அக்டோபர் 12, 2024 • Makkal Adhikaram
19ஆவது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முக்கியமான மாநாடு லா.ஓசில் நடந்து வருகிறது .இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பயங்கரவாதத்திற்கு எதிராக மனித நேயத்தில் நம்பிக்கை கொண்ட சக்திகள் ஒன்றுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், அவர் நான் புத்தரின் தேசத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்று உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்க துவங்கியுள்ளது. மேலும், அவர் தென் சீன கடலில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத் தன்மை முழு இந்தோ பசுபிக் பிராந்தியத்தின் நலனுக்காக உள்ளது. கடல் சார்ந்த நடவடிக்கைகள், கடல் சட்டத்தின் ஐநா விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் .
மேலும், கடல் வணிகம் மற்றும் வான்வழி வணிகம் உறுதி செய்வது, அவசியம். இதற்கு வலுவான பயனுள்ள நடத்தை நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். மேலும், பிராந்திய நாடுகளின் வெளியுறவு கொள்கைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது. மேலும், உலகில் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் மோதல்களால் மிகவும் எதிர்மறையாக பாதிக்கப்பட்ட நாடுகள் உலக அளவிய தெற்கு ஆசியாவை சார்ந்தவை .யுரோசியா மற்றும் மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் கூடிய விரைவில், அமைதி மற்றும் சிறத்தன்மையை மீட்டெடுக்க அனைவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இது போருக்கான நூற்றாண்டு அல்ல என்று நான் பலமுறை கூறியுள்ளேன். போர்க்களத்தில் பிரச்சனைகளை தீர்க்க முடியாது. இறையாண்மை பிராந்திய ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிப்பது அவசியம். மனிதபிமான கண்ணோட்டத்துடன் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர பயிற்சிக்கு நாம் வலுவான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
விஸ்வ பந்து என்ற தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் இந்தியா இந்த திசையில் பங்களிக்க எல்லாம் முயற்சிகளையும் தொடர்ந்து செய்யும். உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு, பயங்கரவாதம் பெரும் சவாலாக உள்ளது. அதை எதிர்த்து போராட மனிதநேயத்தின் மீது நம்பிக்கை கொண்ட சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் .மேலும், வெற்றிகரமான தலைமைக்கு இந்தியாவின் முழு ஆதரவையும் தருவதாக உறுதி அளிக்கிறேன் . இவ்வாறு மோடி மாநாட்டில் பேசியுள்ளார்.