EVM வேண்டுமா?வாக்குச்சீட்டு வேண்டுமா?அல்லது எந்த முறை இருந்தாலும், 100% வெளிப்படையான வாக்கு சரிபார்ப்பு வேண்டுமா?இதற்கான தெளிவான பதிலை அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் ,மக்களுக்கு வழங்க வேண்டிய நேரம் இது — மக்கள் அதிகாரம்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்


நாட்டில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த EVM mechine ,இப்போது அவர்களே அது வேண்டாம் , என்று வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர போராடுகிறார்கள்.

ஆனால்,இதில் என்ன தவறு ?என்பதை இன்று வரை எந்த எதிர் கட்சியும், அதை மக்களிடமுமோ, அல்லது நீதிமன்றத்திடமோ, நிரூபிக்கவில்லை. ஆனால், குறைகளை தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பிஜேபி அதை வைத்து தவறு செய்கிறது.

இதை அவர்களுக்கு வேண்டிய ஊடகங்களும், சி ஜே பி போன்ற காக்ரோச்களும் ஏதோ மக்களுக்காக போராடுவது போல், போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தின் அரசியல் உள்நோக்கமே என்னவென்றால்! தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மாற்றப்பட வேண்டும்.

ஏனென்றால், அவர்தான் இந்த எஸ் ஐ ஆர் (SIR) கொண்டு வந்தார். அது இவர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. அதற்கு காரணம், இந்த எதிர்க்கட்சிகள் கள்ள ஓட்டு போட்டு ஜெயித்திருக்கிறார்கள் என்பது தான் இவர்கள் போராட்டத்தின் உள்நோக்கம்.

அதாவது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பங்களாதேஷ் முஸ்லிம்களை இறந்தவர்களின் வாக்குகளை, இடம்பெயர்ந்தவர்களின் வாக்குகளை, எல்லாம் கணக்கில் கொண்டு வந்து விட்டார்கள்.

இது எல்லாம் எடுக்கவே, இவர்களுக்கு இது ஒரு பெரிய தேர்தலில் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அதனால்தான், தமிழ்நாட்டில் திமுக வும், மத்தியில் காங்கிரஸ் ,மம்தா பானர்ஜி போன்ற அனைவரும் இதை எதிர்த்து வருகிறார்கள்.

இந்த இவிஎம் மெஷின் கொண்டு வந்ததே முதன் முதலில் காங்கிரஸ் தான் கொண்டு வந்திருக்கிறது. அப்படி இருக்கும்போது, ஏன் அதே காங்கிரஸ் இப்போது அதை எதிர்க்கிறது?

தேர்தல் ஆணையத்தால் வாக்காளரின் பெயர் ,விலாசம் சரியாக விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று. இது ஜனநாயகத்தின் உரிமை. இரண்டாவது வாக்களிப்பவர் யாருக்கு வாக்களித்தோம் ?என்பதை அவர் ஒரு நிமிடம் விவி பேட் (VVPAT )மூலம் அவசியம் சரி பார்த்துக் கொள்வது தேர்தல் ஆணையத்தின் முக்கிய பணி.

இது தவிர, இறந்தவர்கள் பெயர்கள் நீக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் முக்கிய பணி.

அதேபோல், இடம் பெயர்ந்தவர்களின் பெயரை தேர்தல் ஆணையத்தால் நிக்க வேண்டியது அதுவும் முக்கியமானது.

இதில் தேர்தல் ஆணையம் செய்த தவறு என்ன? தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்த தவறு என்ன? நேற்று ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்த கரப்பான் பூச்சிகள், இந்த நாட்டுக்கு தியாகி போல பேசிக்கொண்டு, ஞானஷ் குமாரை பதவி விலகக் கோரி போராட்டம் என்கிறார்கள்.

ஞானேஷ் குமார் செய்த தவறு என்ன? தேர்தல் ஆணையம் செய்த தவறு என்ன ?அதை முதலில் எதிர்கட்சிகள் மக்களிடம் வரைமுறை படுத்த முடியுமா?

மேலும்,எதற்காக இந்தப் போராட்டம்? உங்கள் கேள்வியின் நோக்கம் என்ன? மோடி முறைகேடாக பிரதமர் ஆகிவிட்டார் என்பதெல்லாம் உங்கள் அரசியலை தேர்தல் ஆணையத்தோடு விளையாட கூடாது.

அதனால்,தேர்தல் ஆணையம் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் ,நாளை இவர்கள் இதே இவிஎம் மிஷினில் ஜெயித்தால், அப்போது இவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?

மேலும்,எதிர்க்கட்சியாக பிஜேபி வந்தால், அப்போது அதே பிஜேபி சொன்னால், இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இது ஜனநாயகத்தின் மீது தொடுக்கும் மிகப்பெரிய போராட்டம் மற்றும் ஆபத்து.

எனவே ,தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும், உச்சநீதிமன்றமும் ,இதற்கு இந்த எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு கடும் நடவடிக்கை எடுப்பார்களா? சமூக நலன் பத்திரிகைகள் சார்பில் மக்கள் அதிகாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *