மோடிக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும்,போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களுக்கும்,அதற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் வெளிநாட்டிலிருந்து பணம் கை மாறி உள்ளதா ? -தேசிய புலனாய்வு உளவுத்துறை.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

பிப்ரவரி 19, 2025 • Makkal Adhikaram

பல கார்ப்பரேட் பத்திரிகை கம்பெனிகளுக்கு, வெளிநாட்டில் இருந்து மோடிக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதற்கும், அதே போல் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கும், பணம் கைமாறி உள்ளதாக தேசிய புலனாய்வு உளவுத்துறை அதிகாரியான அஜித்தோவலிடம் இந்தியா முழுமைக்கான ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

பத்திரிக்கை துறை நான்காவது தூண் என்று மக்களை ஏமாற்றி தேச துரோக வேளையில் மறைமுகமாக ஈடுபடும் போராட்டக்காரர்களுக்கு மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, பணம் கைமாறியுள்ளதாக தகவல் ,மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பத்திரிகைகளின் மீது மக்களின் நம்பகத்தன்மை மிகவும் குறைந்து விட்டது. இதற்கு காரணம் மத்திய, மாநில அரசின் செய்தித் துறை தான் முக்கிய காரணம்.

 இவர்கள் பத்திரிகையின் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை செய்தியின் தரம், சமூக நோக்கம், இதன் அடிப்படையில் சலுகை, விளம்பரங்கள் கொடுத்திருந்தால், பத்திரிக்கை துறைக்கு இப்படிப்பட்ட அவல நிலை ஏற்பட்டிருக்காது. இது தவிர, மக்களின் வரி பணமும் கோடிக்கணக்கில் இந்த பத்திரிகைகளால் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வீணடிக்கப்படுவது சமூக ஆர்வலர்கள், சமூக நலன் பத்திரிகைகள் வேதனை தெரிவிக்கின்றன. மேலும்,

இப்படிப்பட்ட பத்திரிகைகள்  பொய்யை உண்மையாகி சொல்வதில் பத்திரிக்கை திறமை அல்ல, அதற்கு பெரிய பத்திரிக்கை என்ற பட்டமும் தேவையில்லை. அப்படிப்பட்ட தேவையில்லாத பட்டத்தை மக்கள் தான் கொடுக்கிறார்கள். இது பற்றி தெரியாத செய்தி துறை அதிகாரிகள் கூட இந்த பட்டத்தை அவர்களுக்கு கொடுத்து விடுகிறார்கள். பத்திரிக்கை என்பது பலமுறை மக்கள் அதிகாரத்தில் எழுதி இருக்கிறேன், இது ஒன்றும் ஐஎஸ்ஐ(ISI) முத்திரை பதிக்கப்பட்ட கம்பெனி ப்ராடக்ட் அல்ல,

பத்திரிகை என்றால் உண்மை! பொய்யை சொல்வதற்கு பெயர் பத்திரிகை அல்ல, அது போலி! பல போலி பத்திரிகைகள் உண்மை போல செய்திகளை மக்களுக்கு வெளியிட்டு, ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் ஆய்வு செய்து பத்திரிகையின் தரம், தகுதி, உண்மை, இதன் அடிப்படையில் சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் .அது மட்டுமல்ல, சர்குலேஷனை வைத்து தீர்மானிக்கிற ஒரு தவறான சட்டம் பத்திரிக்கை துறையில் இருப்பதால்  ஊழல்வாதிகளுக்கும், ஊழலுக்கும் துணை போகிற ஒரு முக்கிய சட்டமாக இந்த சர்குலேஷன் சட்டமும், அரசின் கொள்கை முடிவான சட்டமும் இதில் இருக்கிறது.

அதனால் காலத்திற்கு ஏற்ப இந்த சட்டங்களை மாற்றி அமைப்பது தான் மிகச் சரியானது. இந்த ஓட்டை சட்டங்களை வைத்து மறைமுகமாக பத்திரிகைகளை தேச நலனுக்கு எதிராக செயல்படுகிறார்கள். அது மிக மிக தவறானது. கடும் கண்டனத்திற்குரியது.இப் வாவது இந்த மத்திய மாநில செய்தித் துறை அதிகாரிகளுக்கு பத்திரிக்கை என்றால் தரம் தகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற உண்மையை ஏற்றுக் கொள்வார்களா?

 மேலும், விகடன் பத்திரிக்கை நாட்டின் பிரதமர் மோடியை ட்ரம்ப் பக்கத்தில் விலங்கிட்டு காட்டுவது என்ன காரணத்திற்காக? எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு அதன் நோக்கம் என்ன? என்பது புரியவில்லை என்றால், சமானிய மக்களுக்கு எப்படி புரியும்? இது மேலும், பிரதமர் விலங்கிட்டு காட்டும் அளவுக்கு அவர் என்ன? தவறு செய்துவிட்டார். அவர் மீது என்ன ஊழல் குற்றச்சாட்டு? இது எல்லாம் எதுவும் கிடையாது.ஒருவேளை மோடி !அமெரிக்காவின் சட்டத்திற்கு எதிராக அவ்விடத்தில் தவறு செய்து விட்டாரா? எதுவும் இல்லை. எதற்காக இப்படி ஒரு கார்ட்டூன்?

மோடிக்கு அப்படிப்பட்ட ஒரு கார்ட்டூன் போட்டது தவறுதான். ஒருவேளை இந்த பத்திரிகையின் ரகசிய உள்ளடி வேலை வெளிநாட்டில் பணம் கைமாறி உள்ள பத்திரிகைகளில் இதுவும் ஒன்றா? என்ற சந்தேகத்தை இது எழுப்பி உள்ளது. எனவே, மத்திய, மாநில அரசின் செய்தித்துறை உளவுத்துறையின் மூலம் இவர்களுடைய உண்மை தன்மையை ஆய்வு செய்து எந்தெந்த பத்திரிகைகள்? எந்தெந்த தொலைக்காட்சிகள்? தேச துரோக வேலைகளில் ஈடுபடுகிறார்கள்? எந்தெந்த பத்திரிக்கையாளர்கள் தேச துரோக வேலைகளில் ஈடுபடுகிறார்கள்? சமூகத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்? , 

இதை எல்லாம் ஆய்வு செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, இவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகை, விளம்பரங்கள் அதற்கு இந்த பத்திரிக்கையும், பத்திரிகையின் செய்தியாளர்களும் தகுதியா? என்பதை ஆய்வு செய்து ஒவ்வொரு பத்திரிகைக்கும் கொடுக்க வேண்டும் என்பதுதான் மக்கள் அதிகாரத்தின் நீண்ட கால கோரிக்கையும், போராட்டமும் அதுதான். ஏனென்றால் !

அரசியல் செல்வாக்கில் பத்திரிகைகள் விளம்பரங்களை வாங்கிக் கொண்டு அதாவது வலியவன் ,எளியவனை வீழ்த்துவது போல, சாமானிய பத்திரிகைகளை இந்த பத்திரிகைகள் தொடர்ந்து 50 ஆண்டு காலமாக வீழ்த்தி வருகிறது. இதற்கு சர்குலேஷன் சட்டமும், அரசின் கொள்கை முடிவும், சாமானிய பத்திரிகைகளுக்கு எதிரான ஒரு சட்டமாக இருக்கிறது. இந்த சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் என்பதுதான் சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *