தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சியினர் தங்கள் கட்சியின் தலைவர்கள் மற்றும் விஐபிகள் ஜோதிடர்களையும் ,சாமியார்களையும் ,சித்தர்களையும் ,சந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இனி அவர்கள் காட்டில் மழை தானா?

தமிழ்நாட்டில் ஜோதிடம் என்பது தற்போது சாதாரண பாமர மக்கள் முதல் விஐபிகள் வரை தங்களுடைய ஜாதகத்தை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் அரசியல்வாதிகள் தங்களுடைய கட்சித் தலைவர்கள் மற்றும் விஐபிகள் தங்களுடைய கட்சி ஜெயிக்குமா? நாம் அரசியலில் பதவிக்கு வர முடியுமா? என்று பல ஜோதிடர்களை அணுகி ,ஆலோசனை கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் இனி youtube ஜோதிடர்கள் முதல் அப்பாயின்மென்ட் வாங்கி பார்க்கக்கூடிய ஜோதிடர்கள் வரை தேர்தல் நெருங்க, நெருங்க ஒவ்வொருவரும் பிஸியாக தான் இருப்பார்கள். […]

Continue Reading

பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்குக்கும் ,அதை தரம் பிரித்து வழங்கிய மத்திய அரசுக்கும் ,மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில் மனமார்ந்த நன்றி.

மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து சமூக நலன் பத்திரிகைகளுக்காக போராடிவரும் பத்திரிகை. இந்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது செய்தி துறை இயக்குனர் ஆர். வைத்தியநாதன் ஐ ஏ எஸ் க்கு நன்கு தெரியும் . பலமுறை அவரை நேரிலும், செய்திகளை இணையதளத்திலும் ,பத்திரிகையிலும் வெளியிட்டு இருப்பது நன்கு தெரியும். அதனால் ,மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் தமிழக முதல்வருக்கும் இயக்குனர் வைத்தியநாதன் அவருக்கும் நலவாரியத்தில் உறுப்பினராக சேர உத்தரவு வழங்கியதற்கு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு […]

Continue Reading

விஜயின் அரசியல்! மற்றும் மதுரை மாநாடு! தமிழக மக்களிடம் அது தாக்கத்தை ஏற்படுத்துமா?

விஜயின் ரசிகர்களை வைத்து தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவக்கி விட்டார். கட்சியை துவக்கிய நாளிலிருந்து மக்கள் பணி என்பது இல்லை,அரசியல் பணியும் இல்லை. இதற்கு அடுத்தது இவர் ஆரம்பத்தில் பேசும் போது யாரை முன்னிலைப்படுத்துகிறார் ?என்றால், பெரியார் ,அம்பேத்கரை முன்னிலைப்படுத்துகிறார். தற்போது எம்ஜிஆரையும் ,விஜயகாந்தையும் முன்னிலைப்படுத்தி ரோல் மாடலாக பேசுகிறார் . இவருக்கு விஜயகாந்த்திடம் நெருக்கம் இருந்திருக்கலாம். ஏனென்றால் இவர் அப்பாவின் குடும்ப நண்பர். ஆனால், எம்ஜிஆர் இடம் நெருங்கி இருக்க முடியாது. இவர் […]

Continue Reading

மகான் சேஷாத்ரியின் வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது? போராட்டமானது? ஆனால்! இன்றைய போலி சாமியார்களின் வாழ்க்கை எவ்வளவு சொகுசானது? இதுதான் உண்மையான சித்தர்கள் நிலையா?

Continue Reading

நாட்டில் ஊழலையும், ஊழல் அரசியலையும், ஊழல்வாதிகளையும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த என்ன வழி ? – மக்கள் அதிகாரம் media.

மக்கள் அதிகாரம் தொடர்ந்து ஊழலுக்கு எதிராக போராடும் ஒரு பத்திரிக்கை. இங்கே மக்களுக்கு ஊழலுக்கும், லஞ்சத்திற்கும், அர்த்தம் தெரியாதவர்கள். லஞ்சத்தைக் கூட ஏற்றுக் கொள்ளலாம் .ஆனால், ஊழலை ஏற்றுக் கொள்ள முடியாது.இது மிகப்பெரிய சர்ச்சையான கருத்து தான்.  ஏனென்றால்! ஊழல் என்பது பல ஆயிரம் கோடிகளில் நடப்பது! லஞ்சம் என்பது ஆயிரம், ஐநூற்றுல் இருந்து லட்சத்திற்குள் நடப்பது! இது இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. இந்த கோடிகளில் ஊழல் செய்யும் அமைச்சர்கள் தான் அதிகம், எந்த ஒரு உயர் அதிகாரியும் கோடிகளில் […]

Continue Reading

நாட்டில் நீதிமன்றங்கள் எதற்கு? ஆட்சியாளர்களின் ஊழலை மறைப்பதற்கா ? இதன் விளைவு கடை கோடி மக்களின் நம்பிக்கையை நீதித்துறை இழக்குமா ?

தமிழ்நாட்டில் கண்ணுக்குத் தெரிந்து மக்களுக்கு டாஸ்மாக் ஊழல் நடந்துள்ளது. இது ஊர் அறிந்த விஷயம். இதற்கு அமலாக்க துறை விசாரித்து இந்த ஊழலை வெளிக்கொண்டு வருகிறது. ஒரு பக்கம் திமுக என்ன சொல்கிறது என்றால், பிஜேபி எங்களை அரசியல் நோக்கத்துடன் பழி வாங்குகிறது என்கிறார்கள். இன்னொரு பக்கம் நீதித்துறையில், சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு ஸ்டே கொடுக்க முடியாது விசாரணை செய்யலாம் என்று உத்தரவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை விதிகளை மீறுகிறது. எல்லையை மீறுகிறது .அதற்கு ஸ்டே கொடுத்துக்கொண்டு […]

Continue Reading

துணை ஜனாதிபதி ஆகிறார் – சி.பி.இராதாகிருஷ்ணன் .

மகாராஷ்டிரா மாநில கவர்னராக பொறுப்பு வகித்து வந்த சி.பி.இராதாகிருஷ்ணன் தற்போது துணை ஜனாதிபதி ஆகிறார். அவருக்கு அதிமுக எடப்பாடி பழனிசாமி, மற்றும் மாநில பாஜக தலைவர் நாயனார் நாகேந்திரன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும்,சி.பி. ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்திற்கு அரசியல் பலம் சேர்க்குமா?

Continue Reading

அமலாக்கத்துறை ரைடு நடத்தாத அமைச்சர்களே திமுகவில் இருக்க மாட்டார்களா? – ஐ பெரியசாமி வீட்டில் E D ரைடு .

அமலாக்கத்துறை தற்போது அமைச்சர் ஐ பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. இதில் சட்டவிரோத பரிவர்த்தனை தொடர்பான புகாரில், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரின் இல்லம், எம்எல்ஏ விடுதி ,திண்டுக்கல்லில் உள்ள வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல். மேலும், இது சம்பந்தமாக அமலாக்கத்துறை அவருடைய குடும்பத்தினரிடமும், அவருக்கு நெருக்கமான காண்ட்ராக்டர்கள் ,உறவினர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவும் […]

Continue Reading