டிசம்பர் 05, 2024 • Makkal Adhikaram

ஒரு கட்சியின் தலைவர் இன்றைக்கு ஒரு பேச்சு, நாளைக்கு ஒரு பேச்சு, சாயந்திரம் ஒரு பேச்சு, காலையில் ஒரு பேச்சு, ஒரு கட்சி தலைவருக்குள்ள தகுதி அல்ல.தற்போது இதை அக்கட்சியிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிர்வாகிகளே தெரிவித்து வருகின்றனர். மேலும் ஊடக பேச்சாளராக இருக்க வேண்டியவர். அதற்கு தான் அவருடைய தகுதி. எதை சொன்னாலும் ,அதை வைத்து விளம்பரம் செய்து, ஊடக வியாபாரம் செய்வார்கள். அதற்கு தான் சீமான் தகுதி.
ஒரு கட்சியை எப்படி நடத்த வேண்டும்? தலைமைக்கு தகுதி என்ன? எதுவும் தெரியாது. ஏனென்றால் அங்கே அரசியல் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. என்ன என்று தெரியாதவர்கள். எதைப் பேசினாலும் கைதட்டி, விசில் அடிப்பதற்கும், கூட்டத்தில் கத்துவதற்கும் தகுதி உள்ளவர்கள். சீமான் பேசுவதும் ,அவர்களுக்கு எதுவும் புரியாது. இப்படிப்பட்ட நிலையில் சீமானின் தகுதி. இது ஒரு புறம் என்றால்!
ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார்! ஐபிஎஸ் மாநாட்டில் வருண் குமார் பேசும் போது, நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று தெரிவித்துள்ளார்.மேலும், வெளிநாட்டில் நடந்த குற்ற வழக்கு ஒன்றில் தொடர்புடையவரை கைது செய்துள்ளேன். அதில் எல்.டி.டி அமைப்பை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சி என்ற ஒரு பிரிவினைவாத இயக்கத்தை சார்ந்தவரை நானும்,சிலரும் கைது செய்ததால், தொடர்ந்து என்னைப் பற்றியும்,என் மனைவி பற்றியும், அவதூறு பரப்பி வருகிறார்கள். இவ்வாறு வருண் குமார் எஸ் பி ஐபிஎஸ் மாநாட்டில் தெரிவித்துள்ளார் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது . இது எல்லாம் ஒரு தலைவருக்கு தகுதியா? என்பதை தமிழக மக்கள் தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.