கேரளாவுக்கு மாஃபிக்கள் மூலம்  சவுடு மண், கிரவல் மண், மலை மண்  கொள்ளை அச்சத்தில் – தேனி மாவட்ட மக்கள் .

அரசியல் உணவு செய்தி சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

தேனி மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் தினமும் கேரளாவுக்கு மாபியாக்கள் மூலம் சவுடு மண், கிராவல் மண், மலை மண், கொண்டு செல்லப்படுகிறது .

இந்த 500க்கும் மேற்பட்ட லாரிகள் நெடுஞ்சாலை வழியாக சென்றால் டோல்கட்டுக்கு பணம் செலுத்த வேண்டி வருகிறது. அடுத்தது, எத்தனை லோடு தினமும் இந்த லாரிகள் கொண்டு செல்கின்றன? என்பது கேமராவில் பதிவாகிவிடும் .அதனால், இந்த கேரளா லாரிகள் கிராம சாலைகள் வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தரம் குறைந்த சாலைகள் தான் கிராமத்தில் போடுவது வாடிக்கையான ஒன்று.

அப்படி போடப்பட்ட சாலைகள் அனைத்தும் தற்போது குண்டும் குழியுமாக ஆகியுள்ளது என்று தேனி மாவட்ட பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது பற்றி பொதுமக்கள் காவல்துறையில் புகார் அளித்தாலும் எடுபடவில்லை  என்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் முதல் வருவாய்துறை வரை எந்த துறையில் புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கனிமவளத் துறையில் எத்தனை லோடு தினமும் எடுக்கப்பட வேண்டும் ? எத்தனை அடி ஆழம் எடுக்கப்பட வேண்டும் ?என்ற கணக்கு எதுவும் கிடையாது .அதனால், மக்கள் கேள்வி கேட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.

 அதனால் கீழ இருந்து மேல் அதிகாரிகள் வரைமாதம் குறிப்பிட்ட தொகை, இந்த மாபியாக்களின் கரன்சி, அதிகாரிகளுக்கு, அரசியல் கட்சியினருக்கு, ஆட்சியாளர்களுக்கு ,கொடுக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால், தேனி மாவட்டத்து இயற்கை வளம் கேரளாவுக்கு கடத்துவதில் ஆட்சியர்கள் முதல் அதிகாரிகள் ,அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து லாபம் பார்ப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.அதனால் திமுக ஆட்சி நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் விவசாயிகளும், பொதுமக்களும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர் .

செய்தியாளர் முரளி மற்றும் ஒளிப்பதிவாளர் பாண்டீஸ்வரன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *