தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில்! உள்ளாட்சி அமைப்புகளில் சமூக ஆர்வலர்கள் கண்காணிப்பு குழு நியமிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram

நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் கோடிக்கணக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டங்கள் என்னென்ன? எது? என்று கூட மக்களுக்கு தெரியாமல் இருக்கிறது. உள்ளாட்சி அமைப்பின் நோக்கமே நேரடியாக மக்களுக்கு தெரிவிக்கக் கூடிய ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் என்பது தான் உள்ளாட்சி அமைப்பின் முக்கிய நோக்கம் .

ஆனால், அந்த சட்டம் இது நாள் வரை எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ ,அந்த நோக்கம் தோல்வி அடைந்து விட்டது. அதனால், மத்திய மாநில அரசுகள் ஒவ்வொரு கிராமங்களிலும், நகரங்களிலும், பேரூராட்சிகளிலும், சமூக ஆர்வலர்கள் குழு நியமிக்க வேண்டும். இந்த நியமனம் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் இருக்க வேண்டும்.

 ஒவ்வொரு கிராமங்கள் தோறும் ,இந்த கிராம சமூக ஆர்வலர்கள் கண்காணிப்பு குழு நியமனம் இருக்க வேண்டும், இதற்கு தகுதியானவர்கள் மட்டுமே இந்த பத்து பேர் குழுவில் இடம் பெற வேண்டும். முதலில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் ,ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் ,சமூக ஆர்வலர்கள், இப்படிப்பட்டவர்கள் தான் இதில் இடம் பெற வேண்டும். எந்த ஒரு அரசியல் கட்சி அமைப்பு அல்லது சங்கமோ சார்ந்தவர்கள் அதில் இடம்பெறக் கூடாது .

இந்த தகுதியான நபர்கள் கிராமம், மாவட்டம், மாநிலம் இதனுடைய நோக்கம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த சமூக ஆர்வலர்கள் கண்காணிப்பு குழு நியமித்தால், அவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் என்ன திட்டங்கள்? என்ன வேலைகள் நடக்கிறது? வரவு செலவு கணக்குகள் ?எல்லாவற்றிலும் அவர்களுக்கு மேற்பார்வை செய்ய உரிமை வழங்க வேண்டும். அது மட்டுமல்ல, இதுவரையில் ஒரு கிராமத்தில் கூட கிராம சபை கூட்டம் சொல்லப்பட்ட விதிகளின் நடைபெறவில்லை.

 அதையெல்லாம் முறையாக மக்கள் கேள்வி கேட்க, அதற்கு பஞ்சாயத்து நிர்வாகிகள் நேரடியாக பதில் சொல்ல வேண்டிய காலகட்டத்தை இந்த சமூக ஆர்வலர்கள் கண்காணிப்புக் குழு வழிவகை ஏற்படுத்தும். மக்களை மதிக்காமலும், பொது சொத்துக்களை பாதுகாக்காமல், கொள்ளை அடிப்பதில் தான் நோக்கமாக இருக்கிறார்கள். இது ஏதோ கிராமத்திற்கு இவர்கள் வியாபாரம் பண்ண வந்த வியாபாரிகள் போல் இருக்கிறார்கள். இந்த வியாபாரிகளை ஒவ்வொரு கிராமத்திலும் ,ஒவ்வொரு பேரூராட்சிகளிலும், ஒவ்வொரு நகராட்சிகளிலும், உள்ள சமூக ஆர்வலர்கள் கண்காணிப்பு குழு கண்காணிக்கும்.

 இந்த சட்டத்தை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று சமூக நல நோக்கத்துடன் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பிலும், இதை தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் வைக்கின்ற முக்கிய கோரிக்கை . இதனால், கோடிக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். தன்னிச்சையான அதிகாரத்தை எந்த ஒரு கிராம பஞ்சாயத்து நிர்வாகிகளும் எடுக்க முடியாது.

 ஒவ்வொரு செயல்பாட்டிலும் ,சமூக ஆர்வலர்கள் கண்காணிப்புக்குழு சரியாக இருந்தால், அதற்கு சான்றளிப்பார்கள். இல்லையென்றால் அந்த பில் பாஸ் பண்ணக்கூடாது. மேலும், பொறியாளர்கள் அந்தந்த கிராமத்தில் செய்த வேலைகளின் தரத்தை எத்தனை சதவீதம் என்பதை கணக்கிட்டு சான்று அளிக்க வேண்டும். இப்படி இருந்தால், 90 சதவீதத்திற்கு மேல் உள்ளாட்சி அமைப்பின் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். 

இதை திமுகவும் , பிஜேபி அரசும் செய்தால்! இதன் மூலம் மக்களிடம் நல்ல பெயரை எடுக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், ஒவ்வொரு பகுதியிலும் இருக்கின்ற சமூக ஆர்வலர்கள் இதைப் பின்பற்றி தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இக்கோரிக்கையை வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மத்திய மாநில அரசுகள் இதை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தின் மூலம் இதற்கான தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *