அக்டோபர் 10, 2024 • Makkal Adhikaram
சாம்சங் தொழிற்சாலை ஸ்ரீ பெருமந்துருக்கு அருகில் அமைக்கப்பட்ட ஒரு தொழிற்சாலை . இந்த தொழிற்சாலை 2007 முதல் இயங்கி வருகிறது. இங்கே இரண்டு மாத காலமாக தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். தொழிலாளர்கள் கோரிக்கை என்பது நியாயமான ஒன்று. அந்த கோரிக்கையை சாம்சங் கம்பெனி நிறுவனம், தமிழக அரசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, அதை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டது.
இருப்பினும் சாம்சங் நிறுவனத்திற்கும், சிஐடியு சங்கத்திற்கும் ஒரு முரண்பாடான கோரிக்கை கம்பெனி நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதாவது இந்த கம்பெனியில் சிஐடியு சங்கம் உருவாக்குவதற்கு சாம்சங் நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை. இது ஒரு பக்கம் அரசியல் கட்சிகள் மறைமுகமாக இவர்களை உசுப்பி விடுகிறார்கள்.
மற்றொரு பக்கம் தமிழக அரசுக்கு இது ஒரு கௌரவ பிரச்சனை, மற்றொரு பக்கம் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் பிரச்சனை, இந்த பிரச்சனை எல்லாம் தாண்டி சிஐடியு சங்கம் நாங்கள் இங்கே கொடி பிடித்தால் தான், வேலை செய்வோம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நீங்கள் வேலைக்கு வந்தீர்களா? அல்லது கம்பெனியில் கொடி பிடிக்க வந்தீர்களா? இந்த ரெண்டு கேள்விக்கு சிஐடியு சங்கம் பதிலளிக்க முடியுமா?
மேலும் ,ஒரு தொழில் நிறுவனம் நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பிழைக்க முடியும். ஆனால், இந்த சங்கத்தை நம்பி யார் பிழைக்க முடியும்? யாருமே பிழைக்க முடியாது. பிழைப்பவர்கள் மட்டும்தான் அங்கே கத்திக் கொண்டிருப்பார்கள். அதனால், திமுக அரசு எடுக்கும் நடவடிக்கை நியாயமானது. ஒரு பக்கம் தொழிலாளர்கள் நலன், மற்றொரு பக்கம் அரசின் கௌரவ பிரச்சனை, இதில் எடுக்க வேண்டிய நடவடிக்கை சரியானது தான் .