பிஜேபியின் தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில் கட்டுவதாக நீண்டகால வழக்கு போராட்டத்தின் வெற்றி அறிவிப்பு. அதன்படி ,பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இதை பல கோடி செலவில் மிகப் பிரம்மாண்டமான கோயில் கட்டி முடிக்கப்பட்டு, ஜனவரி 22ஆம் தேதி இதற்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இக்கோயில் நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க கோயில் .புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இது ராமர் பிறந்த பூமி. ராமன் சத்தியத்தையும், தர்மத்தையும் கடைபிடித்து அரசு செய்தான் என்பது ராமாயணம் வரலாறு. இந்த வரலாற்று காவியத்தின் நாயகனாக பிரதமர் மோடி, நாட்டு மக்களின் நெஞ்சங்களில் அவரை வரவேற்கும் காட்சி ,வேறு யாருக்கும் இல்லாத ஒன்று .
எத்தனையோ சாதுக்கள், பொதுமக்கள், சன்யாசிகள் பிரதமர் மோடியை வரவேற்கும் காட்சி. மேலும், நான் கேள்விப்பட்டதில் ஒரு சில ஆன்மீகவாதிகள் மோடி ஒரு யோகி என்று தான் என்னிடம் தெரிவித்து இருக்கிறார்கள். அதனால் தான், இவர் தனக்கு அடுத்தது இன்னொரு உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகியை கைகாட்டி உள்ளார்.
இப்படிப்பட்ட ஆன்மீக நிலையில் உள்ள உயர் ஆத்மாக்களால் தான், நாட்டில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்ட முடியும் .அரசியல் என்பது அதர்மத்தின் ஆட்சி அல்ல, தர்மத்தின் ஆட்சியாக இருக்க வேண்டும் .அது புண்ணிய ஆத்மாக்களால் தான் முடியும் .பாபா ஆத்மாக்கள் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம்? கொலையடித்து அதை சட்டப்படி சட்டத்தின் ஓட்டைகளை தேடிக் கொண்டிருக்கலாம்.அதன் மூலம் நீதிமன்றத்திற்கு நீதிக்கு பங்கத்தை ஏற்படுத்தலாம்.
இதுதான் தர்மத்திற்கும் ,அதர்மத்திற்கும் உள்ள ஆட்சி வித்தியாசம். மக்கள் தர்மத்தின் பக்கமா? அல்லது அதர்மத்தின் பக்கமா? என்பதே மக்களின் முடிவு.