நாட்டில் ஏ.ஐ.( AI artificial intelligence ) என்ற தொழில் நுட்பத்தை சர்வதேச அளவில் இந்தியா கொண்டு ,செல்ல பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் தான் கணினி மையம், டிஜிட்டல் மையம், போன்ற பண பரிவர்த்தனை எல்லாம் கொண்டு வந்துள்ளார்.

மேலும் ,இந்த இணையதள சேவை வசதிகளை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டுள்ளார். அது மட்டுமல்ல, சர்வதேச அளவில் இயங்குகின்ற சிறப்பான A I தொழில்நுட்ப நிறுவனங்களை இந்தியாவில் அதன் கிளைகளை ஆரம்பிக்க வரவேற்றுள்ளார்.

இப்படி இணையதள சேவைகளை அதன் பயன்பாடுகளை, மக்களுக்கு கொண்டு செல்வதில், இந்த தொழில்நுட்பங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவிக்கின்ற பிரதமர் நரேந்திர மோடி .

ஏன் ?பத்திரிக்கை துறையில் இந்த இணையதள சேவைகளை பயன்படுத்தி, அதற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது?

எல்லாம் பழைய சட்டங்களாகவே பத்திரிக்கை துறையில் இருந்து வருகிறது. இன்று எவ்வளவோ தொழில்நுட்பங்கள், அறிவியல் பூர்வமான விஞ்ஞானம் வளர்ந்து வருகின்ற நிலையில், அச்சு ஊடகத்திற்கு போடப்பட்ட அதே சர்குலேஷன் சட்டம் இன்றுவரை இந்த பத்திரிகை துறையில் துருப்பிடித்து போய் உள்ளது. இதுவாவது பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியுமா?

எனவே, இணையதளத்தில் வரக்கூடிய பத்திரிகைகளின் செய்திகள் ,அதன் பயன்பாடுகள் ,அதன் முக்கியத்துவங்கள் குறித்து பத்திரிக்கை துறையில், அந்தந்த பத்திரிகைகளின் இணையதளத்தையும் அங்கீகரித்து, அதற்கான அரசின் சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும்.

மேலும், இந்த சர்குலேஷன் சட்டம் என்பது உடம்பு தான். அதற்கு உயிர் என்பது செய்திகளின் தரம், சமூக நோக்கம், மக்களிடம் உண்மை செய்திகள், கட்டுரைகள் ,இதுதான் பத்திரிக்கையின் உயிர் .ஆனால்,இந்த உயிரே இல்லாமல் ,பல பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

அதுவும் ,அரசின் சலுகை ,விளம்பரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அதாவது அரசியல் கட்சிகளை சார்ந்து அவர்களை பாராட்டி ,புகழ்ந்து ,இப்படி எல்லாம் பத்திரிகைகள் போய்க் கொண்டிருக்கிறது.

இதனால் ,மக்களுக்கு என்ன பயன்? என்பதை இன்றுவரை அதைப்பற்றி மத்திய அரசு, மாநில அரசின் செய்தித் துறைகள் சிந்திக்கவில்லை. அதிகாரிகள் ஏதோ வேலைக்கு வருகிறார்கள் .சம்பளம் வாங்குகிறார்கள் .அவர்களுடைய வேலை முடிந்து விட்டதும் போய்விடுகிறார்கள்.

ஆனால், இந்த விபரம் எல்லாம், ஒரு அமைச்சிருக்கோ ,ஒரு எம்எல்ஏவுக்கு ஒன்றும் தெரியாது. ஏன் ?தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு கூட இதைப் பற்றி எதுவுமே தெரியாது. இந்தத் தெரியாத விஷயங்களை மக்கள் அதிகாரம் பத்திரிகையிலும் சொல்கிறோம் ,இணையதளத்திலும் சொல்கிறோம், ஏன் ?இதை அவர்கள் அமைச்சர்களின் காதுகளுக்கு கொண்டு செல்ல மாட்டார்களா? இதையெல்லாம் மக்கள் புரிந்திருக்கிறார்கள்.

மேலும்,வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் புரிந்து, என்னிடம் விவாதிக்கிறார்கள். ஆனால், செய்தித் துறை அதிகாரிகளுக்கு இன்னும் புரியவில்லை என்றால், அவர்கள் செய்தித் துறையில் வேலை செய்வதற்கு தகுதி இல்லை என்று தான் சொல்ல வேண்டும் . மேலும்,

தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். என்று ஒவ்வொரு பத்திரிக்கை இதழிலும் சொல்லி வருகிறது. அதனால், அரசுக்கு ஆதரவாக, அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு தான், இந்த சலுகை, விளம்பரங்கள் என்றால் ,சமூக நோக்கம் கொண்ட பத்திரிகைகள் எப்படி நாட்டில் வளர்ச்சி அடையும் ?மக்களுக்கு அதனால் என்ன நன்மை? இதைப் பற்றி பிரதமர் ஒரு நாளாவது யோசித்து இருப்பாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *