
கண்ணதாசன் கலைவாணியின் மகனா? எத்தனையோ கவிஞன் நாட்டில் பிறக்கிறான். அவனும் கவிதை எழுதுகிறான். அந்தக் கவிதையும் பாடலாகிறது. சினிமாவில் பாடப்படுகிறது. அதுவும் இசையோடு கலக்கிறது.
ஆனால், கண்ணதாசனின் பாடல் இசையோடு கலக்கும் போது, அது ஈர்ப்புடன் மனதை ஈர்க்கிறது. அது இந்தப் பிரபஞ்சத்தோடு ஒலிக்கிறது. அந்த ஓசையின் இசையில் மனதின் அதிர்வுகள் மயங்காத மனமே இல்லை.
அது மட்டுமல்ல, கண்ணதாசன் காலத்தின் நிலையை பிரதிபலிக்கும் கண்ணாடி. தெய்வக் கவிஞன் என்றெல்லாம் கண்ணதாசனுக்கு பெயர் இருந்தாலும், அன்றிலிருந்து இன்று வரை பாடல்கள் மனதில் நீங்காத இடம் பெறுகிறது.
அதுதான் கண்ணதாசனின் தெய்வநிலை. மனிதனும் தெய்வமாகலாம். மனிதன் மறைந்தாலும், அந்த ஆத்மாவின் பெயர்.