ஏப்ரல் 20, 2024 • Makkal Adhikaram
தமிழ்நாட்டில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் டீம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே எந்தெந்த தொகுதிகள் திமுகவிற்கு வெற்றி? எந்தெந்த தொகுதிகள் தோல்வி ?இது எல்லாவற்றையும் கணித்து, அதை எப்படி எல்லாம் சரி செய்ய முடியும்? என்று களத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டீம் ஒர்க் செய்திருக்கிறார்கள்.
மேலும், எப்படி திட்டமிடப்பட்டு பிரச்சாரம் செய்ய வேண்டும்? மக்களிடம் எப்படி பணத்தை கொடுத்து ,அவர்களை விலைக்கு வாங்க வேண்டும்? என்பன போன்ற அனைத்து வேலைகளும் தேர்தலுக்கு முன்பே திமுக நடத்தியுள்ளது.இது தவிர, தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது .மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் அடைக்கப்பட்டுள்ளதாக கூட ,தகவல்கள் வெளி வருகின்றன. இதையெல்லாம் மீறி எப்படி மக்கள் வேறு அரசியல் கட்சிக்கு வாக்களிப்பார்கள்? மேலும்,
இது தெரியாமல் எதிர்க்கட்சிகள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். யாரெல்லாம் திமுகவிற்கு எதிராக வாக்களிக்கிறவர்கள் ?அதையும் கொஞ்சம் லிஸ்டில் இருந்து எடுத்து விடுங்கள். இப்படி சூழ்ச்சி, பணம் ,அதிகாரம், அரசியல் பலம், மீடியாக்களுக்கு பிரசாந்த் கிஷோர் சொல்லுது போல, பத்திரிகை, ஊடகங்களுக்கு 2600 கோடி செலவு செய்துள்ளது .இதையெல்லாம் திமுக திட்டமிட்டு செலவு செய்து தேர்தலில் வேலை செய்துள்ளது. ஒரு பக்கம் கூட்டணி கட்சிகளின் வாக்குகள், மற்றொரு பக்கம் தேர்தலின் திட்டமிட்ட வேலைகள், இவை அனைத்தும் திமுகவின் தேர்தல் அரசியல் . இனியாவது எதிர்க்கட்சிகள் விழித்துக் கொள்வார்களா? அல்லது மக்கள் விழித்துக் கொள்வார்களா ?
மேலும் ,அதிமுக கூட்டணி இந்த முறை அதிக அளவில் பணம் செலவழிக்கவில்லை .கட்சிக்காரர்களே கண்டும், காணாமல் இருந்திருக்கிறார்கள். வாக்கு சதவீதம் அதிமுகவிற்கு மிகப் பெரிய அளவில் குறைந்துள்ளது. இது தவிர, விஜய் ரசிகர்களுக்கு ரகசிய சிக்னல் நடிகர் விஜய் கொடுத்துள்ளதாக தகவல்.
அதாவது நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள். அதன் பிறகு தான் 50 சதவீதம் போலிங் ஆன வாக்குகள், 70 சதவீதம் ஆகிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் யாருக்கும் வாக்களிக்க கூடாது என்ற முடிவில் இருந்த போது தான் இந்த உத்தரவு போனது என தகவல் வெளியாகி உள்ளது . அடுத்து, பிஜேபியின் வாக்கு சதவீதம் உயரும். ஆனால், எத்தனை சீட்டுகள் வெற்றி பெறும் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது ?