ஆன்மீக ஈடுபாடு உள்ள மக்களால் தான், ஓரளவு மனசாட்சியுடன் வாழ முடியும். அவர்கள் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த சமுதாயத்திற்கு ,சட்டத்திற்கு பயப்படுகிறார்களோ, இல்லையோ கடவுளுக்கு பயந்து நிச்சயம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .அப்படி கடவுளுக்கு பயந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், அரசியலில் நேர்மையான, நல்லாட்சியை அவர்களால் கொடுக்க முடியும்.அப்படித்தான் உத்தர் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதற்கு உதாரண புருஷன் ஆக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
உத்தரபிரதேச மாநிலம் பின்தங்கிய மாநிலம், ஊழல் நிறைந்த மாநிலம், மாயாவதி ஆட்சியில் மிக கேவலமான ஆட்சி நடந்த ஒரு மாநிலம் உத்தர பிரதேச மாநிலம். அந்த மாநிலத்தில் இப்போது ஒரு சிறப்பான ஆட்சி, ஊழலற்ற ஆட்சி, நேர்மையான நல்லாட்சி யோகி ஆதித்யநாத் ஒருவரால் மட்டும் தான் கொடுக்க முடிந்தது. அப்படி என்றால், இவர் எப்படிப்பட்ட தெய்வ பக்தியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்? அவரிடம்எந்த வெளி வேஷங்கள் கிடையாது .சாதாரண மக்களை போல், இனிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட உத்தர பிரதேச மக்கள், உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்.
இன்று மற்ற அரசியல் கட்சிகள் சிறுபான்மை மக்களுக்காக பெரும்பான்மை மக்களான இந்துக்களின் ஆன்மீகத்தை அலட்சியப்படுத்தி, கேவலப்படுத்தி பேசி இருக்கிறார்கள் .அதுவும் தமிழ்நாட்டில் அதிமுக ,திமுக வரலாறு நன்றாக தெரியும். பேசுவதற்கும் ,செய்வதற்கும் சம்பந்தம் இருக்காது. இவர்களால் நாட்டில் ஊழலும், ரவுடிசம் தான் தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைய செய்ய முடிந்தது. உழைக்கும் மக்களை முன்னேற்றுவதை விட்டுவிட்டு கட்சி என்ற வெத்து, வெட்டுக்களையும் ,பொரிக்கை ரவுடிகளையும் ,பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
காஞ்சிபுரத்தில் ஆயிரம் வருஷம் பழமையான விநாயகர் கோயிலை இடிக்கிறார்கள் ஊழல்வாதிகள் .
இதைப் பற்றி எந்த ஊடகமும், மக்களுக்கு தெளிவுபடுத்தவில்லை. மக்கள் தெரியாமல் பாழ் கிணற்றில் விழுந்தால், அதற்கு பின்னால் தள்ளி விடுவது போல் இந்த ஊடகங்கள் தமிழ்நாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறது. அதாவது பணம் கொடுத்தால், நீங்கள் எப்படிப்பட்ட பாழ் கிணற்றில் விழுந்தாலும், நாங்கள் வரவேற்க youtube சேனல்களிலும், பத்திரிக்கை தொலைக்காட்சிகளிலும், செய்திகளை போட்டு இதுதான் பத்திரிக்கை .
இதற்கு மேல் எதுவும் இல்லை என்று காட்டிக் கொண்டிருப்போம். தமிழ்நாட்டிற்கு தேவை உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போல ஒருவர் வந்தால் தான் தமிழ்நாட்டை சரி செய்ய முடியும் . மேலும், இன்று ராமர் கோயில் அயோத்தியில் கட்டப்பட்டது. அது இந்துக்களின் மிகப்பெரிய ஒரு ஆன்மீக ஸ்தலமாக கூட விளங்கலாம்.
ஆனால், இதில் அரசியல் கட்சிகள் மதச்சார்பின்மை, மதச்சார்பு இதையெல்லாம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க பேசிக் கொண்டிருக்கிறார்கள் .ஏன்? நீங்கள் போய் ஒரு தர்காவை கட்டிக் கொடுங்கள் .யாராவது இந்துக்கள் வேண்டாம் என்று சொல்லப் போகிறார்களா ?அல்லது ஒரு பெரிய சர்ச் கட்டிக் கொடுங்கள் அதை யாராவது வேண்டாம் என்று இந்துக்கள் சொல்வார்களா? அவரவர் மத நம்பிக்கை, ஈடுபாடு உள்ள மக்களுக்கு தேவையானது. இதில் எதற்கு உங்களுடைய அரசியல்?
அரசியலில் ஊழலற்ற ஆட்சி, நேர்மையான ஆட்சி எப்படி கொடுக்க வேண்டும்? என்று உங்கள் கட்சியினருக்குவது தெரியுமா? அல்லது உங்களுக்காவது தெரியுமா? அது தெரியாமல் மதத்தையும், ஜாதியும் கேவலமாக அரசியலில் கொண்டு வந்து, கீழ்த்தரமான ஒரு அரசியலை, மக்களிடம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் .அரசியல் வரலாறு ,அரசியல் என்றால் என்ன ?ஆட்சி நிர்வாகம் என்ன? என்று தெரியாத மக்களிடம், எதை சொன்னாலும் விசில் அடித்து, கைதட்டுபவர்களிடம் பேசிக் கொண்டிருக்கலாம் .
ஆனால் ,விவரமானவர்களிடம் அதையெல்லாம் பேசினால் ,அதைக் கேட்டுக் கொண்டு நாலு மணி நேரம், 5 மணி நேரம் உட்கார்ந்து கொண்டிருக்க அவர்கள் என்ன முட்டாள்களா? கட்சி என்பது எதற்கு? எந்த காரணத்திற்காக கட்சி ஆரம்பித்தீர்கள் ?இதுவரை அந்தந்த கட்சிகள் மக்கள் நலனுக்காக செய்தது என்ன? பட்டியல் போடுங்கள். ஆட்சியில் செய்த ஊழல் வரலாறுகள் தான் அதிகமாக இருக்கிறது. இதற்கு உளவுத்துறை, காவல்துறை எடுபுடி வேலைகளை செய்து கொண்டிருக்கிறது.பத்திரிகைத்துறை பக்க வாத்தியம் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்கு எது தேவை ?எது தேவையில்லை ?அது கூட தெரியாமல் கட்சியும் பத்திரிக்கையும் நடத்திக் கொண்டு தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் .ஒரு பத்திரிகையாளர் யூடியூப் சேனலில் பேசுகிறார் திமுக ஓட்டு அனைத்தும், அவர் சமூகத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமிக்கு போட்டு விடுவார்கள் என்கிறார். எப்படி போடுவான்? அரசியல் தெரியாதவர்கள் தனக்கு கட்சியில் ஏதோ ஒரு பொறுப்பு கொடுத்து விட்டார்கள் என்று ,அவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு ,செய்து கொண்டு, கொடி பிடித்துக் கொண்டு, கோஷம் போட்டுக் கொண்டு, இருப்பதுதான் அவர்கள் நிலைமை .
அவர்கள் என்ன கொள்கையாளர்களா? அப்படி என்றால் கொள்கையுடன் இருப்பவர்கள் எத்தனை பேர் ?அரசியல் தெரிந்தவர்கள் எவ்வளவு பேர்? இதையெல்லாம் இந்த பத்திரிகை ,தொலைக்காட்சி, யூடியூப் சேனல்கள், நிரூபிக்க முடியுமா? சரி அப்படியே கண்ணு தெரியாத பாழும் கிணற்றில் மக்கள் வீழ்வதை பார்த்துக் கொண்டிருப்பீர்களா? நல்ல விஷயத்தை பத்திரிகை தொலைக்காட்சிகள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். உண்மையைக் கொண்டு சேர்க்க வேண்டும்.
அதற்கு பதிலாக அரசியல் தெரியாத மக்கள் இந்த ஊழல் கட்சிகளுக்கு அதிமுக ,திமுக மாறி, மாறி பணத்துக்காக வாக்களித்து வருகிறார்கள். இவர்களால் நல்லாட்சி கொடுக்க முடியாது. நேர்மையான ஆட்சியை கொடுக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி சரியில்லை என்று தான் ஸ்டாலினுக்கு மக்கள் வாக்களித்தார்கள் .இப்போது இந்த ஆட்சியும் ,மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் .அதனால் யாருக்கு வாக்களிப்பது? என்ற கேள்வி மக்களிடையே பெரும்பாலும் எழுந்துள்ளது .
இந்த நிலையில் மாற்றான ஒரு அரசியல் ,தமிழ்நாட்டுக்கு தேவை. இதில் பிஜேபி பரவாயில்லை. மத்தியில் எந்த அமைச்சர்கள் மீதும், ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை .மக்களுக்கான திட்டங்கள், நாட்டின் பாதுகாப்பு போன்றவற்றில் சிறப்பாக செயலாற்றி வருகிறது.இதைப்பற்றி எந்த ஊடகமும் பேசவில்லை. மாறாக நல்லது கெட்டது என்கிறார்கள். கேட்டது நல்லது என்கிறார்கள். தன்னுடைய சுயநலத்திற்காக ஊடகங்கள், இப்படிப்பட்ட பிழைப்பு நடத்துகிறது. அதில் சொந்த ஊடகங்கள் சொல்ல வேண்டியது இல்லை .அவர்கள் சொல்வது தான் அந்த ஊடகம்.
ஆனால் ,மற்ற ஊடகங்கள் எதற்கு தான் அவைகள் நடத்துகிறது? என்பது கூட தெரியவில்லை. உண்மை தெரியாத மக்களிடம், ஆட்சியாளர்களை, அதிகாரிகளை குறை சொல்லி, பத்திரிகை நடத்தி பயனில்லை. மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லாமல் ,வாழ்ந்து கொண்டு இருக்கும் இவர்களுக்கு தேவையானது. அரசியல் பற்றிய அடிப்படை அறிவு.
ஏனென்றால் ,இந்த அடிப்படை அறிவு இல்லாத மக்களுக்கு ஓட்டுரிமை கொடுத்து, ஊழல் ஆட்சியை, ரவுடிகள் ஆட்சியை தான் அவர்களால் ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. மக்களாட்சியை மக்களால் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், அது ஆன்மீக இறை சக்தி உள்ளவர்களால் தான் உருவாக்க முடியும். அதை நிரூபித்தும் காட்டிவிட்டார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியனாத் . தமிழ்நாட்டில் அது போல் யாராவது 1965 க்கு பின்னர் ஆட்சி நடத்தி இருந்தால் நிரூபிக்கலாம் . மேலும்,
அரசியல் தெரியாத மக்கள், தெரிந்து கொள்வது உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ,எதிர்கால இளைய தலைமுறைகளையும் ,வாழ வைக்க நேர்மையான ,நல்லாட்சி கொடுக்கக்கூடிய ஆட்சியாளர்களும் ,அரசியல் கட்சியும் தேவை என்பதை மக்கள் புரிந்து கொண்டால் சரி .