செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram
சென்னை ஐ சி எஃப் எல் அப்ரண்டீஸ் ஆக பயிற்சியை முடித்து 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், தெற்கு ரயில்வே அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்பதை வலியுறுத்தி சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயிற்சியாளர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ரயில்வே நிர்வாகத்தில் ஊழல் நடப்பதாகவும் அதை சிபிஐ விசாரணையும் ,(ED) அமலாக்கத்துறை விசாரணையும், இதில் வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும்,
இது மத்திய அரசு செய்த வேலையா? அல்லது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த வேலை வாய்ப்புகளை எல்லாம் காண்ட்ராக்ட் போட்ட மத்திய அரசின் G O வா ? மேலும், தெற்கு ரயில்வே ஒட்டுமொத்தமும், டிக்கட் கவுண்டர்களையும், டிக்கெட் பரிசோதனைகளையும் பா சிதம்பரம் காண்ட்ராக்ட் எடுத்து விட்டார்.
அதுபோல ஐ சி எஃப் இல் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்க முடியாமல், இருக்கிறதா? மேலும், பயிற்சி முடித்தவர்களுக்கு இதை நம்பி இருப்பார்கள். அதனால், மத்திய அரசு இவர்களுக்கு வேலை வழங்குவது தான் நியாயமானது. தவிர, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஜீவோ வாக இருந்தாலும் அதை ரத்து செய்ய வேண்டும்.
அப்படி இல்லையென்றால், உச்சநீதிமன்றத்தில் ஆவது அதற்கு ரத்து செய்து படித்த இளைஞர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது ஐ சி எஃப் பயிற்சியாளர்கள் கோரிக்கை .