் அந்த தெய்வீக நிலை அடைய முடியாது.

அந்த நிலைக்கு தான் மனிதனுடைய பிறவி இருக்க வேண்டும். பிறப்பின் நோக்கமும் அதுதான். அதற்குள் எத்தனையோ, பேராசைக்குள், சுற்றி வரும் படகாக வாழ்க்கையில் பயணிக்கிறார்கள்.

அந்த பயணத்தில் இவர்களுடைய வாழ்க்கையின் அர்த்தம் என்ன? என்று தெரியாமலே, செத்து விடுகிறார்கள். மீண்டும் பிறவி என்பது தொடர்கிறது. அந்த பிறவியிலும் ,தன் பிறவியின் நோக்கம் என்ன? கணக்கு என்ன? எதுவும் தெரியாமல் வாழ்ந்து விட்டு சாகிறார்கள்.

இப்படி போவதும், வருவதும் செத்து மடிவதும், வாழ்க்கை என்றால்! இந்த வாழ்க்கையை எப்போது வாழ்ந்து முடிக்கிறார்கள்? அதுதான் இறைவனின் கணக்கு . அந்தக் கணக்கிலே, விதியின் கணக்கும் எழுதப் பட்டிருக்கிறது. அதில் சந்தோஷமும் துக்கமும் இறைவன் கொடுத்தது.

இதிலிருந்து தன்னுடைய விதியின் கணக்கை படிக்கும் போது, வாழ்க்கை ஆன்மீகத்தில் கொண்டு செல்கிறது. இந்த ஆன்மீக பயணமே மனிதனை மாமனிதனாகவும், சித்தன் ஆகவும், மகான்களாகவும், தரத்தை உயர்த்தி பிறவா பெருநிலையை இறைவன் திருவடியில் கொண்டு போய் நிறுத்துகிறது.

அப்படி ஆன்மீக பயணத்தில்! நீதி அரசர் கற்பக விநாயகம், சாய்பாபாவின் அன்புக்கு பாத்திரமானவர். அதற்காக இவர் எந்த பஜனையோ அல்லது சொற்பொழிவோ செய்து கொண்டிருப்பவர் அல்ல. வாய்ப்பு கிடைத்தால் சொற்பொழிவு ஆற்றுவார். மற்ற நேரங்களில் இறைவனை மனதால் நினைப்பதோடு சரி.

மேலும்,கடவுள் ஒரு மனிதனின் வாழ்க்கையை அவரவர் கர்மாவால், தீர்மானிக்கிறார். அது நல்லதாக இருந்தால், நல்ல கர்மாவாகவும், கெட்டதாக இருந்தால், கெட்ட கர்மாவாகவும் ,அவர்களுடைய வாழ்க்கை அமைந்து விடுகிறது.

இதிலிருந்து எப்படி தெய்வ நிலை அடைவது? ஒரு பெரிய ரவுடி கெட்டவன் .அவனும் தெய்வ நிலையை அடையலாம் .அது தான் நம்முடைய இந்து மதம். அதற்கு வால்மீக முனிவரே ஒரு சாட்சி!

மேலும்,ஆரம்பத்தில் !அவருடைய வாழ்க்கை ஒரு வழிப்பறி கொள்ளைனாக இருந்து, பிறகு, இறை அருளால் முனிவராகிறார். இதுதான் மனிதன் தெய்வமாகலாம். இதை நம் சித்தர்கள் ,மகான்கள் இந்து மதத்தில் நமக்கு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டி, எழுதி வைத்துவிட்டு போயிருக்கிறார்கள்.

ஆகவே, முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம் பதவி இல்லையென்றாலும், அவரைத் தேடி இன்றும் பத்து பேர் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த சமூக சேவை! அவரை சமூகத்தில் மா மனிதராக உருவாகப் படுத்திள்ளது.

மேலும்,இவரைப் பற்றி நீதியின் நிழல் என்ற திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்றால், நீதித்துறைக்கு இவர் ஒரு சொத்தை கொடுத்து விட்டு செல்கிறார். அதுதான் நீதிக்காக, நீதிபதியாக இவர் வாழ்க்கைப் போராட்டத்தின் வெற்றி .

ஒரு சாதாரண வழக்கறிஞராக இருக்கும்போது, இவருடைய வாழ்க்கை எவ்வளவு போராட்டங்கள்? நீதிபதியான பிறகு, நீதியை காப்பாற்ற எவ்வளவு போராட்டங்கள்? இதுதான் நீதியின் நிழல்,திரைப்படம் …!

இதில் ,ஆன்மீகப் பயணத்தில் இவருடன் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் இறையருள்! இந்த அளவுக்கு உயர்வை கொடுத்துள்ளது என்பது மறுக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *