செப்டம்பர் 26, 2024 • Makkal Adhikaram
ஈரோடு மாவட்டம்:
அந்தியூர் அடுத்த பர்கூர், சத்தியமங்கலம், கடம்பூர் மலைப்பகு-தியில், 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலையாளி இன மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.
பழங்குடியின இனத்தை சேர்ந்த இவர்க-ளுக்கு, இதுவரை ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. ஆனால், இதே இனத்தை சேர்ந்த சேலம், நாமக்கல் மலைப்பகுதிகளில் வசிக்கும் மலையாளி இன மக்களுக்கு, பழங்குடியின சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர், பல-முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்க-வில்லை.
இந்நிலையில் நேற்று, பர்கூர் மலைப்பகுதியைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட மலையாளி இன மக்கள் பர்கூர் மலைப்பகுதியில் வசிக்கும், 750 மலையாளி இன குடும்பங்கள் சார்பாக மனுக்களை தபால் மூலம், அந்தியூர் தபால் நிலையத்தில் இருந்து, பிரதமர், தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து அவர்கள் கூறு-கையில், ‘தங்களது ரத்தசொந்தங்கள் நாமக்கல், சேலம் மாவட்-டங்களில் வசித்து வருகின்றனர்., அவர்களுக்கு பழங்குடியின ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு வழங்கப்-படுவதில்லை. இதனால் கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவை-களில் அரசின் சலுகைகள் கிடைக்கவில்லை. எனவே பிரதமர், முதல்வருக்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம்’ என்றனர்.