நாட்டில் தகுதியானவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். தகுதியான அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வர வேண்டும். மேடையில் பேசி விட்டு போவது, சினிமாவில் நடித்துவிட்டு போவது, நிஜ வாழ்க்கையில் அதை எல்லாம் கொண்டு வந்து சாதிக்க முடியுமா? கற்பனை உலகத்திற்கும், நிஜ உலகத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. அதேபோல்தான், சினிமா ரசிகர்களால் கைதட்ட முடியும். சினிமாவை பார்த்து ரசிக்க முடியும். ஆனால், செயல்படுத்த முடியுமா ?அதற்காக அவர்களால் உழைக்க முடியுமா?
இது எல்லாவற்றையும் வாக்காளர்கள் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும் . இதையெல்லாம் பார்த்து வாக்களித்த மக்கள் அக்காலத்தில் இருந்தார்கள். வெள்ளைக்காரன் பட்டாதாரிகளுக்கு, படித்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை கொடுத்து வந்தான். சுதந்திரம் வாங்கிய பிறகு ஊழல்வாதிகளுக்கும், ரவுடிகளுக்கும் தகுதி இல்லாதவர்களுக்கும், படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரும் சேர்ந்து பணம் வாங்கிக்கொண்டு யாருக்கு வேண்டுமானாலும்,வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள் . படிக்காத மக்களிடம் பொது நலம் இருந்தது .படித்த மக்களிடம் சுயநலம் அதிகமாக இருக்கிறது.
தான் வாழ்ந்தால் போதும், ஊர் என்ன? நாடு என்ன? இந்த தேசம் என்ன? என்று நினைக்கக்கூடிய மக்களும் இருக்கிறார்கள்.இதை ரயிலிலும், பஸ்ஸிலும் பயணம் செய்யும் மக்களிடம் கூட இந்த சுயநலத்தை பார்க்கிறேன். தனக்கு சீட்டு கிடைத்து விட்டால் போதும், நின்று கொண்டு வருபவர்கள் கொஞ்சம் தள்ளி உட்காருங்கள் என்று சொன்னால், எத்தனையோ படித்த பட்டதாரிகள் இது மூன்று பேர் சீட்டு என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால்,அக்காலத்தில் வாழ்ந்த படிக்காத மக்கள், கொஞ்சம் தள்ளிக்கலாம் .அவருக்கு கொஞ்சம் இடம் விடுங்க என்று சொல்வார்கள். அவர்கள் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்தார்கள்.
இப்போது சமூகத்தை ஏமாற்றலாமா? நாட்டை ஏமாற்றலாமா? சொந்த பந்தங்களை ஏமாற்றலாமா? இப்படிதான் மக்களின் மனநிலை. இது யாருக்கு இவர்களுடைய சுயநலம் சாதகமாக இருக்கிறது? என்றால்! அரசியல் கட்சிகள், ஜாதி கட்சிகள், மத கட்சிகள், அமைப்புகள், இவர்களை வைத்து அரசியல் என்பது எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு, எப்படி வேண்டுமானாலும் பேசிவிட்டு போகும், பிரிவினைவாதிகளாக இருப்பவர்கள் தான், இவர்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். அரசியல் என்றால் என்னவென்று தெரியாது.
ஆனால், இந்த பிரிவினைவாதிகளின் பேச்சைக் கேட்டு நாட்டை கூறுபோடுவது மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சிக்கு, வேலை வாய்ப்புக்கு,முட்டு கட்டைகளை போட்டுக் கொண்டு அரசியல் என்பதை சுயநலமாக்கி விட்டார்கள். மேலும், மக்களிடையே போதைப்பொருள் புழக்கங்கள், மதுக்கடைகள் திறப்பு இவை எல்லாம் இந்த சமூகத்தின் வளர்ச்சி அல்ல, இது எல்லாம் சமூகத்தின் அழிவு. இதைத் தவிர்த்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் வறுமையில் வாடும் போது, அவர்களை மூளைச் சலைவு செய்து தீவிரவாதிகள் ஆக, நக்சலைட்டுகளாக மாற்றி சமூகத்திற்கு எதிரான குற்றங்கள், தேசத்திற்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க செய்கிறார்கள்.
இதை நேரடியாக செய்தால், சட்டம் உடனடியாக இவர்களை தண்டித்து விடும். அதனால், ஒரு சமூக அமைப்பு உருவாக்கி ,அந்த அமைப்பின் மூலம் மக்களுக்கு நல்லது செய்வது போல் பேசிவிட்டு, காட்டிவிட்டு பிறகு, இது போன்ற தேச துரோக செயல்களில் ஈடுபடுகிறார்கள். இப்படி ஈடுபடுபவர்களால் அது மாநிலமாக இருந்தாலும், அல்லது ஒரு நாடாக இருந்தாலும், அந்த நாட்டில் அந்நிய முதலீடு, தொழிற்சாலைகள் நிறுவ முதலாளிகள் பயப்படுகிறார்கள். அப்படிப்பட்ட நிலைமை இன்று தமிழ்நாட்டில் உள்ளது. இங்கே போதைப்பொருள் புழக்கம், கஞ்சா பழக்கம், மது வகைகள் பழக்கம் அனைத்தும் இருப்பதால் பல கம்பெனிகள் இங்கு தொழிற்சாலை நிறுவுவதை விட வேறு இடங்களில் கொண்டு செல்லலாம் என்று ஏற கட்டிக் கொள்கிறார்கள் .
அதுமட்டுமல்ல, அரசியலில் ஊழல், ஆட்சி நிர்வாகத்தில் ஊழல், இவையெல்லாம் மறைப்பதற்கு அரசியல் கட்சிகள் ரவுடிசம் இப்படி இருந்தால், எந்த மாநிலமாக இருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும், அது முன்னேற முடியாது. முதலில் மக்களின் ஒழுக்கம், திறமை, உழைக்கக்கூடிய தகுதி, நேர்மை இவை இருந்தால் மட்டும்தான் எந்த ஒரு நாடாக இருந்தாலும், அது பொருளாதாரத்திலும், சமூக வளர்ச்சியிலும், அந்த நாட்டின் அமைதியும், கலாச்சாரத்திலும், பண்பாடிலும் சிறந்து விளங்கும் என்பதை அதற்கு சான்றிதழே அளிக்கலாம் .
மேலும், தற்போது தமிழர்கள் இந்துக்கள் அல்ல, இந்துக்கள் தமிழர்கள் அல்ல ,முருகன் தமிழ் கடவுளே அல்ல, இதையெல்லாம் சொல்லி தமிழ்நாட்டு மக்களை குழப்பக்கூடிய அந்நிய சக்திகளின் கைக்கூலிகள் யார் ? இதை மத்திய உளவுத்துறை தான் கவனிக்க வேண்டும்.மதமாற்ற சக்திகள், இந்தியாவை பிரிவினைப்படுத்தும் சக்திகள், இவர்களுக்கு பின்னால் அரசியல் கட்சிகள், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் மதவாத சக்திகள், இதில் தொடர்புடைய அரசியல் கட்சிகளின் புள்ளிகள், மிகப்பெரிய நெட்வொர்க்காக இந்தியாவில் இருந்து வருகிறது. இந்த உண்மைகள் பாமர மக்களுக்கு தெரியாது. அவர்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து வாக்களிக்கவே தெரியவில்லை என்ற நிலைமையில் இருக்கும்போது இதை எப்படி தெரிந்து கொள்வார்கள்?மேலும்,
ஏற்கனவே, அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமைப்புகள், தன்னார்வலர் தொண்டு நிறுவனங்கள், இவையெல்லாம் என்ன செய்து கொண்டு இருக்கிறது? என்பது யாருக்குமே வெளிப்படையாக தெரியாத ஒன்று .ஒரு சில தன்னார்வலர் தொண்டு நிறுவனங்கள் மட்டும்தான் வெளிப்படுத்த தன்மை உள்ளது. மீதி எல்லாம் அது என்ன செய்து கொண்டிருக்கிறது? என்பது கூட தெரியவில்லை.
மேலும், அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் வாய்க்கு வந்தபடி பேசுவது பத்திரிக்கை செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் எந்த அளவு உண்மை? என்று கூட அந்த செய்தி போட்ட ஆசிரியருக்கு தெரியுமோ? தெரியாதோ தெரியவில்லை. இப்படி எல்லாம் மக்களை ஏமாற்றி அரசியல் செய்து கொண்டு, பிழைப்பு நடத்தும் கூட்டங்களாக இன்றைய அரசியல் கட்சிகள் மாறிவிட்டார்கள். மக்கள் அதிக விழிப்புடன் செயல்படுவது அவசியம் .அதிலும், இளைஞர்கள் இந்த அரசியலை அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படி அலட்சியப்படுத்தினால், உங்கள் வாழ்வை நீங்களே அலட்சியப்படுத்துவதற்கு சமம்.