அறிஞர் அண்ணா கல்லூரியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாமக்கல் மாவட்டம்.
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராக பணியாற்றி வந்த பிரதாப் அவர்கள் கல்லூரி மாணவியிடம் ஒருவரிடம் பாலியல் வன்கொடுமை செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார், இவர் NCC யில் பணியாற்றும்போது பாலியல் புகாரிக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது அதன் பின் என்சிசி பொறுப்பில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது,

மேற்கண்ட பேராசிரியர் மீது உயர்கல்வித்துறை துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் , கல்லூரி உள் விசாரணை குழு இது போன்ற பிரச்சனைகளில் உரிய தலையீடு செய்ய வேண்டும், மாதம்தோறும் மாணவிகளுக்கு நடைபெறக்கூடிய பிரச்சனைகள் குறித்த கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும்கல்லூரியில் மாணவிகள் பாதுகாப்பான முறையில் கல்வி கற்கும் சூழலை கல்லூரி நிர்வாகம் உருவாக்கிட வேண்டும் மாணவிகளுக்கு அவ்வப்போது உளவியல் ஆலோசனை வழங்கிட வேண்டும்.

கல்வி நிலையங்களில் தொடரும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது நிசார் தலைமை தாங்கினார் ,மாவட்டச் செயலாளர் தே.சரவணன் கண்டன உரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.கன்னிகா,மாவட்ட குழு உறுப்பினர் சஞ்சய் உள்ளிட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். வகுப்பை புறக்கணித்து காலை 11:30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *