செப்டம்பர் 04, 2024 • Makkal Adhikaram
சென்னை :தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது போலீசுக்கு தெரியுமா? தெரியாதா?’ என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை பெரும்பாக்கம், துரைப்பாக்கம் குடிசை மாற்றுவாரிய கட்டட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்துக்கொடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது போலீசுக்கு தெரியுமா? தெரியாதா? போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்க ஏதேனும் தனி அமைப்பு உள்ளதா? இல்லையென்றால் இது தொடர்பான வழக்குகளை சுதந்திரமான ஒரு அமைப்பின் வசம் ஒப்படைக்கலாமா?’ என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.
பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’ என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், தாலுகா சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் நேரில் ஆய்வு செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.