1967 லிருந்து இந்து சமய அறநிலையத் துறையில் நடக்கும் மோசடிகள் ஊழல்கள் தமிழக மக்களுக்கு தெரியுமா? ஆலய பாதுகாப்பு தலைவர் ஹரிஹரன்

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜனவரி 12, 2025 • Makkal Adhikaram

தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ஹரிஹரன் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் கூட்டத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். 

அந்த வகையில் பல்வேறு கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்து அறநிலையத்துறை ஏன் தயங்குகிறது? இந்த கூட்டு சதிக்கு பின்னால் அரசியல், அரசியல் கட்சியினர், ஒரு பக்கம் ஜாதி அமைப்புகள், இப்படி பல்வேறு அமைப்புகள், சாதி சங்கங்கள் எல்லாம் சேர்ந்து அந்தக் காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், ஜமீன்தார்கள் எழுதி வைத்த சொத்துக்களை கொள்ளை அடித்து, கூட்டு சதி செய்து பல லட்சம் கோடிகளை இன்று போலி ஆவணங்கள் மூலம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

அதற்கு இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்கள். அதை எதிர்த்து தான் தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்கம்   கோயில் நிலங்களை மீட்க தமிழகம் முழுதும் போராடி வருகிறது.மேலும், திருநெல்வேலி பகுதியில் இரண்டு லட்சம் ஏக்கர் நிலங்கள் முக்கிய புள்ளிகளே அபகரித்துள்ளனர். அதுவும் நமது மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தியிலும்,இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா, கடையநல்லூர் சரகத்தில் உள்ள கோயில்களில் சத்திரம் உள்பட 26 இடங்கள் கோயில் சத்திரம் என்று உறுதி செய்து, மோசடி வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதற்கு இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் துணை போயிருக்கிறார்கள். அந்த கிராமத்தின் விஏஓ ,நகராட்சி ஆணையர் போன்றவரும் சேர்த்து வழக்கு போட தீர்மானித்துள்ளார். 

அதாவது சொத்து வரி, தண்ணீர் வரி, மின்சார வரி அனைத்தும் கோயில் பெயரில்தான் செலுத்தப்பட வேண்டும் என்பது சட்ட விதி. இந்த சட்ட விதி கூட தெரியாமல் கோயில் நிர்வாக ஆணையர்களாக இருந்து வருகிறார்கள். இவர்கள் ஒரே சர்வே நம்பருக்கு ஆக்கிரமிப்பாளர்களும் பணம் கட்டி ரசீது  வாங்குகிறார்கள். 

இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும் பணம் கட்டி, போலியாக ரசீது வாங்கி அதையும் வருடா, வருடம் ஆடிட்டீங்கிள் கணக்கு காட்டி வருகின்றனர். ஒரே சொத்துக்கு இரண்டு பேர் எப்படி சொந்தம் கொண்டாடி வரி கட்டுவார்கள்? இது யாருக்கு உரிமை என்பது தீர்மானிக்க வேண்டும். 

இந்த மோசடி 1967 லிருந்து இன்றுவரை இந்து சமய அறநிலையத்துறையில் நடந்து வருகிறது என்று ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். நடவடிக்கையில் இறங்குமா? தமிழக அரசு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *