காலாவதியான செய்தியாளர் ஐ.டி கார்டுடன் மசாஜ் சென்டரில் அடாவடி; இளைஞர் கும்பலை வறுத்தெடுத்த செய்தியாளர்கள்..!

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

செப்டம்பர் 29, 2024 • Makkal Adhikaram

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், அண்ணா சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான மசாஜ் சென்டர் உரிய அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது.கடந்த 4 ஆண்டுகளாக மசாஜ் சென்டர் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இன்று அங்கு வந்த 4 இளைஞர்கள், மசாஜ் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். உரிய பணத்தை செலுத்தி சேவையை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில், அவர்கள் பணம் செலுத்தியதும் தங்களின் பேசும் பாணியை மாற்றி இருக்கின்றனர்.

4 இளைஞர்களில் ஒருவர் தன்னை செய்தி நிறுவனத்தின் ரிப்போர்ட்டர் என அறிமுகம் செய்து, வீடியோ எடுத்தவர் மசாஜ் சென்டர் நடத்த அனுமதி யார் கொடுத்தது? உங்களை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டி பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் அங்கிருந்து வெளியே செல்ல முற்பட்டபோது, அவர்களை வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். ஒருசிலர் கண்ணாடியை உடைத்து வெளியேற, அவர்களை நடுரோட்டில் துரத்தியபடி மிரட்டி வீடியோ எடுத்து இருக்கிறார்கள்.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், 4 இளைஞர்களையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர். மேலும், அம்மாவட்ட பிற செய்தி நிறுவனங்களின் களப்பணியாளர்களும் இவர்கள் செய்த செயலை அறிந்து காவல் நிலையம் விரைந்து இளைஞர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

காவல் நிலையம் வந்ததும் இளைஞர்களில் தன்னை செய்தியாளர் என அறிமுகம் செய்தவர், நான் ஒரு ஐடி பணியாளர், நான் ஏன் செய்தியாளர் என சொல்லப்போகிறேன் என பதுங்கத்தொடங்கி, லெமுரியா ஓசை என்ற நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட காலாவதியான ஐடி கார்டை காண்பித்து இருக்கிறார்.

இதனையடுத்து, அதிகாரிகள் இளைஞர்களிடம் விசாரணையை தொடங்கினர். மேலும், அவர்களின் காரும் காவல் நிலையம் எடுத்து வரப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *