பிப்ரவரி 26, 2025 • Makkal Adhikaram

பூமியில் மனித வாழ்க்கை ஒரு உயர்வான பிறவி. எத்தனையோ ஜீவன்கள், உயிரினங்கள், விளங்கினங்கள், பிறக்கிறது. அவைகளும் அழிகிறது. ஆனால், மனிதப் பிறவி மட்டுமே இறைவனை அடைவதற்கும், இறையருளை பெறுவதற்கும், இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு பிறவி.
இந்த பிறவியில் ஒவ்வொரு மனிதனின் நல்லது, கெட்டது, பாவ, புண்ணியம் அனைத்தின் கர்மாவும், பல ஜென்மங்களில் செய்த நல்வினை, தீவினை அதன் பொருட்டு பிறவிகள் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவன் உயர்குடியில் பிறப்பும், தாழ்குடியில் பிறப்பும், அவரவர் செய்த கர்ம வினையன் பிரதிபலிப்பே! இதையெல்லாம் இயக்கக்கூடிய பரம்பொருள், நம்மை இறையருளை பெறுவதற்காக, இறைவனிடம் பக்தி மார்க்கத்தில், சரணாகதி என்ற ஒரு தத்துவத்தை நமது சித்தர்கள், மகான்கள் ,முனிவர்கள்,ரிஷிகள் நமக்காக வெளிப்படையாக கொடுத்திருக்கிறார்கள். இதுதான் இந்து மதத்தின் மிகப்பெரிய சிறப்பு. இதுதான் இந்து மதத்தின் மிகப்பெரிய பொக்கிஷம்.

இங்கே ஆண்,பெண் என்ற பேதம் கிடையாது .இறைவனை எல்லோரும் வணங்கலாம். எல்லோரும் இறையருளைப் பெறலாம். ஆனால், மற்ற மதத்தில் அந்த நிலை இல்லை. தெய்வத்தை பூஜைக்காமல், வணங்காமல் நினைக்காமல், போற்றாமல் இறை அருளைப் பெற முடியாது .அதற்கும் ஒரு விதி இருக்க வேண்டும். அவன் அருள் இன்றி, அவனை வணங்க முடியாது. அப்படிப்பட்ட பரம்பொருள், மக்களுக்கு அருள் பாலிக்கக் கூடிய ஒரு நாள் ,இந்த மகா சிவராத்திரி.
இந்த மகா சிவராத்திரியில் கோடான கோடி மக்கள் சிவனை வழிபடுகிறார்கள். சிவன் பேராற்றல் யாராலும் கணிக்க முடியாது .உணர முடியாது. அப்படிப்பட்ட பேராற்றல், பரம்பொருளின் மகா சிவராத்திரியில் சிவனை, வணங்கி ஒவ்வொரு ஜீவனும், இறைவனை அடையும் ஓர் உன்னத நிலைதான், இந்து மதத்தின் தனி சிறப்பு. இங்கே ஜீவாத்மா, பரமாத்மாவோடு கலப்பது தான் மோட்சத்தின் முக்கிய பிறப்பின் ரகசியம். இதற்கு ஜாதி, மதம், எதுவும் தடை அல்ல. சம்பிரதாயங்கள், சடங்குகள் இதை ஒருபோதும் கட்டுப்படுத்தாது.

இறையாற்றல் தனித்துவமானது. இறையாற்றல் இந்த பூமியை பாதுகாக்கும் சக்தி மயமானது. அப்படிப்பட்ட இறையாற்றல், இந்த மகா சிவராத்திரியில் பக்தியுடன் சிவனை வணங்கும்போது, அது நமக்கே உணர வைக்கும். இது தெய்வத்தின் ஆற்றல். இந்த ஆற்றல் விஞ்ஞானத்தின் மறுபக்கமாக ஈத்தர் எனப்படும் சக்திதான், இந்த உலகத்தை இயக்குகிறது. இந்த ஈத்தர் உலகம் முழுவதும் அண்டவெளி முழுவதும் நிறைந்தது.
இது பூமியை நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்து கொண்டே இருக்கிறது. பூமி சூரியனை நிலவட்ட பாதையில் சுற்றி வருகிறது. இதில் இரண்டு நீள் வட்டப் பாதைகள் உள்ளது. ஒன்று சிறிய நீள்வட்டப் பாதை மற்றொன்று பெரிய நீள்வட்ட பாதை. பூமி பெரிய நீள்வட்டப் பாதையில் இருந்து, சிறிய நீள் வட்டப் பாதைக்கு மாறும் நேரம் தான் இந்த மகா சிவராத்திரி. மேலும், ஈத்தர் என்ற சக்தி எப்பொழுதும் பூமியை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது. வருடத்தில் ஒவ்வொரு மாதமும், சிவராத்திரி வரும், ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரியில் ஈத்தர் சக்தி சற்று அதிகமாக இருக்கும் .
ஆனால், வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவராத்திரி மட்டும் அளவுக்கு அதிகமாக சக்தி இருக்கும்.இப்படி பல உண்மை ரகசியங்களை நமக்கு முன்னால் வாழ்ந்த மகான்கள் இதை சொல்லிவிட்டு, எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். இது வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு தனி சிறப்பு, இந்த இந்து மதத்திற்கு உண்டு. அங்கே எல்லாம் ஒரு மனிதன் பிறந்து, அவனால் தோற்றுவிக்க பட்ட மதம் தான் கிருத்துவமும், இஸ்லாமும், அது அவர்கள் இறைத்தூதர் என்று அவரை வழிபடுகிறார்கள்.

ஆனால், இந்து மதத்தில் மட்டும் இறைவனே நேரடியாக பிறந்து, வாழ்ந்து இந்த மக்களுக்காக வழிகாட்டிய ஒரு மதம் இந்து மதம் .இது தான் சனாதனம். இதை யாராலும் அழிக்க முடியாது. அழிக்க நினைத்தால், அவர்கள் அழிந்து போவார்கள் .மேலும், இங்கே விஞ்ஞானமும், மெய்ஞானமும் ஒரு சேர வாழ்ந்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சிறப்புமிக்க இந்து மதத்தின் பெருமை, வேறு எந்த மதத்திற்கும் கிடையாது. அப்படி சொன்னால் அது விளம்பரத்திற்காக தான் இருக்குமே தவிர, உண்மை அதுவல்ல.
அதனால்தான் எத்தனையோ இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் ,இந்து மதத்தில் சேர்ந்திருக்கிறார்கள் .அவர்கள் ஒன்றும் படிப்பறிவு இல்லாதவர்கள் அல்ல, நன்கு படித்தவர்கள், அந்த மதத்தைப் பற்றி உணர்ந்தவர்கள். அப்படிப்பட்ட ஆண், பெண் சேர்ந்து தான் இந்த மதத்தில் இணைந்திருக்கிறார்கள்.

எனவே, இந்த மகா சிவராத்திரியில் முழு சக்தியை ஒவ்வொரு ஜீவாத்மாவும் பெற வேண்டும் .அதற்கு அவர்களுடைய முயற்சி, பக்தியால் மட்டுமே அது கிடைக்கும். அதனால், இந்த மகா சிவராத்திரி அன்று விரதம் இருந்து, தூங்காமல் முதுகை நேராக வைத்து, விழித்திருந்து தியானம் செய்வது,இறை சிந்தனையில் ஈடுபட்டு, இறைவன் நாமங்களை சொல்லி வழிபடுவது, மிக, மிக சிறப்பு.அவ்வாறு வழிபடும் போது,

ஈத்தர் சக்தி உச்சந்தலையில் உள்ள சகஸ்ர சக்கரத்தின் வழியாக, ஆனந்த சுரப்பி, ஆனந்த மூளையை அடைந்து, பல விதமான நல்ல ஹார்மோன்களை சுரக்கும். இந்த நேரத்தில் நமக்கு, நாமே நம்மை ஆசிர்வதித்துக்கொள்ளும் பொழுது, நமது டி .என். ஏ வில் இருக்கும் கெட்ட பதிவுகளை, அதாவது (கர்மா )அழிக்கும் வல்லமை உள்ளது.
அதாவது இரவு 9 மணி முதல் 2 மணி வரை உள்ள காலகட்டம் தான் மிகவும் சக்தி மிக்க நேரம். இந்த மகா சிவராத்திரியில் பரம்பொருள் மகா சிவனை வணங்கி, அனைவரும் சிவனின் அருள் பெறுவோமாக.