பிப்ரவரி 15, 2025 • Makkal Adhikaram
மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறை ! பொதுமக்களுக்கு சேவை செய்ய தானே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு.

சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவு தமிழக அரசுக்கும், காவல்துறை டிஜிபிக்கும், பிறப்பித்துள்ளது. இது உண்மையிலே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உத்தரவு தான். அரசு ஊழியர்கள் மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு ,சமூக நலனுக்கும், பொது மக்களின் நலனுக்கும், சேவை செய்ய வேண்டுமே தவிர, அவர்கள் தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டப்படி காவல்துறை சமூக நலனை முக்கியத்துவமாக கொண்டு, பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் இதனுடைய முக்கிய சாராம்சம். இது உண்மையிலே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், சென்னை உயர்நீதிமன்றம் இதே போல், பத்திரிக்கை துறையில் மக்களின் வரிப்பணத்தில் மத்திய- மாநில அரசின் செய்தித்துறை பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்களை சமூக நோக்கத்திற்கான பத்திரிகைகளுக்கு மட்டும்தான் சலுகை, விளம்பரங்கள் அளிக்க வேண்டும்.

இந்த சட்டமும் ,அந்த சட்டமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அதாவது மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்களை அனுபவித்துக் கொண்டு தனியார் அரசியல் கட்சி பத்திரிகைகளுக்கும், வியாபார நோக்கம் கொண்ட பல செய்திகளை பத்திரிக்கையில் போட்டு, இதுவும் சமூக நோக்கம் தான் என்று சொல்லி பத்திரிக்கை துறையை முட்டாளாக்கிக் கொண்டு, மக்களையும் முட்டாளாக்கிக் கொண்டு, பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் இந்த கார்ப்பரேட் பத்திரிக்கைகள், கமிஷனாக செய்துத்துறை அதிகாரிகளுக்கு, ஏஜென்ட்கள் மூலம் யாருக்கெல்லாம் எவ்வளவு பர்சன்டேஜ்? என்பது அந்த ஏஜெண்டுகளுக்கு தான் தெரியும். இந்த பர்சன்டேஜ் கொடுப்பதால்! சமூக நலனுக்கான பத்திரிகைகளுக்கு எந்த சலுகை, விளம்பரங்களும் கொடுப்பதில்லை. இவர்களால் பர்சன்டேஜ் கொடுக்க முடியாது. மேலும்,

பத்திரிக்கை துறை சமூக நன்மைக்கானது. இங்கே ஏஜென்சிகள் மூலம் எதற்காக விளம்பரங்கள் கொடுக்கிறார்கள்? கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இங்கே பத்திரிக்கை என்பதை செய்தித் துறை ஒவ்வொரு பத்திரிகையும், அதன் தரத்தின் அடிப்படையில், செய்தியின் உண்மைத் தன்மை,மற்றும் அதன் சமூக நோக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மேற்படி தகுதியின் அடிப்படையில் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டும் .
ஆனால், செய்தித்துறை அரசின் கொள்கை முடிவில் சலுகை, விளம்பரங்களை கொடுத்து வருகிறது. அந்தக் கொள்கை முடிவு தனக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு மட்டுமே கொள்கை முடிவாக செயல்படுத்தி வருகிறது. இதில் தினசரி என்ற பெயரில் அரசியல் கட்சி பத்திரிக்கை மற்றும் அதன் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய பத்திரிகைகளுக்கும், வியாபார நோக்கம் கொண்ட பத்திரிகைகளுக்கும், நிருபர்கள் பஸ் பாஸ் உள்ளிட்ட சலுகைகளும், விளம்பரங்களும் கொடுத்து வருகிறது. இது ஒரு பக்கம் மறைமுக ஊழலுக்கு சப்போர்ட் செய்வதால், இந்த சலுகை விளம்பரங்கள் மத்திய மாநில அரசின் செய்தித்துறை கொடுக்கிறதா?மேலும்,

இது நாள் வரை ,அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பும், மக்களுக்கும்,சமூக நன்மைக்கும் இதன் பகயன்கள் மிக மிகக் குறைவு. விளம்பரங்கள் இருந்தால் சர்குலேஷன் என்பது பெரிய காரியம் அல்ல.மேலும், கார்ப்பரேட் பத்திரிகைகள் கமிஷனை கொடுத்து, இந்த விளம்பரங்களை ஏஜென்சிகள் மூலம் பெற்றுக் கொள்கிறார்கள். செய்தித் துறை விளம்பரங்களை பத்திரிகைகளுக்கு நேரடியாக கொடுக்காமல், ஏஜென்சிகள் மூலம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? எதற்காக ஏஜென்சிகளுக்கு இந்த விளம்பரங்களை கொடுக்கிறார்கள்? இது வியாபார நோக்கமா? அல்லது சமூக நோக்கமா?
மேலும், இந்த ஏஜென்சிகள் சமூக நோக்கத்தின் அடிப்படையில் விளம்பரங்களை கொடுப்பார்களா ? அல்லது வியாபாரம் நோக்கம் உள்ள பத்திரிகைகளுக்கு கொடுப்பார்களா? அல்லது இவர்கள் யாரையெல்லாம் கை காட்டுகிறார்களோ, அவர்களுக்கு இந்த ஏஜென்சிகள் விளம்பரங்களை கொடுப்பார்களா?யாருக்கு? எதன் அடிப்படையில் இவர்கள் கொடுக்கிறார்கள்? மேலும், இந்த உண்மைகளை செய்து துறைக்கு பல ஆண்டுகளாக மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் தெரிவித்து வருகிறேன்.
ஆனால், ஒரு சில செய்து துறை இயக்குனர்கள் மட்டும் இந்த உண்மையை புரிந்து கொண்டு, நீங்கள் கேட்பது நியாயம் தான் என்று முன்னாள் செய்தித்துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன் என்னிடம் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போதுள்ள இயக்குனர் வைத்தியநாதன் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்று சொல்லுங்கள். நான் கண்டிப்பாக செய்கிறேன். அவ்வளவுதான். பிறகு இதற்கு ஜி.ஓ.(G.O) போட வேண்டும். பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் இதை கொண்டு வர வேண்டும். எப்படி கொண்டு வருவார்கள்?

கார்ப்பரேட் பத்திரிகை நிர்வாகிகளும், செய்தியாளர்களும், முக்கிய நிர்வாகிகளாக உறுப்பினர்களாக இருந்தால், இந்த சமூக நலன் பத்திரிகைகளுக்கு எப்படி? இவர்கள் சலுகை விளம்பரங்கள் கொடுப்பார்கள்? நான் கேட்பது எந்த பத்திரிக்கையாக இருந்தாலும், அது கார்ப்பரேட் ஆக இருக்கட்டும், சமூக நலன் பத்திரிக்கையாக இருக்கட்டும், சாமானியர்கள் பத்திரிகையாக இருக்கட்டும், தரத்தின் தகுதியின் அடிப்படையில் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும். இதுதான் நியாயமானது.
இதை சென்னை உயர்நீதிமன்றமும், இந்த உண்மைகளை பரிசீலனை செய்து காவல்துறைக்கு எப்படி உத்தரவு வழங்கினீர்களோ, அதே போல் சமூக நோக்கத்தின் அடிப்படையில் இந்த பத்திரிகைகள் இருக்க வேண்டும் .அதன் உயர்வுக்கு, சமூக நன்மைக்கு இருக்க வேண்டிய பத்திரிகைகளை புறந்தள்ளுகின்ற தமிழக அரசின் கொள்கை முடிவும், சர்குலேஷன் சட்டமும் இதற்கு எதிராக இருக்கிறது. எனவே, சென்னை உயர்நீதிமன்றம் இந்த பிரச்சனையில் முக்கிய கவனம் செலுத்தி, இந்த பத்திரிக்கை துறையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய அவல நிலையை, சமூக நன்மைக்காக, இதன் ஓட்டைகளை கலைந்து, அரசியல் அதிகாரத்தால்! பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கி விட்டார்கள். அதையும் காப்பாற்றி, சமூக நலனுக்காக, காலத்திற்கு ஏற்ற இந்த சர்குலேஷன் சட்டத்தை இணையதளத்தில் கொண்டு வர வேண்டும்.

அந்த சர்குலேஷன் இணையதள பத்திரிகைகளுக்கு கொண்டு வந்தாலும், அது சமூக நோக்கத்திற்கான செய்திகளுக்கு மட்டும் தான் சலுகை, விளம்பரங்களாக செய்தித் துறையின் விளம்பரங்கள் இருக்க வேண்டுமே ஒழிய, வியாபார நோக்கம் கொண்ட பத்திரிகைகளுக்கும், அரசியல் கட்சியை சார்ந்த பத்திரிகைகளுக்கும், சினிமா செய்திகளை போட்டு சர்குலேஷன் காட்டி ஏமாற்றும் பத்திரிகைகளுக்கும், செய்தித் துறையின் விளம்பரங்கள் நிறுத்தினால் தான், கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணம் வீணடிப்பது தவிர்க்கப்படும் .
மேலும், அரசியல் தலையீட்டால் அதன் கொள்கை முடிவாக இந்த சலுகை, விளம்பரங்கள் பத்திரிகைகளுக்கு இருக்கக் கூடாது. தவிர, எப்படி காவல்துறை மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறார்களோ, அதே போல் மக்களின் வரிப்பணத்தில் இந்த பத்திரிகைகள் சலுகை, விளம்பரங்களை பெற்றுக் கொண்டு, தனியார் அரசியல் கட்சிக்கும், அவர்களை விளம்பரப்படுத்தவும், அவர்களை நல்லவர்களாக மக்களிடம் ஊக்கி வைக்கவும், பத்திரிக்கை நடத்திக் கொண்டு ,50 ஆண்டு காலத்திற்கு மேலாக பத்திரிக்கை துறையில் பல பத்திரிகைகள் ஒவ்வொன்றும் சுமார் நூற்றுக்கணக்கான கோடிகளை விளம்பரங்களாக இது நாள் வரை, இந்த செய்தி துறையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இது சமூக நலனுக்கும், பொது மக்களுக்கும், இதுவரை பல லட்சம் கோடிகள் அரசுக்கு இழப்பு, மக்களுக்கு அதன் நன்மைகள் மிக, மிக குறைவு. இதைப் பற்றி நீதிமன்ற குழு கூட அமைத்து விசாரணை செய்தால், உண்மை நிச்சயம் நீதிமன்றத்திற்கு தெரிய வரும்.

இது பற்றி மக்கள் அதிகாரம் தொடர்ந்து இந்த செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், செய்தித் துறை அதிகாரிகள் இதைப்பற்றி அலட்சியம் செய்து வருகிறார்கள் .பத்திரிக்கை என்பது மக்களுக்கும், சமூக நலனுக்கும் முக்கியத்துவமாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் கட்சிகளுக்காக பத்திரிக்கை நடத்துபவர்கள், வியாபார நலனுக்காக பத்திரிகை நடத்துபவர்கள், மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்களை பயன்படுத்தக் கூடாது. அதற்கு செய்தி துறை அதிகாரிகள் முக்கியத்துவம் தரக்கூடாது .
அவர்கள் சொந்த பணத்தில் நடத்திக் கொள்ளட்டும் தவறில்லை .ஆனால், மக்களின் வரிப்பணத்தில் சர்குலேஷன் காட்டிக்கொண்டு, பெரிய பத்திரிக்கை என்று மக்களையும், பத்திரிக்கை துறையும் ஏமாற்ற கூடாது. இதற்கு உயர் நீதிமன்றம் இப் பிரச்சனையை சூமோட்ட வழக்காக கூட, எடுத்து விசாரித்தால்! இன்று சமூக நன்மைக்கான பத்திரிகைகளுக்கு நாட்டில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்த முடியும் .

அதை சென்னை உயர்நீதிமன்றம் எங்களுடைய தாழ்மையான வேண்டுகோளாக சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும், மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும் வைக்கின்ற முக்கிய கோரிக்கை.