மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள பத்திரிக்கை! புதிய மாற்றங்களை உருவாக்கி ! ஒரு சிறப்பான பத்திரிக்கை சேவையாக விரைவில்….! – பத்திரிக்கை துறை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றம் காணுமா?-ஆசிரியர் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம் வெளிநாட்டு-செய்திகள்

.

பத்திரிக்கை துறை இன்று பல மாற்றங்களை காலத்தின் கட்டாயத்தால் மாறி வருகிறது .

அந்த மாற்றம், மக்களுக்கு தேவையானதாகவும் ,அவசியமானதாகவும் ,இருப்பதால்! மாற்றம் எல்லாத்துறைகளிலும் ,வந்துவிட்டது .

அதிலும் பத்திரிக்கை துறை !இன்று டிஜிட்டல் மையமாக மாறிவிட்டது. இந்தத் துறையே மாறினாலும், பத்திரிக்கை துறையில் இருக்கின்ற சட்டங்கள் விதிமுறைகள் மாறாமல் இருப்பது தான் பத்திரிக்கை துறையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய வேதனை.

மேலும் ,இது புரியாமல் செய்தித் துறை அதிகாரிகள் பணியாற்றிக் கொண்டிருப்பது தான் ,தகுதியான பத்திரிகைகள், சமூக நலன் பத்திரிகைகள், தொடர்ந்து இது பற்றி வேதனை தெரிவித்து வருகின்றனர் .அப்போதும் இவர்களுக்கு இன்னும் புரியவில்லை.

மேலும் ,சர்குலேஷனுக்கு என்ன அர்த்தம் ?என்று தெரியாமல், இன்னும் மத்திய அரசு அந்த சட்டத்தையே வைத்துக் கொண்டிருக்கிறது. மிகப்பெரிய படித்த வல்லுநர் என்று பேசக்கூடிய மோடி அரசின் செய்தித்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த மாற்றங்கள் குறித்து இதுவரை ஒன்றுமே பேசவில்லை .எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது பற்றி மத்திய அரசின் அதிகாரிகள் சொன்னால் தான் அமைச்சர்களுக்கு தெரியும். அதிகாரிகளுக்கு எதுவும் தெரியாது. மேலும், மோடி அரசாங்கத்திடம் இருக்கின்ற மிகப்பெரிய தவறு. கருப்பு பணத்தை வெள்ளையாக்க பத்திரிகை நடத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களும் சமூகநல ன் சார்ந்த பத்திரிக்கைக்கும் ஒரே சட்டமாக போட்டிருப்பது தான் மிகப்பெரிய வேதனை.

இதனால்தான் மத்திய அரசு !மக்களிடம் தங்களுடைய செல்வாக்கை இழக்கிறது. கார்ப்பரேட்டின் வளர்ச்சி மட்டுமே குறிக்கோளாக பார்க்கிறார்கள். அதுதான் மோடி அரசின் மிகப்பெரிய வீக்னஸ். இங்கதான் மோடி தவறு செய்கிறார். மற்ற விஷயங்களில் நாட்டுக்கான சேவை மற்ற பல விஷயங்களில் குறை சொல்ல முடியாத அளவிற்கு இருந்தாலும், இவர்கள் செய்கின்ற தவறு மிகப் பெரிய தவறு, இதுதான்.

மேலும் அதிகாரிகளுக்கு இந்த உண்மை தெரியவில்லை என்றாலும் மக்கள் அதிகாரம் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக இந்த உண்மைகளை தெரிவிக்கிறது. தமிழ்நாட்டுக்கு இருக்கக்கூடிய செய்தி துறை அமைச்சர் எல் முருகன் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

அதிகாரிகள் உண்மையை அமைச்சர்களிடம் சொல்ல வேண்டாமா? இது ! பத்திரிக்கை துறையில் !மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கின்ற அவல நிலை! மேலும்,

இந்த அவல நிலையை ஒழிப்பதற்கு தான், மக்கள் அதிகாரம் தொடர்ந்து 10 ஆண்டுகளாக போராடி வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் அவர்களுக்கு சட்டமும் தெரியாது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும் தெரியாது. எப்படியோ ரவுடி கூட்டத்திற்கும் அதிர்ஷ்டம் அடித்து விட்டது. அதன் பலனை மக்கள் அனுபவித்தார்கள்.

இவர்கள் கொள்ளையடிப்பதிலேயே குறிக்கோளாக இருந்தார்களே ஒழிய இதைப் பற்றி சொன்னால் அவர்களுக்கு எங்கே புரிய போகிறது? மேலும்,பத்திரிக்கை பற்றியும் தெரியாது. பத்திரிகை செய்தி பற்றியும் தெரியாது.

கடந்த திமுக ஆட்சியில் செய்தித் துறையில் பணியாற்றி வந்த தலைமைச் செயலாக அதிகாரி RNI சென்னையில் வாங்கி இருந்தால் தான் அந்த பத்திரிகைகளுக்கு நாங்கள் சலுகை, விளம்பரங்கள் Press pass கொடுப்போம் என்றார்கள். நான் மத்திய அரசின் அரசாணை வாங்கி வந்து கொடுத்த பிறகு அடங்கி விட்டார்கள். எந்தளவுக்கு இவர்கள் பத்திரிகை துறையை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. மேலும்,

நாங்கள் எவ்வளவு ஊழல் செய்தாலும், எங்களை பாராட்டி கொண்டிருங்கள் .உங்களுக்கு நாங்கள் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கிறோம். இப்படிப்பட்ட பத்திரிகைகள் தான் திமுக ஆட்சியிலும், அதிமுக ஆட்சியிலும் வளர்ந்துள்ளது .

உண்மையை மக்களிடம் சொல்ல கூடிய பத்திரிகைகள் ஒன்று கூட அதற்கான மாற்றங்களை கொண்டு வரவில்லை. குறிப்பாக மக்களுக்கான பத்திரிகை நடத்துபவர்கள், மக்களுக்காக பத்திரிக்கை எது? என்று கூட சிந்திக்க தெரியாமல், செய்தி துறையும், அதிகாரிகளும் ,அமைச்சர்களும் இருந்தார்கள் என்று நினைக்கும் போது அந்த மிகப்பெரிய ஒரு கொடுங்கோன்மை ஆட்சியை நினைக்கும் போது, அவர்கள் பேசுவதற்கும் ,செய்வதற்கும் சம்பந்தமே இருக்காது.

இதையெல்லாம் அடி முட்டாள்களிடம் பேசுவதெல்லாம், நாம் அதையும் கேட்டுக் கண்டு, பத்திரிக்கை நடத்த வேண்டுமா? என்று சிந்திப்பதுண்டு.

மேலும், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் விஜய், ஆட்சியில்! இந்த மாற்றங்கள் குறித்து அதிகாரிகள் பேசி வருகிறார்கள். இந்த மாற்றம் எப்படிப்பட்ட மாற்றங்களை கொண்டு வரப் போகிறார்கள்? என்பதுதான் வருங்கால சந்ததிகளுக்கும் ,மக்களுக்கான பத்திரிகை நடத்துபவர்களுக்கும், உண்மையான செய்திகளை மக்களிடம் கொண்டு சொல்பவர்களுக்கும் ,அரசாங்கம் என்ன மாற்றங்களை கொண்டு வரப் போகிறது ?என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

மேலும் ,இது மக்களுக்கான அரசாங்கம் !,நம்பிக்கையுடன் மக்களோடு !மக்களுக்காக என்றும் மக்கள் அதிகாரம் …!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *