அக்டோபர் 29, 2024 • Makkal Adhikaram
தமிழ்நாட்டில் இதுவரை அதிமுக, திமுக என மாறி, மாறி ஆட்சியில் மக்கள் அமர வைத்தார்கள். தற்போது அந்த மாற்றம் மீண்டும் தொடருமா? என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. இதில் அதிமுகவில் மக்கள் செல்வாக்கு இழந்த தலைவராக தான் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். மேலும், அக்காட்சியின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், டி. டி. வி தினகரன், சசிகலா இவர்களெல்லாம் முக்கிய ஆதிக்க சக்தியாக அதிமுகவில் இருந்தவர்கள். அவர்களும் பிரிந்து கிடக்கிறார்கள்.
இப்போது அதிமுக தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக இருந்து திமுகவை எதிர்த்து அரசியல் செய்யவில்லை . இது அதிமுகவின் தோல்வி அடுத்தது திமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். எந்த திட்டமும் மக்களுக்கு தேவையான எதுவும் இல்லை. ஆனால், மக்களின் வரிபணம் மட்டும் மின்சாரம், வீட்டு வரி ,சொத்து வரி, குடிநீர் வரை, கழிவு நீர் வரி என்று பல வரிகள் போட்டு உள்ளாட்சி நிர்வாகத்தில் நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் எதற்கு சென்றாலும், பணம் இல்லாமல் வேலை நடக்காது. இந்த நிலமையில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வைத்து ஆட்சி படிக்கலாம் என்று கனவு காண முடியாது .மேலும், டாஸ்மாக் கடைகளின் வியாபாரத்தை வைத்து ஆட்சி நடத்தலாம் என்பது மக்கள் சுயநலம் மிக்கவர்களாக இருக்க வேண்டும் . அப்போது தான் இந்த வியாபாரம் நன்றாக நடக்கும் . இதைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள் என்று அரசியல் ராஜதந்திரமாக இதை செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இதனால், பல குடும்பங்கள் வறுமைக்கு தள்ளப்படுகிறது .
ஆயிரக்கணக்கான குடும்பங்களில் பிரிவினைகள் ஏற்பட்டு சண்டை சச்சரவுகளால் பிரிந்து விடுகிறார்கள். மேலும், ஆண்களுக்கு உழைக்கும் திறன் குறைந்து விடுகிறது .அதனால், வெளி மாநிலத் அவர்களை வைத்து தமிழகத்தில் பல்வேறு வேலைகளை செய்ய வேண்டிய நிலைமைக்கு தமிழகம் வந்துள்ளது . வேலை வாய்ப்புகள் இன்றி இளைஞர்கள் தாங்கள் படித்த படிப்பிற்கு குறைவான ஊதியம் தகுதியற்ற வேலை .இதுதான், இன்றைய தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை வாய்ப்பு .
ஆனால், இந்த மக்களை ஜாதியாலும், மதத்தாலும், மொழியாலும் பிளவு படுத்திக் பேசிக் கொண்டு, அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும், கருணாநிதி போன்ற சாபக்கேடானவர்களால் தமிழ்நாட்டு மக்கள் இந்தி படிக்காமல் போனது. தமிழ்நாட்டு மக்களின் துரதிஷ்டம் . இந்த துரதிர்ஷ்டம் குடும்ப ஆட்சியை வழி, வழியாக பதவிக்கு வர வாய்ப்பாக இருந்து வந்துள்ளது. இதுதான் தமிழக மக்களுக்கு முதல் அரசியல் ஏமாற்றம் .
அடுத்தது தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு நடிகர் பட்டாளமே அரசியலில் புகுந்துள்ளது. இப்போது புதிய வரவாக தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனர் விஜய் சமீபத்தில் நடந்த மாநாட்டில் பேசிய பேச்சு, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை பரபரப்பாகியுள்ளது. அதாவது ஊழலற்ற ஆட்சியை கொடுப்போம் .மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவோம். இப்படி பல அறிவிப்புக்கள் வந்தாலும், விஜயின் அரசியல் இளைஞர்களை கவர்ந்துள்ளது . தமிழ்நாட்டில் அரசியல் தெரியாத மக்கள் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற நிலையில் தான் இருக்கிறார்கள்.
இன்றைய அரசியல் ஒரு சிக்கலான அரசியல். இங்கே தகுதியானவர்கள் அரசியலுக்கு வர முடியாத நிலைமை. தகுதியற்றவர்கள் பேச்சிலும்,நடிப்பிலும் அரசியலுக்கு வந்து ஊழல் செய்து சொத்துக்களை குவிக்கும் இடமாக அரசியல் ஆகிவிட்டது . இதனால் தற்போது தமிழ்நாட்டின் கடன் சுமை 9 லட்சம் கோடி! வரி வருவாய் எங்கே போகிறது ? எந்த திட்டங்களும் மக்களுக்கு பயனளிக்காமல் உள்ளது . பொருளாதாரம் முன்னேற்றம் இல்லை . இதே நிலை தொடரும் ஆனால், தமிழ்நாடு பின் தங்கிய மாநிலமாக வர வாய்ப்புள்ளது. ஏழை, நடுத்தர மக்களின் வருமானம் நாளுக்கு நாள் பின்னோக்கி செல்கிறது. அரசியலுக்கு வந்தவர்களின் வருமானம் கோடிகளை எட்டுகிறது.
இது எதனால் மக்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் அரசியல் தகுதி இல்லாமல் 60% மக்களுக்கு மேல் இருக்கிறார்கள் . இது நாட்டின் வளர்ச்சி சமூகத்தின் வளர்ச்சி பாதிப்பதற்கு முக்கிய காரணம் .அரசியல் கட்சிகள் . மக்களிடம் பேசிவிட்டு, பேசியதை கார்ப்பரேட் ஊடகங்கள் விளம்பரப்படுத்தி பணத்தை சம்பாதிக்கிறார்களே ஒழிய உண்மையை அவர்களுக்கு இதுவரை எந்த பத்திரிகை, தொலைக்காட்சிகளும் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிப்பதில்லை . மேலும், மக்கள் உண்மையை சொல்லும் பத்திரிகை, இணையதளங்களை அலட்சியப்படுத்துகிறார்கள் .அந்த அலட்சியம் உங்களுக்கு ,உங்கள் வாழ்க்கைக்கு தேடிக் கொள்ளும் சரிவும், ஆபத்தும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் ,
இந்த கேள்விக்கு தமிழக மக்கள் அர்த்தம் தெரிந்து கொண்டால், அரசியலில் உண்மை புரியும் . சினிமாவும் ,அரசியலும் ஒன்றாகிவிட்டால் ,உழைப்பவன் யார்? விஜயால் மக்களை எளிமையாக சந்திக்க முடியுமா ? அல்லது உதயநிதியை சந்திக்க முடியுமா? எல்லோரும் அரசியல் ஷோ காட்ட கார்ப்பரேட் ஊடகங்கள், இவர்களை வைத்து அரசியல் வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் . அரசியல் கட்சிகள் எதற்கு? என்று கூட அர்த்தம் தெரியாது .
மக்கள் அரசியல் கட்சிகளிலும் பொதுமக்களாகவும், இருப்பதுதான் அவர்களுடைய துரதிஷ்டம் . கட்சி என்பது அந்த சமூகத்தை ஏமாற்றுவதற்கும், தன்னை பொருளாதாரத்தில் பலப்படுத்திக் கொள்வதற்கும், ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் . இதையெல்லாம் சிந்திக்காத மக்கள் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பணத்தால் விலை பேசிக் கொண்டிருப்பார்கள். இன்று பணம் மட்டுமே அரசியல் ஆகிவிட்டது. தகுதி, நேர்மை, உழைப்பு ,சமூக நலன் ,இந்த தேச நலன் எல்லாமே மக்களுக்கு அலட்சியமாகிவிட்டது. இது ஆபத்தான அரசியல். வரும் 2026 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும், பெரும்பான்மை இருக்குமா ?என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஆள் ஆளுக்கு பங்கு போட்டால், மெஜாரிட்டி என்பது கேள்விக்குறியாக தான் இருக்கும் . தவிர, கூட்டணி அமைவதை பொறுத்து ஆட்சி மாற்றம் இருக்கும். இது தவிர, தற்போது அரசியல் கட்சிகளின் சேவையை பொறுத்து, அரசியல் மாற்றங்கள் வரலாம் . அதனால், 2026 இல் எந்த அரசியல் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? என்பதை தற்போது கணிக்க முடியாத ஒரு தேர்தல் களம் .