மனிதன் தெய்வமாகலாம், அது எப்படி?மனித வாழ்க்கைக்கு! அரசியலும், ஆன்மீகமும் இரு கண்கள்.அரசியல் போலிகளை விளம்பரப்படுத்த இந்த பத்திரிகைகளுக்கு, சலுகை, விளம்பரங்கள் கொடுக்கின்ற செய்தித்துறை அதிகாரிகளுக்கு இந்த உண்மை புரியுமா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

பிப்ரவரி 28, 2025 • Makkal Adhikaram

 மனிதன் தெய்வமாகலாம், அது எப்படி?மனித வாழ்க்கைக்கு! அரசியலும்,  ஆன்மீகமும் இரு கண்கள்.அரசியல் போலிகளை விளம்பரப்படுத்த இந்த பத்திரிகைகளுக்கு, சலுகை, விளம்பரங்கள் கொடுக்கின்ற செய்தித்துறை அதிகாரிகளுக்கு இந்த உண்மை புரியுமா?

நான் வாழ்வதற்கு அரசியல் அவசியம்! என்னை மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு மாற்ற ஆன்மீகம் அவசியம் . இது எனக்கானது மட்டுமல்ல, இது அனைத்து மக்களுக்குமானது என்பதை தான் ,என்னை வைத்து, இந்த செய்தியை, மக்களுக்கு உண்மையின் விளக்கமாக தெரிவித்துள்ளேன்.

மனிதன் தெய்வமாகலாம், அது எப்படி? என்பது புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு!அது முடியுமா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி?மனிதன் தெய்வமாகலாம் அது எப்படி என்பது புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு!அது முடியுமா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி? மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கமே நீ தெய்வத்தை தெய்வ நிலையை அடைவதற்கு தான் என்பதை ஒவ்வொரு ஜீவாத்மாவும் புரிந்து கொள்ள வேண்டும்.மேலும், 

இன்றைய வாழும் சித்தர்களில் ஒருவரான கருங்குழி ராகோத்தமன் சுவாமிகள் ஒவ்வொரு பௌர்ணமிக்கு மட்டுமே வெளியில் வந்து, இந்த மக்களுக்கு இறையருளை பெற வேண்டும், ஞானத்தை அடைய வேண்டும், தெய்வத்தன்மை அடைய வேண்டும், இதற்காக தான் இவர்கள் பிறவி எடுத்திருக்கிறார்கள்.மனிதனை துன்பப்படுத்துவது இறைவனின் நோக்கம் அல்ல, 

செய்த பாவ கணக்குகளுக்கு ஒவ்வொரு ஜீவனுக்கும், அதாவது நீ எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவரவர் செய்த கர்ம வினைக்கு தக்கவாறு சனீஸ்வரன் என்கிற தெய்வம்! ஏழரை சனியாக, அஷ்டம சனியாக, வந்து கஷ்டங்களை அதற்கு அவரவர் செய்ததற்கு தக்க தண்டனையாக கொடுப்பார்.அது எப்படி வரும்?என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. அதுதான் சனீஸ்வரன். நல்லதும், கெட்டதும் அவரைப் போல் கொடுப்பது யாரும் இல்லை .அதனால், ஒவ்வொரு மனிதப்பிறவிக்கும், நீதிபதி இவர்தான்.இந்த நீதிபதி, நீதி தேவன் யாருக்காகவும், சட்டத்தை மாற்றி எழுத மாட்டார். சட்டத்தை வளைக்கவும் மாட்டார்.இது ஜோதிடம் புரிந்தவர்களுக்கு தெரியும்.மேலும், 

இந்த கடவுளின் மறு பிறதிபலிப்பே சித்தர்கள், மகான்கள். ஈஸ்வர கடாட்சம் பெற்றவர்கள் தான் சித்தார்கள். அதைப் பெறுவதற்கும், அவன் அருள் இல்லாமல் யாராலும் முடியாது. இவர்களும் ஒரே பிறவியில் இந்த நிலைக்கு வந்தவர்கள் அல்ல, பல பிறவி எடுத்து அந்தப் பிறவியில் இறைவனை நினைத்து,நினைத்து வேண்டி அவன் அருள் பெற்றதன் பயனால், இன்று சித்தர்கள்நிலை அடைகிறார்கள். பெரும்பாலும் சித்தர்கள் மக்களுக்காகவே வாழக்கூடியவர்கள். 

இதிலும் போட்டிகள் இருக்கிறது.அந்தப் போட்டியில் ஜெயித்தாக வேண்டும். இதிலும் கஷ்டம் இருக்கிறது, அந்த கஷ்டத்தை தாண்டியாக வேண்டும். அதாவது எந்த நிலையானாலும், உழைப்பில்லாமல் எதுவும் இல்லை. ஆனால், தற்போது அரசியலில் மட்டும் தான் உழைப்பில்லாமல், பல ஆயிரம் கோடிகளையும், பல 100 கோடிகளையும், கொள்ளையடித்துக் கொண்டு, ஊழல்வாதிகளாக இருந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அரசியல்வாதிகளாக இல்லை. நாட்டில் ஊழல்வாதிகள் ஆக இருக்கிறார்கள். இந்த ஊழல்வாதிகளை, அரசியல்வாதிகள் என்று விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பது தான் இன்றைய பத்திரிகை, தொலைக்காட்சிகளில் 99 சதவீதம் இருந்து கொண்டிருக்கிறது. 

நான் சாமியின் அந்த நிகழ்வில் கூட சீரியலில் நடித்த நீலாவும், அவரது கணவர் சதீஷும் பேசும்போது சொன்னார்கள். இது பத்திரிகைகளே அல்ல, இது பத்திரிக்கை விபச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். துளி கூட பத்திரிக்கை தர்மமே இல்லை.எந்த அளவுக்கு இந்த பத்திரிகைகள் இருக்கிறது என்பதை இதை விட ஒரு தெளிவான உண்மையை சொல்ல முடியாது. இதற்கு மக்களின் வரிபணம் கோடிக்கணக்கில், சர்குலேஷன் சட்டத்தை வைத்து மத்திய, மாநில அரசின் செய்தித் துறை உயர் அதிகாரிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால்! அவர்களை விட முட்டாள்கள், நாட்டில் வேறு யாரும் இருக்க முடியாது. 

மேலும், இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பாகவும், சமூக நலன் பத்திரிகைகள் சார்பாகவும், சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பாகவும், இவர்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் அரசியல் கட்சி பத்திரிகைகள், வியாபார பத்திரிகைகள், இதற்கு எல்லாம் எத்தனை கோடி சலுகை ,விளம்பரங்கள் கொடுக்கிறார்கள்? மக்களுக்கு என்ன பயன்? அரசு செய்தி போட்டால், அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறது என்று ஆடிக் கொண்டிருப்பீர்களா? பத்திரிகை எதற்கு ?ஏன்? மக்களுக்கா? இல்லை ஆட்சியாளர்க்கா? இல்லை அரசியல் கட்சிகளுக்கா? எதற்கு? என்பதை சொல்லிவிட்டு, அதன் தரம் என்ன ?தகுதி என்ன? இது எல்லாவற்றிற்கும் நீங்கள் தான் பதில் அளிக்க வேண்டும் .தவிர ,போலிகளுக்கு துணை போகக்கூடிய முதல் குற்றவாளிகள் மத்திய ,மாநில அரசின் செய்து துறை அதிகாரிகள் தான்.அதனால்,

இவர்களால் இன்னும் பல பிறவிகள் எடுத்து இந்த பாவ கணக்கை கழிக்க முடியுமா? என்பது தெரியவில்லை.ஏதோ ஒரு பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனாள், இப்பிறவியில் இந்த பதவி, அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். அதை நல்ல நோக்கத்திற்காகவும், நல்ல செயல்களை செய்வதற்காகவும், பிறருக்கு சேவை மனப்பான்மையோடு பணிபுரிவதற்காக தான், இந்த பதவி, அதிகாரம் இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மறந்து விடுகிறார்கள்.மேலும்,

வெளிவேஷம், உண்மை இல்லாத பேச்சு,மக்களுக்கு அரசியல் தெரியாது என்று, போலி அரசியல்வாதிகள், உழைக்காமல் இன்று பல ஆயிரம் கோடிகளை பார்ப்பது எப்படி? பல 100 கோடிகளை பார்ப்பது எப்படி? இப்படிதான் இவர்களுடைய அரசியல் பயணம். பணம் இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும். பணம் இருந்தால் தான் நம் பின்னால் கூட்டங்கள் வரும். இந்த நிலைக்கு போலி அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இவர்கள் அரசியல்வாதிகள் அல்ல, அரசியலில் எப்படி கொள்ளை அடிக்கலாம்? என்று வந்திருப்பவர்கள். 

அது புரியாமல் நம் மக்கள் வெள்ளை சட்டை போட்டு, கொடி பிடிப்பவன் எல்லாம் கட்சிக்காரன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இந்த கட்சிக்காரர்கள் தன்னை தொண்டன் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அதற்கு கூட இவர்களுக்கு அர்த்தம் தெரியாது. இந்த தொண்டனுக்கு என்ன தெரியும்? தலையே சரியில்லாத போது, வால் எப்படி இருக்கும்? இதையெல்லாம் படிப்பறிவு இல்லாத மக்களிடம் ஏமாற்றிக் கொண்டிருக்கிற ஒரு கூட்டம் தான் இன்றைய அரசியல் கட்சியினர். 

அதேபோல் தான் இன்றைய பத்திரிகைகளும், செய்தியாளர்கள் அடையாள அட்டை வைத்திருப்பவர்களும், தன்னை பத்திரிகையாளன் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு அர்த்தம் தெரியாது. இவர்கள் எப்படி கட்சி அடையாள அட்டை வைத்துக் கொண்டு, தன்னை தொண்டன் என்று சொல்லிக் கொள்கிறார்களோ, அதே போல் தான் இவர்களும் தன்னை பத்திரிக்கையாளர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது இரண்டு போலிகளும் ஒரே மாதிரி தான். இவன் பத்திரிகை என்று சொல்கிறான். அவன் கட்சி என்று சொல்கிறான்.மேலும், 

தகுதி இல்லாத ஒரு கூட்டத்தை, இந்த தகுதியற்ற கூட்டம் மக்களிடம் முக்கிய செய்தி என்று போட்டோவையும், இவர்களுடைய பேச்சுகளையும் திணித்துக் கொண்டிருக்கிறது. அது பெரிய பத்திரிக்கையாக இருக்கட்டும், சிறிய பத்திரிக்கையாக இருக்கட்டும், இரண்டும் ஒன்றுதான். பத்திரிக்கை எதற்கு? அரசியல் கட்சி எதற்கு ?இதற்கு அர்த்தம் தெரியாமல், மக்களை ஏமாற்றுவதற்கு இது இரண்டும் தேவையில்லை .ஒருவன் அரசியலுக்கு எதற்கு வருகிறான்? ஏன் நாம் வருகிறோம்?எதற்கு வந்தோம்? என்று கூட தெரியாமல் இருப்பவனுக்கு இதுதான் அரசியல், இதுதான் கட்சி என்று இந்த பத்திரிகைகள் தவறாக மக்களிடம் இவர்களை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.மேலும்,  

இதற்கு சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை, நானே அனுபவித்த ஒரு நிகழ்வை, இங்கே அதற்கு ஒரு முன்னுதாரணமாக வைக்கிறேன்.காஞ்சிபுரம் மாவட்டம், வளத்தூர் என்ற ஒரு கிராமத்திற்கு நான் செல்கிறேன். அந்த கிராமத்தில் உள்ள காலணியில், அங்குள்ள இளைஞர்களிடம் நான் வழி கேட்டபோது, அவர்கள் தலைவர் அதோ இருக்கிறார் அவரை போய் கேளுங்கள் என்றார்கள். நானும் பைக்கை அவர் முன் நிறுத்தி, ஒரு குறிப்பிட்ட பெயர் சொல்லி, அந்த லேஅவுட் பிளாட் எங்கே? என்று கேட்டேன். 

அவர் கால் மேல், கால் போட்டு சேரில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நான் கேட்டது அந்த இடத்திற்கு,எப்படி போகலாம்? என்று தான் வழி தெரியாமல்  வழி தான் கேட்டேன். அவர் சொல்கிறார், நீ கேக்குற விதமே சரியில்லையே,. ஐயா,எப்படி கேட்க வேண்டும்? இவர் மிரட்டும் தொணியில் பேசுகிறார்.எனக்கு தெரியாமல் இந்த ஊரில் எதுவும் நடக்காது. நானும் பைக்கை விட்டு இறங்கவில்லை. ஐயா, நான் ஒரு பத்திரிக்கையாளன் என்று சொல்கிறேன். நீ எப்படி பேட்டி எடுப்பாய்? இவனை பேட்டி எடுப்பதற்கு, இவன் அவ்வளவு பெரிய ஆளா? என்று நான் நினைத்துக் கொண்டேன். இந்த கட்சிக்காரர்கள் எப்படி இருக்கிறார்கள்? ஊரில் அரசியல் தெரியாத முட்டாள்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும், போலி அரசியல் கட்சி கூட்டம் கட்சி பெயரை சொல்லிக்கொண்டு சண்டைக்கு மல்லு கட்டும் இவர்கள்தான் அரசியலுக்கு வந்துள்ள போலி கூட்டம்.

மேலும், இந்த ஆளுக்கு அந்த இடம் தெரியவில்லை.பிறகு பையனை கேட்கிறார். எத்தனைக்கும் இவருக்கு வயது கிட்டத்தட்ட 70 இருக்கும். இந்த வயதிலே இவன் இப்படி என்றால்! இன்னும் இளம் வயதில் எப்படி இருந்திருப்பான்? பையன் சொல்கிறான்.அது சேம்பர் பக்கம்தான் இருக்க வேண்டும் என்று சொன்னான். திரும்பிப் பார்த்தால் ஒரு ஜீப் நிற்கிறது, அதில் திமுக கொடி கட்டி இருக்கிறது . இவனெல்லாம் உழைத்து சம்பாதித்தால், இவ்வளவு திமிராக எவனும் பேச மாட்டான். உழைக்காமல் ஏமாற்றி சம்பாதித்துக் கொண்டிருக்கும் கூட்டம் தான் இன்றைய அரசியல் மற்றும் அரசியல் கட்சி, கூட்டம்.அதை விளம்பரம் செய்து கொண்டிருக்கும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் தான் இன்றைய முக்கிய கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சி கம்பெனிகள்.

இதற்கு தான் மத்திய,மாநில அரசின் செய்தி துறை தன்னுடைய அதிகாரத்தையும், பத்திரிகை சுதந்திரத்தையும், தவறாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது. இதை தவறு என்று பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசின் செய்தித்துறை உயர் அதிகாரிகளுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போது கூட தமிழக முதல்வர் ,ஆளுநர், தலைமைச் செயலாளர் ,செய்தித்துறை இயக்குனர், செய்தித் துறை செயலாளர் ஆகியோருக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பாக, இப் பிரச்சனைகளை வலியுறுத்தி, பதிவுத் தபால் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதுதான் இறுதி கட்ட தகவல்.மேலும், 

அரசியல் கட்சியினர் அல்லது அரசியல்வாதிகள் சட்டத்தை ஏமாற்றுவது போல பத்திரிகைகளும் (சர்குலேஷன்) சட்டத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறதா? இதற்கு மறைமுகமாக துணை போவதற்கு தான் முப்பது சதவீத கமிஷனா?

 தொடர்ந்து தகுதியற்ற பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் செய்தி துறை அதிகாரிகள் மீதுதான் மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பாகவும், சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பாகவும் வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்.அங்கே,இந்த பத்திரிகைகளுக்கு மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து கோடிக்கணக்கில் செய்தித் துறை அதிகாரிகள் எப்படி கொடுக்கிறார்கள் ?அதற்கு நீதிமன்றத்தில் விளக்கம் சொல்லட்டும்.மேலும், படிக்காத ,அரசியல் தெரியாத மக்களை

ஊரில் எந்த அளவுக்கு, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்?இவனெல்லாம் ஊருக்கு என்ன செய்திருப்பான்? என்பதை இவன் பேசுவதை வைத்தே நான் தெரிந்து கொண்டேன்.இந்த சம்பவம் ,எப்படி எல்லாம் அரசியல் தெரியாத மக்களிடம் தன்னை மிகப் பெரிய ஒரு சமூக போராளியாக, கட்சி தொண்டனாக,கற்பனையில் உலா வந்து கொண்டிருக்கும், இன்றைய அரசியல் கட்சி என்ற பெயரில் ரவுடிகள்,கிரிமினல்கள், சுயநலவாதிகள்,சமூக குற்றவாளிகள், மோசடி பேர்வழிகள், ஊழல்வாதிகள் இவர்களுக்கெல்லாம் புகலிடம் அரசியல் கட்சிகளா? 

மேலும் ,போலிகளின் அடையாளம் என்பதற்கு இது மிக சரியான ஒரு உதாரணம். அதுமட்டுமல்ல, அரசியல்வாதி என்று சொல்லிக் கொண்டு எப்படி எல்லாம் இருக்கிறார்கள்? போலி பத்திரிகைகளும், போலி பத்திரிகையாளர்களும், எப்படி இருக்கிறார்கள்? மக்களுக்கு இந்த உண்மைகள் இது புரியட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *