
விஜய்க்கு அரசியல் தெரியாது. சினிமாவில் நடிப்பது போல் ,ஸ்கிரிப்ட் எழுதி கொடுப்பவர்கள் வசனத்தை பேசுவது போல் ,அரசியலிலும் பேசிக்கொண்டு வருகிறார்.

ஒட்டு மொத்தமாக எல்லா எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும், இதே பரப்புரையாக தான் இருந்து இருக்கிறது. அதாவது வாக்கு திருட்டு ! வாக்கு யார் திருடுகிறார்கள்? என்பது தெரியாமல் ராகுல் காந்தியும், மாயாவதி ,அகிலேஷ் யாதவ், மு. க. ஸ்டாலின் ,அந்த வரிசையில் தற்போது விஜயும் இதைப் பற்றி பாஜக மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

கள்ள ஓட்டு போடுவதை தேர்தல் ஆணையம் சரியான முறையில் தடுத்துள்ளது. அதாவது தற்போது இ.வி.எம் மிஷின்களில் ஒருவர் ஒருமுறை தயிராகை அழுத்தி வாக்களித்து விட்டால், மீண்டும் கைரேகை அழுத்தியோ, அவர் முகத்தை காட்டியோ, வாக்களிக்க அந்த மெஷின் ஏற்றுக் கொள்ளாது. அப்படி இருக்கும் போது, கள்ள ஓட்டு இனி இவிஎம் மிஷின்களில் போட முடியாது. இது தேர்தல் ஆணையம் இதைக் கொண்டு வந்துள்ளது. இதை எப்படி பிஜேபியின் வாக்குத்திருட்டு என்கிறார்கள்?இது நல்ல விஷயம் தானே. மேலும், இதை

எப்படி வாக்கு திருட்டாக எதிர்க்கட்சிகள் பார்க்கிறார்கள்? கள்ள ஓட்டு போட முடியாது என்பதை வைத்து தான், இவர்கள் வாக்குத்திட்டு என்கிறார்களா? அல்லது இனி நாம் கள்ள ஓட்டு முடியாது என்பதற்காக தான் போராடுகிறார்களா? இதைப் பற்றி எதுவும் தெரியாத அப்பாவி மக்கள் குழம்பி வருகிறார்கள். இதைப் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது பத்திரிகைகளின் கடமை. ஆனால் ,எதிர்கட்சிகள் குழப்புவதைப் போல், இந்த பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். தவிர,

விஜய் இதைத் தெரிந்து எதிர்க்கட்சிகளோடு சேர்ந்து இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்துகிறாரா? இல்லை தெரியாமல் அவருக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்தவர்கள், பேச்சை நம்பி பேசுகிறாரா? என்பது அவருக்கு தெரியுமா? தெரியாதா? என்பதும் தெரியவில்லை.மேலும்,

தொகுதி மறு சீரமைப்பு என்ற குற்றச்சாட்டு, வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ,தொகுதி மறுசீரமைப்பு அவசியமான ஒன்று. இல்லை அதுவே ,வாக்காளர்கள் குறைந்தால் அதுவும் மறுசீரமைப்பு அவசியமானது.
தவிர, தொகுதி மறு சீரமைப்பு என்பது எந்த காரணத்திற்காக பிஜேபி அதை செய்கிறது? மக்களின் வளர்ச்சியை தடுப்பதற்காக செய்கிறதா? அல்லது தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பதற்காக செய்கிறதா? அல்லது அது தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரானதா? அல்லது இங்குள்ள அரசியல் கட்சிகள் இதை தவறாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களா? இதுதான் எங்களைப் போன்ற அரசியல் பார்வையாளர்களின் கேள்வி? எதுவுமே இல்லை.

அப்படி இருக்கும்போது ,நாட்டுக்கு தொகுதி மறு சீரமைப்பு என்பது எதன் அடிப்படையில் அது சீரமைக்கப்படுகிறது? என்பது குறித்து தெரிந்து பேச வேண்டும்.
நீங்கள் 40 தொகுதி எம்பிக்களை வைத்து இந்தியாவை ஆட்ட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. 140 கோடி மக்களின் வாழ்க்கையும், அதில் அடங்கியுள்ளது. அடுத்தது ஒரே நாடு !ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதால் மக்களுக்கு என்ன பாதிப்பு? அதை ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுக்கக் கூடியவர்கள் அவரிடம் தெரிவித்திருக்க வேண்டும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதால் நாட்டில் மக்களின் வரிப்பணம் பல்லாயிரம் கோடி வீணாவதை ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல்வாதிகளின் கருப்பு பணம் தேர்தல் நேரத்தில் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படுகிறது. இது தவிர , அரசு ஊழியர்கள் தேவையில்லாமல் தேர்தல் பணிச்சுமை, மக்களுக்கு வாக்களிக்கும் பொறுப்பு மற்றும் நேரம் ,காலங்கள் தவிர்க்கப்படுகிறது.

அது மட்டுமல்ல, தேர்தலைப் பற்றிய தெரியாத மக்கள் தெரிந்து கொள்ளவும் இது ஒரு வாய்ப்பு அதாவது இங்கு இல்லா பிரிவினைவாத அரசியல் செய்வது போல மத்திய அரசு வேறு மாநில அரசு வேறு, போன்ற பிரச்சாரங்கள் தடுக்கப்பட்டு மக்களுக்கு இந்த தேசநலன், சமூக நலன் ,முக்கியத்துவமானது என்பதை ஒரே நாடு ஒரே தேர்தல் புரிய வைக்கும்.மேலும், விஜய்

இதையெல்லாம் தெரிந்து திருச்சி மாநாட்டில் பேசியிருக்கிறாரா? அல்லது அவராவது அதைப் பற்றி எதுவும் தெரியாது அரசியல் கட்சியினர் எழுதுகிற ஸ்கிரிப்ட் அப்படியே மனப்பாடம் செய்து கொண்டு, பேசுகிறாரா? தவிர, சினிமா போல் ,அரசியலில் வசனம் பேசி நடிக்கும் வேலையா? விஜயின் அரசியல் . மேலும்,

சினிமா வேறு ,அரசியல் வேறு என்பதை தமிழ்நாட்டு இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதே பாணியில் அரசியலை நடத்தினால், அதன் பின் விளைவுகள் இந்த தேசத்திற்கும், மக்களுக்கும் ஆபத்தானது.
எதிர்க்கட்சிகள் அனைவரும் மக்களின் ஓட்டு அரசியலையும், அதிகார அரசியலையும் கைப்பற்ற போராடுகின்ற அரசியல். மக்களுக்காக, இந்த தேச நலனுக்காக, போராடுகிற ஒரு கட்சி நாட்டில் பிஜேபி மட்டும் தான். அது பற்றி அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும்.

எல்லா அரசியல் கட்சியும், எப்படிப்பட்ட அரசியலை முன்னெடுக்கிறார்கள்? என்பது சமூக நலன் பத்திரிகையாளர்களுக்கு நன்கு தெரியும். இதில் யார்? யார்? எந்தெந்த நோக்கத்திற்காக இவர்களுடைய அரசியல் நகர்வு என்ன? என்பதை ஆய்வு செய்யும் தகுதி உள்ள சமூக நலன் பத்திரிகையாளர்கள் ,இந்த உண்மையை வெளிப்படுத்த முடியும். அந்த வரிசையில் மக்கள் அதிகாரம் எதிர்க்கட்சிகளின் அரசியல், இந்த மக்களின் ஓட்டுக்காக ,அதிகார மையத்தை கையில் பிடிப்பதற்காக அரசியல் நடத்துகிறார்கள் . மேலும், இவர்களுடைய அரசியல் கொள்கைக்கும் , பேசுவதற்கும், செயல்படுவதற்கும்,நடைமுறையில் எந்த சம்பந்தமும் இருக்காது . தவிர, இவர்கள் ஓட்டுக்காக இலவசங்கள் கொடுப்பது தேவையற்றது. ஓட்டுக்கு பணத்தை கொடுப்பது தேவையற்றது . தகுதியற்றவர்களின் வேலை .

இவர்கள் எதற்காக இதை செய்ய வேண்டும்? மக்கள் இலவசத்தையும் கேட்கவில்லை ஓட்டுக்கு பணமும் கேட்கவில்லை . அப்படி என்றால், இவர்களாக தேடித் ,தேடி ,ஏன் கொடுக்கிறார்கள்? அப்போ ,இவர்களுடைய அரசியல் சுயநலம் மற்றும் அரசியல் வியாபாரம் அதிலே வெளிப்படுகிறது. இதையெல்லாம் ஏன் சொல்ல வேண்டும்? இன்றைய இளைஞர்கள்,
இந்த சினிமா மாயையில் மூழ்கி கிடைக்கும் இளைஞர்கள். இவர்களுக்கு இந்த தேசப்பற்றையும், சமூக நலனுக்கானபற்றையும், இவர்கள் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.
மேலும்,சினிமா பொழுது போக்குக்காகவும் எடுக்கிறார்கள். ஒரு சில படங்கள் தேச நன்மைக்காக எடுக்கப்படுகிறது. இதில் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து இந்த அரசியலை, அதற்குள் தமிழ்நாட்டு இளைஞர்கள் பார்க்கக் கூடாது.

அந்தக் காலத்தில் எம்ஜிஆர் ஒருவர் மட்டும்தான் இந்த பணத்திற்காக நடிக்கவில்லை. எம்ஜிஆர், சிவாஜி பணம் என்பது அவர்களுக்கு இரண்டாவது கட்டமாக தான் இருந்தது. முதல் கட்டம் இந்த நாடு, சமூக நலன், மக்கள் பிரச்சனை இதை மையப்படுத்தி தான் அவர்கள் படம் எடுத்தார்கள். மேலும்,
எம்ஜிஆருக்கும், சிவாஜிக்கும் ஒரு சீன் பிடிக்கவில்லை என்றாலும், தேவையற்ற வசனங்களை அதில் தயாரிப்பாளர்களோ, வசனகர்த்தாவோ, புகுத்தி இருந்தாலும் ,அதை நீக்கிவிடு என்று சொல்லி நீக்கிவிடுவார்கள். இப்போது அந்த அளவுக்கு எந்த நடிகரும் இல்லை.

எல்லாம் பணத்திற்காக தான் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் பேரும் புகழுக்கும் தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். இப்போது பணத்திற்காக தான் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். அதனால், சினிமாவில் வசனம் பேசுவது போல், அரசியலில் பேசி விட்டு, நடித்துவிட்டு போனால் ,மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை எந்த நன்மையும் இல்லை.

மேலும்,கூட்டத்தைக் கூட்டி, கைத்தட்டி, விசில் அடித்து, ஒரு அதிகார மையத்தை கையில் எடுப்பதால் மக்களுக்கு எந்த பிரயோஜனம் இல்லை. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நான் ஊழலற்ற ஆட்சியை தரப் போகிறேன் என்றால் ,இதுவரையில் ஊழலுக்காக விஜய் என்ன போராடி இருக்கிறார் ?என்ன செய்திருக்கிறார் ?அதுதான் எனக்குத் தேவை.
இதை எந்த பத்திரிக்கையும், தொலைக்காட்சியும் எழுதாது .விஜய் இடம் பணம் வாங்கிக் கொண்டு,, பாராட்டிக் கொண்டிருக்கும். இல்லையென்றால் எதிர்க்கட்சி பத்திரிகைகள் அவர் மீது குற்றம் சாட்டி விமர்சனம் செய்து கொண்டிருக்கும். அந்த இடத்திற்கு மக்கள் அதிகாரம் செல்லவில்லை.

ஆனால், நீங்கள் ஒரு அரசியலை முன்னெடுக்கிறீர்கள் என்றால்! அது என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். எதிர்க்கட்சிகள் சொல்கிற அத்தனை குற்றச்சாட்டுகளையும், அதே பாணியில் சொல்வது, அரசியல் தெரிந்தவர்கள் அதை ஏற்க முடியாது.
மேலும் ,எல்லோரும் அடி முட்டாள்களாக, விசில் அடித்து, செல்போனில் படம் பிடித்து, கைதட்டி விட்டு போக மாட்டார்கள். அரசியல் என்பது சினிமாவைப் போல் கூத்தடிக்கும் வேலையல்ல. இங்கே உழைக்க வேண்டும். உழைப்பது மக்களுக்காக இருக்க வேண்டும். அது உண்மையாக இருக்க வேண்டும் .

எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளின் நடிப்பு, நாடகமாக இருக்கக் கூடாது. அதற்கு பக்க பலமாக கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் போல் பக்கவாத்தியம் வாசிக்க கூடாது.
அதனால், இனிமேலாவது விஜய்க்கு அரசியல் ஸ்கிரிப்ட் எழுதக்கூடிய நபர்கள், இதற்கெல்லாம் காரணத்தை சொல்லிவிட்டு, அல்லது விஜய்காவது அதைப் பற்றி அர்த்தம் சொல்லிவிட்டு, எழுதிக் கொடுப்பது நல்லது என்கிறார்கள் பிஜேபியினரும் சமூக ஆர்வலர்கள் மற்றும் தேச நலன் விரும்பிகள்.