மக்கள் அதிகாரம் பத்திரிகை நடுநிலையோடு, மக்கள் நலன் சார்ந்த பத்திரிகையாக தொடர்ந்து வெளிவரும் .மேலும், அரசியல் கட்சிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் மட்டுமே பத்திரிகை நடத்தி கொண்டிருக்கும் பல லட்சம் பத்திரிகைகள், மக்கள் நலனில் அக்கறை காட்டும் பத்திரிகைகள் விரல் விட்டு கூட என்ன முடியவில்லை.
பல பத்திரிகைகள் காப்பி to பேஸ்ட் ஆக வெளி வருகிறது. எத்தனையோ பல பேஸ்புக், வாட்ஸ் அப்பில் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறது. இதுவும் பத்திரிக்கை என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது. இதையெல்லாம் ஒழுங்குபடுத்தி நடவடிக்கை எடுக்க, ஆட்சியாளர்களுக்கு தகுதி இல்லை. ஏனென்றால் ஆட்சியே அதே நிலைமையில் இருக்கும் போது ,அது எப்படி தகுதி ,தரம், மக்கள் நலன் இதைப் பற்றி எல்லாம் சிந்திக்கும்? மேலும்,
கட்சி என்பதும் ,ஆட்சி என்பதும் ,அவர்கள் சுயநலத்திற்கு என்று நினைத்துக் கொண்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கும் u tube ல் மூத்த பத்திரிகையாளர்கள் என்று கூறிக் கொண்டு, ஒருவர் இந்த கட்சிக்கு ஓட்டு போட மாட்டார்கள். அந்த கட்சிக்கு ஓட்டு போட மாட்டார்கள். அவர்களெல்லாம் சம்பாதிக்கவில்லை. அவர்களெல்லாம் சோர்ந்து போய்விட்டார்கள். அவர்களெல்லாம் வேதனைப்படுகிறார்கள் .இப்படி எல்லாம் மக்களுக்கு அரசியல் தெரியாது என்று பேசி வருகிறார்கள்.அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாமல் இருப்பதால் ,இவர்களும் எத வேண்டும் ஆனாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
முதலில் கட்சிக்கு எதற்கு வருகிறோம் என்பது கூட தெரியாமல் வந்துவிட்டு, அதனுடைய அடிப்படை அறிவு கூட தெரியாமல் இருந்து கொண்டு ,இன்றைய பத்திரிகையாளர்களும், அதைப்பற்றி தெரிந்து பேசுகிறார்களா? அல்லது தெரியாமல் பேசுகிறார்களா? என்பது புரியாத ஒன்று. அவர்கள் எந்த நோக்கத்திற்காக பேசுகிறார்கள்? என்பது விவரமானவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை .
அதனால், நடுநிலை நாளேடு என்று ஏமாற்றிக்கொண்டு, மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்கள் அனுபவித்துக் கொண்டு, பெரிய பத்திரிகை என்று பந்தா காட்டிக்கொண்டு, வெளி வந்து கொண்டிருக்கும் இன்றைய பத்திரிக்கை உலகில் மக்கள் அதிகாரம் தனித்துவமாக மக்கள் நலன் சார்ந்து உண்மையை மக்களிடம் வெளிப்படுத்தும், பத்திரிக்கையாக வெளிவரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அதற்காக சமூக ஆர்வலர்கள் கேள்வி பதில் ,சமூகப் பிரச்சனைகள், அரசியல், ஆன்மீகம், கவிதை ,ஜோதிடம் என இனிபல செய்திகள் உள்ளே கொண்டு வந்து மக்களுக்கான பத்திரிக்கையாக மக்கள் அதிகாரம் விளங்கும். இது தவிர, இதில் ஆன்லைன் சந்தா மற்றும் பத்திரிக்கை சந்தா என்று சந்தாவை கொண்டுவர உள்ளோம் .எனவே, மக்கள் அதிகாரம் பத்திரிக்கைக்கு மக்களின் ஆதரவு மக்கள் நலனுக்கானது என்பதை புரிந்து, மக்கள் அதிகாரம் பத்திரிகையுடன் தங்களை இணைத்துக் கொண்டு, அரசியல் ஏமாற்றங்களில் இருந்து ,அரசியல் கட்சிகளின் ஏமாற்றங்களில் இருந்து, பாதுகாத்துக் கொள்வது அவசியம். அதற்கு என ஒரே பத்திரிக்கை மக்கள் அதிகாரம்.
நன்றி,
ஆசிரியர்